தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரான இருமல் மருந்து உட்கொண்ட மத்திய பிரதேச 11 குழந்தைகள் பலியான கொடூரம்.. ஸ்ரீ சென் பார்மா மீது நடவடிக்கை.
இருமல் மருந்து குறிப்பாக மருந்தின் மாதிரிகளில் 48.6 சதவீத டைஎதிலீன் கிளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டதாக வேதியியல் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்தனர். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். இவை பெரும்பாலும் பெயிண்ட், மை போன்ற பொருட்கள் தயாரிக்க இந்த வேதிப்பொருள்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இவை சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் எதிர் விளைவாகும். மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 வயது முதல் 6 வயது வரை உள்ள மொத்தம் 11 குழந்தைகள் கடந்த 15 நாட்களில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறப்பில் சந்தேகம் ஏற்ப்பட்ட மருத்துவர்கள் உடனடியாக குழந்தைகளின் உடலைகளை பிரேதப்பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். அந்த பிரேதப்பரிசோதனை அறிக்கையில் குழந்தைகள் சீறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் ரத்த மாதிரிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப் மருந்து உள்ளிட்ட சில மருந்து மாதிரிகள் மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ஆய்விற்காக சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அதிர்ச்சிகாரமான தகவல் வெளியானது. குழந்தைகளின் சிறுநீரகத் திசுக்களில் டை எத்திலீன் கிளைசால் என்ற வேதிப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.குறிப்பாக மருந்தின் மாதிரிகளில் 48.6 சதவீத டைஎதிலீன் கிளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு மத்தியப் பிரதேசம் , மற்றும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளா அரசும் தடை விதித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இறந்த 11 குழந்தைகளும் சிந்த்வாராவின் பராசியா பகுதியை சேர்ந்தவர்கள்.
இப்பகுதியில் 2.8 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள் அவர்களுள் சுமார் 25,000 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் பாரசியா சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷுபம் குமார் யாதவ் கூறுகிறார்.
அதில், "பலவித சாத்தியமான காரணங்கள் குறித்து விசாரித்துள்ளோம். அப்பகுதியிலிருந்து தண்ணீர் மாதிரிகளை எடுத்துள்ளோம், கொசுக்கள் மற்றும் எலிகளிலிருந்து நோய் பரவியதா என்பதைப் பரிசோதித்தோம். அவற்றில் எந்தப் பிரச்னையும் இல்லை என முடிவுகள் வந்துள்ளன, சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையுடன் இறந்த குழந்தைகளின் முந்தைய மருத்துவப் பதிவுகள் ஆராயப்பட்டதில்தான் அந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது வெளி வந்தது பல்வேறு பகுதிகளிலிருந்து மருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும், அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்துள்ளதாகவும் அவர் தகவல். அதன் அடிப்படையில், குழந்தைகளுக்கு சிறுநீரகம் செயலிழந்தது எப்படி என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் காரணத்தைக் கண்டறியும் என்றார் அவர்.
பரிசோதனை முடியவில்லை என்று மத்திய பிரதேச அரசு 10 தினங்களாக கூறிவந்த நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தில், விதிமுறைகளை மீறி நச்சுத் தன்மை கொண்ட ரசாயனமான டைஎத்திலீன் கிளைக்கால் இருப்பதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒரு நாளைக்குள் உறுதிப்படுத்தியது.
சிந்த்வாராவைச் சேர்ந்த மற்றொரு குழந்தையின் உறவினர் பேசுகையில், "விஷத்தன்மை வாய்ந்த, ஆபத்தான மருந்து எப்படி சந்தையில் விற்கப்படுகிறது? இதை மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க இயலவில்லை? ஒரு நாளைக்குள் தமிழ்நாடு அரசு இதைக் கண்டுபிடித்துள்ளது. குழந்தைகளைக் கொல்லும் மருந்துகளை விற்பனை செய்வது யார் என்பது மத்தியப் பிரதேச அரசு விசாரிக்கவில்லையா?" என்கிறார். 2023-ஆம் ஆண்டு இந்தியாவின் சுகாதாரச் சேவைகள் பொது இயக்குநர், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரபலமான இருமல் மருந்தை தயாரிப்பதற்கு தடை செய்தது.
இந்த மருந்தின் தயாரிப்பில் உள்ள குளோர்ஃபெனிரமைன் மாலேட் (chlorpheniramine maleate) மற்றும் ஃபெனைல்ஃபெரின் (phenylephrine) ஆகியவற்றுக்கு 2015-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை இருமல் மற்றும் சளி மருந்துகளில் முக்கியமான மூலப்பொருட்களாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
இதையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 2022-ஆம் ஆண்டில் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்ததால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.
எனினும், இந்த மருந்துகளை தயாரிப்பவர்கள் தாங்கள் தவறிழைக்கவில்லை என மறுத்துள்ளனர், பரிந்துரைக்கப்பட்ட அளவில் வழங்கும் போது தங்களின் மருந்துகள் பாதுகாப்பானவை எனவும் கூறுகின்றனர்.மத்தியப் பிரதேசத்தில் மருந்துகளின் தரம் குறித்து முன்பு கடுமையான கேள்விகள் எழுந்தன.
