சமத்துவம் ஜனநாயகம் மனிதநேயம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அதிகம் நிறைந்த தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியிலுள்ள,
அரசு மேல்நிலைப் பள்ளியில் இப்படி சொகுசுக் கழிப்பறையை பள்ளி மேம்பாட்டு மானியத்தில் கட்டி முடித்திருக்கிறார்கள். திட்டம் மதிப்பீடு, ரூபாய் 34 லட்சமாம்.
ஆடுதுறை பேரூராட்சி தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி ம. க..ஸ்டாலின் தான் நேற்று இதைத் திறந்து வைத்திருக்கிறார்.
இதுபோன்ற 'தரமான' வடிவமைப்பை சித்தாள் போல உள்ள சின்ன மேஸ்திரி கூட செய்து தர வாய்ப்பில்லை. அரசுப்பணி என்று வரும் போது எப்படியும் 'சால்வென்சி' சான்றுடன் கூடிய ஒரு ஒப்பந்ததாரர் தான் இதைச் செய்து கொடுத்திருப்பார். அப்போதும் அதற்கு ஒரு பொறியாளர், தேவைப்படுவாரே.
அரசுப்பள்ளி என்பதால் இப்படிப் பொறுப்பின்றி செயல்படுகிறார்களா என்றொரு கேள்வி மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.
இதற்கு ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவர் பொறுப்பா? பள்ளியின் நிர்வாகம் பொறுப்பா? என்பது தெரியவில்லை. புரியவில்லை. மீண்டும் முதலிலிருந்து இதைச் சரி செய்தால் அதில் விழும் கூடுதல் நிதி ஆதாரத்திற்கு யார் பொறுப்பு.
என்பதே இப்போது கேள்வி.
திறந்த வெளிக் கழிவறை கூட இதை விட ஒளிவு மறைவானது.
இதை வடிவமைத்த பொறியாளருக்கும், நிர்வாக அனுமதி கொடுத்த துறைத் தலைமைக்கும், பணியை லஞ்ச லாவண்யம் இல்லாமல் செவ்வனே செய்து முடித்த ஒப்பந்ததாரருக்கும் இத்தகைய 'விஞ்ஞானப்பூர்வ' புத்தி இருந்திருப்பது தான் அப் பகுதி மக்களை வியக்க வைக்கிறது.
தடுப்பு இல்லாமல் கட்டிய கழிப்பிடம்
அரசு பள்ளியில், 34 லட்சத்தில் கட் டப்பட்ட கழிவறையில் தடுப்புகள் இல்லாததால் தான் அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ஆடுதுறை பேரூராட்சி யில் உள்ள அரசு மேல்நி லைப்பள்ளியில், பள்ளி மேம்பாட்டு மானியத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில், புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது.நேற்று
புதிதாக திறக்கப்பட்டது கழிவறையில், சிறுநீர் கழிக்கும் பேஷன் தடுப் புகள் இன்றி, வரிசையாக இருக்க அதிர்ச்சி அடைந்தனர். இந்த கட்டமைப்பு சர்ச்சையும், சலசலப்பையும் உண் டாக்கியுள்ளது.









கருத்துகள்