கென்யா நாட்டின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா, 80 வது வயதில்
ஏராளமான நோய்களுடன் சிகிச்சை எடுப்பதற்காக கேரளா மாநிலம் கொச்சினுக்கு வந்தவர் காலை நடைப்பயிற்சியின் போது மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
தவறான செய்திகள் அவசர நிமித்தம் பலரும் விசாரணை நடத்தாமல் வெளியிடும் அவலம் சமீப காலமாக அதிகரிக்கக் காரணம் பத்திரிகை தொடர்பில்லாத செய்தியாளர்கள் தான்
"ஆயுர்வேத சிகிச்சை எடுத்தாராம் ..'' உண்மை இல்லாத செய்தி வர பல அறிவற்ற செய்தியாளர்கள் தான் காரணம். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்தவர் ரெய்லா ஒடிங்கா, 80. உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒடிங்கா, ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கேரளாவின் கொச்சின் மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கூத்தாட்டுக்குளம் வந்திருந்தார்.
நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் நடை ப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடல்நிலை குறித்து பரி சோதித்தபோது மாரடைப்பால் ஒடிங்கா மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்து ஒடிங்காவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் :என் அன்பு நண்பரும், கென்யாவின் முன்னாள் பிரதமருமான ஒடிங்காவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. உயர்ந்த அரசியல்வாதியாகவும் நம் நாட்டின் நண்பருமாகத் திகழ்ந்தார். குஜராத் முதல்வராக இருந்தது முதல் ஒடிங்காவுடன் நான் நெருக்கமாகப் பழகி வருகிறேன்.
அவருக்கு இந்தியாவின் மீது அதீத பாசம் இருந்தது. நம் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தை அவர் வெகுவாகவே பாராட்டினார். அந்த மருத்துவம் அவரது மகளின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதை அவர் உணர்ந்தார். இந்தத் துயரமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கென்ய நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
என அதில் கூறப்பட்டுள்ளது.







கருத்துகள்