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஊசிகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால், மாநிலம் முழுவதும் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தின் பொது சுகாதார சேவைகள் கழகம், இந்த மருந்துகளை தரமற்றவை என வகைப்படுத்தியுள்ளது, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பு குறித்து பல்வேறு தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
பொது சுகாதார நிபுணர் அமுல்யா நிதி கூறுகையில், "மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் மரணத்தை ஏற்படுத்தாது. எனவே, சிந்த்வாராவில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, அந்த மருந்தின் தரம் குறித்து அல்ல, அதில் என்ன கலக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். விசாரித்து வருவதாக அரசு கூறுகிறது. விசாரணை இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?" என்கிறார்.
மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பேசியவர், "குழந்தைகளின் நலனில் அரசு தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாமதம் செய்யப்படுகின்றது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பச்சிளம் குழந்தைகள் இறப்பு, பிரசவத்தின் போது பெண்கள் இறப்பது ஆகியவை மோசமான விகிதத்தில் உள்ளன. இந்தூரில் குழந்தைகளை எலி கடித்ததும் பதிவாகியுள்ளது. இப்போது சிந்த்வாராவில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்துள்ளனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும். மருந்துக் கொள்முதல் கொள்கை மற்றும் மருந்து தரம் குறித்து சுயாதீனமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்" என்கிறார்.
நாட்டிலேயே பச்சிளம் குழந்தைகள் இறப்பு மத்தியப் பிரதேசத்தில் அதிகமாக உள்ளது, அங்கு பிறக்கும் 1,000 குழந்தைகளில் 40 குழந்தைகள் இறக்கின்றன.
2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுகாதார அமைச்சர் ராஜேந்திர ஷுக்லா சட்டமன்றத்தில் இந்தத் தகவலை எழுத்துபூர்வப் பதிலாக வழங்கியுள்ளார். சமீபத்திய மாதிரி பதிவு அமைப்பு தரவுகளின்படி (Sample Registration System (2022), தேசிய சராசரியை விட மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு அதிகம் என்கிறார்.இருமல் மருந்தை குடித்து அதனால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பால் ஐந்து வயதான அட்னன் கான் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று உயிரிழந்ததாக அக் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஆமினின் மூத்த சகோதரர் சஜித் கான் என்பவர் கூறிய தகவலில், "குழந்தைக்கு எவ்விதத் தீவிரமான உடல்நலப் பிரச்னையும் இல்லை. லேசான காய்ச்சல் ஏற்பட்டது, பின்னர் நிலைமை மோசமானது. எங்களால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை" என்கிறார்.
அட்னனின் தந்தை அங்கு சேவை மையம் ஒன்றை நடத்துகிறார், அதன்மூலம் மாதம் சுமார் ரூபாய். 10,000 வருமானம் ஈட்டிவருகிறார்.
சஜித் கூறுகையில், 15 நாட்களாக ரூபாய். 7 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்தும் அட்னனைக் காப்பாற்ற முடியவில்லை என்கிறார்.
இறந்த சிறுவன் நான்கு வயதான விகாஸ் யாதவன்ஷியின் வீட்டிலும் அமைதியே நிலவுகிறது.
குழந்தையின் தந்தை பிரபுதயாள் யாதவ் கூறுகையில், "இருமல், சளி, காய்ச்சலால் 10 நாட்களில் சிறுநீரகம் செயலிழக்குமா? எதையும் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என எங்களுக்குத் தெரியவில்லை" என்கிறார்.
அதேபோல் விகாஸின் பெற்றோர் விவசாயிகள். தங்கள் மகனின் இறப்புக்கு நீதி வேண்டும் என்கின்றனர்.
வீட்டின் மூலையில் அமர்ந்திருக்கும் பிரபுதயாள் பேசுகையில், "எங்கள் குழந்தை இறப்புக்கு நீதி வேண்டும். குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. இருமல் மற்றும் காய்ச்சலால் எப்படி சிறுநீரகம் செயலிழக்குமா? இதற்கு யார், எப்போது பதிலளிப்பார்கள் என்பதை அரசு சொல்ல வேண்டும்" என்கிறார்.
இதனிடையே, சஜித் பேசுகையில், "மருந்தைத் தயாரித்தவர்கள் அல்லது விற்றவர்கள் என யார் தவறிழைத்தார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். என் மகன் போய்விட்டான், குறைந்தபட்சம் வேறு யாரும் இந்த மோசமான மருந்துகளுக்கு தங்கள் குழந்தைகளை இழக்கக் கூடாது," என்கிறார். ஆம் உண்மை தான். இதில் யார் தவறு செய்தாலும் தண்டிக்கப் பட வேண்டியவர்களே. காஞ்சிபுரம் ஸ்ரீ சென் பார்மாவை மூடி சீல் வைத்தால் நல்லது நடக்குமா தெரியவில்லை.





























கருத்துகள்