திருமாவளவன் சென்ற கார் மோதிய வழக்கறிஞர் மீதே தாக்குதல் நடத்திய அவரது கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தல்
சென்னை பாரிமுனை உயர்நீதிமன்றத்தின் வளாகம் அருகில் வி.சி.கட்சி தலைவரான
திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், வண்டியில் சென்ற வழக்கறிஞர், திருமாவளவன் கார் ஓட்டுநருடன் இந்த தவறு குறித்து பேசியதால் அவருடன் வந்த ஒரு கும்பல் திருப்பித் தாக்குதல் நடத்தும் காணொளிக் காட்சி வெளியாகியுள்ளது. சென்னை உயர் உயர் நீதி மன்ற வழக்கறிஞர் மு.ராஜீவ் காந்தி MA. BL இரு சக்கர வாகனம் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கார் இடித்துள்ளது
வழக்கறிஞர் திரும்பிப் பார்த்து ஓட்டுனரிடம் கவனமாக வரக் கூடாதா? எனக் கேட்டுள்ளார் அதற்கு அவரது கட்சியை சேர்ந்த சில நபர்கள் மூர்க்கத்தனமாக அடித்துள்ளார்கள் அவர் சென்ற இரு சக்கர வாகனத்தை அடித்துத் தள்ளி நொறுக்கியுள்ளனர் அந்த வழக்கறிஞர் பாதுகாப்பு வேண்டி தமிழ் நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் அலுவலகம் உள்ளே செல்கிறார் அங்கேயும் உள்ளே புகுந்த விசிக நபர்கள் உள்ளே புகுந்து வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை கொடூரமாகத் தாக்கி உள்ளார்கள் தற்போது மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வருகிறார் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி அவர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆப்பனூர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றும் அவரது தந்தை முத்து ராமலிங்கம் என்றும் அவர் எம்ஜிஆருக்கு உதவியாளராக இருந்தவர் என்றும் சென்னை இராமாவரம் தோட்டத்தில் வசித்து வருவதாகவும் தகவல் வருகிறது. வழக்கறிஞர் ராஜீவ் காந்தி சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞரை கொடூரமாக தாக்கிய விசிக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முக்குலத்தோர் சட்டப் பாதுகாப்பு மையம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது தமிழ் நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் அலுவலகம் உள்ளே புகுந்து வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நபர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலகட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறனர். அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்ற நிலையில், ஆர்ப்பாட்டம் முடிந்து, அவரது காரில் புறப்பட்டுள்ளார்.
அப்போது சென்னை பாரிமுனையில், காரில் சென்றுகொண்டிருக்கும் போது வழக்கறிஞரின் பைக்கில் மோதியுள்ளது. ஆத்திரமடைந்தவர், திருமாவளவன் கார் ஓட்டுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால், விசிகவினர், வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். உடன் காவலர் ஒருவரும் சேர்த்து நடந்த இந்த தாக்குதலில் சிலர் பைக்கை சாலையில் தள்ளிவிட்ட நிலையில், இதனால் பயந்த வழக்கறிஞர் சாலையில் ஓடியபோது அவரை விடாமல் துரத்திச் சன்று வி.சி.க.வினர் தாக்கியுள்ளனர்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த காணொளிக் காட்சிகள் பதிவு சமூக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் வி.சி.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். தன் மீதான தாக்குதல் குறித்து அவர் பார் கவுன்சிலில் வாய்வழிப் புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பைக் மீது கார் மோதிய விபத்தில், வழக்கறிஞர் மீது வி.சி.க.வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் வழக்கறிஞர் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அராஜகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் கூட்டணி கட்சியினராக உள்ள காரணத்தால், சென்னையின் இதயமாம், பாரிமுனையில் நடைபெற்ற இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறீர்களா? நான் அனைவருக்கும் முதல்வர் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறினீர்களே? இப்போது இப்படிப்பட்ட ரௌடி கும்பல் ஒரு தனிமனிதனை தாக்கும் போது நடவடிக்கை எடுக்க இதயம் இல்லாது மௌனம் காக்கிறீர்களே? நியாயமா? இது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு வழக்கறிஞரை அடிப்பாங்களாம்.
பின் வழக்கறிஞரின் இருசக்கர வாகனத்தை தள்ளி உடைப்பார்களாம். பார்ப்போம். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை என்ன செய்கிறதென்று? என பலரும் பேசும் நிலையில்
மனசாட்சி உள்ள, மனித உரிமை அமைப்புகள் யார் தான் வழக்குத் தொடுக்கிறார்கள் எனப் பார்ப்போம்.
















கருத்துகள்