திருப்பரங்குன்றம் மலையில் உயிர்பலி கொடுக்க தடை தொழுகைக்கான இடம் நெல்லித்தோப்பு பகுதி என உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடைவிதித்து நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தி, மூன்றாவது நீதிபதி ஆர். விஜயகுமார் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் அவர் உறுதிப்படுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலையின் சில பகுதிகள் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமானவை என்றும், சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட்டு மலையை தர்ஹா என சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாகவும், இதற்கு தடைவிதிக்க வேண்டுமென்றும் சென்னை நீதிமன்றம் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து அதில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
இதனால், வழக்கு மூன்றாவது நீதிபதியாக ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக தனி நீதிபதி தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தினார்.
இந்த நிலையில் இறுதியாக, தனி நீதிபதி ஆர். விஜயகுமார் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதித்து, இது குறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.
மேலும், இஸ்லாமிய மக்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார். இந்த தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால பிரச்சனைகளுக்கு ஒரு முடிவை எட்டியுள்ளன. இந்த 76 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு மூலம் திருப்பரங்குன்றத்தில் திருமுருகாற்றுப்படை
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றமும் முதலாகும். இது தமிழ்நாட்டில் மதுரையில் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகும். மதுரையில் ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்து பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது இங்குதான்
சிவபக்தரான நக்கீரர் சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அருகிலுள்ள குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதனால் அவர் செய்த தவம் கலைந்தது.
அச்சமயத்தில் பூதம் சிவ வழிப்பாட்டில்
இருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. ஆயிரமாவது நபரை தேடிக் கொண்டிருந்தபோது நக்கீரரும் சிவ வழிப்பாட்டிலிருந்து தவறியதால், அவரையும் பிடித்து சிறையில் அடைத்தது. அப்போது நக்கீரர் முருகப்பெருமானை நினைத்து திருமுருகாற்றுப்படைபாடினார்.
அவரின் தமிழிலும், பக்தியிலும் மனம் குளிர்ந்த முருகப்பெருமான் தனது வேலை எறிந்து பூதத்தை சம்ஹாரம் செய்தார். நக்கீரர் உள்ளிட்ட ஆயிரம் பேரையும் விடுவித்தார். நக்கீரர் பூதம் தன்னை தீண்டிய பாவம் நீங்க கங்கையில் நீராட வேண்டும் என்றார் முருகப்பெருமான் தனது வேலினை ஒரு பாறையின் மீது எறிந்து கங்கை நதியை பொங்கச்செய்தார். அந்த தீர்த்தம்தான் ‘காசி தீர்த்தம்’ என்ற பெயரில் இன்றைக்கும் உள்ளது. இந்த காசி தீர்த்தம் திருபரங்குன்றம் மலை மீதுள்ளது.
திருபரங்குன்றத்தில் தான் முருகருக்கும், தெய்வனைக்கும் திருமணம் நிகழ்ந்தது என்பதால், இவ்விடம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடத்த மிகவும் புன்னியம் எனக் கருதப்படுகிறது. கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் சந்தோஷமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு முருகப் பெருமானே அருள்புரிவதாகக் கருதப்படுகிறது.
கோவில் கலைநயமிக்க கட்டிடக்கலைக்கும் பெயர் போனதாகும். பாறையை குடைந்து கட்டப் பட்டிருக்கும் இக்கோவில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டாலும், இங்குள்ள மிகப்பெரிய மண்டபங்கள் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்பதே உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாக, இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், 'மலை மீதுள்ள சிக்கந்தர் தர்ஹா அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமானவை. பிரிட்டிஷ் கிழக்கிந்திய ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, ஆடு, கோழி பலியிட்டு, சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரினார்.இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், "பக்ரீத் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் சில இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்" என மனு தாக்கல் செய்தார். இதுபோல, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படுகிறது. சிக்கந்தர் தர்கா செல்லும் வழியில் நெல்லிதோப்பில் இஸ்லாமியர் வழிபாடு நடத்த தடையில்லை. மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




















கருத்துகள்