2025-30-ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை எண்ணையை நிறுவனங்கள் அறிவித்தன.
மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல் தலைமையிடமாகச் செயல்படுறது.
இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக சுமார் 5,500 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டன. இவை சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டன.
இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கோரப்பட்டு லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் இருந்த ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது. எனவே புதிய ஒப்பந்தத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர் நடந்த ஒப்பந்தத்தில் 21 டன் கியாஸ் ஏற்றும் 3 ஆக்சில் லாரிகளுக்கு முன்னுரிமை போன்ற விதிமுறைகள் இருந்தன. இந்த விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் மாதம் சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்ததையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சில நிபந்தனைகளை மட்டுமே தளர்த்தின.
இதற்கிடையே 3,500 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதிக் கடிதம் வழங்கியுள்ளன. மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக விவாதிக்க நேற்று நாமக்கல்லில் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
2025-30-ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த நிலையில் 3,500 டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதுஎனவே 2016-ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளோம்.
அதையொட்டி சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி நிறுத்தி வைக்கப்படும். அடுத்த கட்டமாக கியாஸ் இறக்கும் பணியும் நிறுத்தப்படும். இந்தப் போராட்டத்தால் 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும். ரூபாய்.6 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து லாரிகளுக்கும் வேலை கிடைக்கும் என்பதற்கான அங்கீகாரக் கடிதத்தை வழங்க வேண்டும்.
அதுவரை தென் இந்தியா முழுவதுமுள்ள 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஓட்டாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைக்கான உத்தரவு வழங்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும்."
கூறினார். இந்த நிலையில் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்; உயர் நீதிமன்றத்தை நாடிய எண்ணெய் நிறுவனம்!
நிலுவையில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கான கட்டணத் தொகைகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது இதனையடுத்து இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். இந்நிலையில் தான் இந்த வேலைநிறுத்த போராட்டம் சட்ட விரோதமானது எனவும், இதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் அனுபமா சமந்தராய் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு த் தாக்கல் செய்துள்ளார். அதில், “எல்பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக எல்.பி.ஜி. கேஸ் நிரப்பும் ஆலைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படும்.
பொதுமக்கள் சமையல் எரிவாயு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவும். எல்.பி.ஜி. கேஸ் என்பது அத்தியாவசியப் பொருளாகும். அதனை விநியோகம் செய்யாமல் தடுப்பது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்படி சட்ட விரோதமான செயலாகும். எனவே சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி சமையல் கேஸ் டேங்கர் லாரிகளை இயக்க அதன் உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதையடுத்து இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.







கருத்துகள்