தேசிய தேர்தல் ஆணையத்தின் SIR அடுத்த வாரம் ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டில் தேர்தலைச் சந்திக்கும் தமிழ்நாட்டில் நாளை முதல் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் துவங்கும் என தேசிய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை திருத்தம் செய்யும் முன்னெடுப்பு பீகார் மாநிலத்தில் துவங்கி தொடர்ந்து மேற்கு வங்காளம் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் செயல்ப்படுத்தப்படும்.
இந்தியக் குடியுரிமை உள்ள நபர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இனி வழங்கப்படும்! என இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தது சரியான செயல் தான்தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு திருத்தம்
நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் துவங்கும் தேதியை இன்று அறிவித்தது இந்தியத் தேர்தல் ஆணையம்
நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று அக்டோபர் மாதம்.27 ஆம் தேதி வெளியானது முக்கிய அறிவிப்பு
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் செய்தியாளர்களை இன்று மாலை சந்தித்தார்
தீவிரமாக வேலை செய்து வரும் தேசிய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR).
தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் இறுதி நேரத்தில் இந்த நடவடிக்கையை எடுத்து வேலைகளை எப்படி மேற்கொள்ளும் அது
எப்படி செய்யப்படும் எனக் காணலாம்:- தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணி
ஒரு வாக்குச் சாவடி மையத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு குறையாமல் இருப்பார்கள்
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் பூத் லெவல் அலுவலர் ஒருவர் பணியில் இருப்பார்
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அலுவலர் இருப்பார்
அந்த அலுவலர் சப் டிவிஷனல் மேஜிஸ்திரேட்டாக இருப்பார்
இவர் மாதிரி வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பார் அதன் அடிப்படையில் வாக்காளர்களிடமிருந்து வரக்கூடிய கருத்துக்களை அவர் பதிவு செய்வார் அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலை தயார் செய்து அதை வெளியிடுவார்
ஒவ்வொரு தாலுகாவிற்கும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் இருப்பார்கள்
இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்றால் மாவட்ட ஆட்சியரிடம் முதல் முறையீடை சம்பந்தப்பட்டவர்கள் செய்யலாம்
அங்கு நிராகரிக்கப்படுகிறது என்றால் மாவட்ட ஆட்சியரின் முடிவிற்கு எதிராக மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் இரண்டாவது முறையீடை மேற்கொள்ளலாம். நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கான பணிகள் தொடங்கும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அணைத்து அரசியல் கட்சிகளுடன் அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு எஸ்.ஐ.ஆர் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப,. தெரிவித்தார் சிறப்புத் தீவிரத் திருத்ததுக்கான தேவை பற்றி முன்னர் பல முறை விவாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய தேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவது அவசியமென்றார்.
" சில ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலில் குறைபாடு உள்ளதெனப் புகாரளித்தனர். 1951 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை எட்டு முறை தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிரத் திருத்தம் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக சிறப்புத் தீவிரத் திருத்தம் நடத்தப்பட்டு 21 ஆண்டுகளாகிறது." என்றார்.
பிகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அங்கு சிறப்புத் தீவிரத் திருத்தம் அறிவிக்கப்பட்டது. அங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.
1.விரைவான நகரமயமாக்கல்மக்கள் இடப்பெயர்வு இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெறுவது
2.வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது
பிகார் மக்கள் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வெளிப்படுத்தியதாக ஞானேஷ் குமார் தெரிவித்தார். இந்தப் பணியின் போது தேர்தல் ஆணையத்துடன் பல தேர்தல் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் அறிவிப்பு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசியதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் 2-ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்தார் இந்த நிலையில் வாக்காளர் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களாக
அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறும் உத்தரவு, கடவுச்சீட்டு, கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்டப்படிப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட பல ஆவணங்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆதார் என்பது குடியுரிமை, இருப்பிடம் அல்லது பிறந்த நாளுக்கான சான்று இல்லை எனத் தெரிவித்த ஞானேஷ் குமார், ஆனால் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு அதை ஒரு அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
முக்கியமான நாட்கள்
அச்சிடுதல்/பயிற்சி: அக்டோபர் மாதம் 28 - நவம்பர் மாதம் 3, 2025
வீடு வாரியாகச் சென்று தகவல் சேகரிப்பது: நவம்பர் மாதம் 4 - டிசம்பர் மாதம் 4, 2025
வரைவு வாக்காளர் பட்டியல்: டிசம்பர் மாதம் 9, 2025
ஆட்சேபனை தெரிவிக்கும் காலகட்டம்: டிசம்பர் மாதம் 9, 2025 - ஜனவரி மகதம் 8, 2026
ஆட்சேபனை மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு: டிசம்பர் மாதம் 9, 2025 - ஜனவரி மாதம் 31, 2026
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பிப்ரவரி மாதம் 7 , 2026 ஆம் தேதியாகும். தமிழ்நாட்டில் SIR நடத்துனா இதுவும் இந்தி பேசுற மாநிலமா மாறிடும்- என திரள்நிதி இலங்கை வாழ் அயல்நாட்டு மக்களிடம் வாங்கி நடத்தும் நிலையில் பயம் காரணமாக நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்புவதில்
சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்கு கொடுத்துவிட்டால் நாம் தெருவில்தான் நிற்க வேண்டும்.
வா, இரு, வேலை செய்.. வாக்கை சொந்த ஊரில் போய் செலுத்திவிடு. என செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-
வடமாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி பேர் வேலைக்கு என தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் வாக்குரிமை கொடுத்துவிடுவீர்கள். அப்படி வாக்குரிமை கொடுத்துவிட்டால் தமிழ்நாடு இன்னொரு இந்தி பேசும் மாநிலமாக மாறும்.
இங்கு பல்வேறு தரப்பட்டு மக்கள் இருந்தாலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தி என்கிற ஒரே மொழியில் ஒற்றுமையாக நின்று விடுவார்கள். அவர்கள் அனைவரும் பாஜக வாக்காளர்கள்.
வடமாநிலத்தவர்களை தவிர்க்க முடியாத தொழிலாளியாக இங்கு அமர்த்தி, நம்மை இங்கு இருந்து விரட்டுவார்கள். அவர்களிடம் என்னுடைய அரசியலும், அதிகாரமும் போய்விட்டது என்றால் நான் இந்த நிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய அகதியாக மாற வேண்டிய சூழல் ஏற்படும்.
அதற்கு முன்பே நாம் எச்சரித்துக் கொள்ள வேண்டும். வா, இரு, வேலை செய்.. வாக்கை சொந்த ஊரில் போய் செலுத்திவிடு.. சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்கு கொடுத்துவிட்டால் தமிழர் தெருவில்தான் நிற்க வேண்டும்.SIR எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள் தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட
வேண்டிய நேரம் இது என மற்றொரு தரப்பு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்த நிலையில்
மக்களின் வாக்குரிமையை பறித்து வந்த, ஜனநாயக விரோதமாக இயங்கிய போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை, மரணமடைந்தவர்களின் வாக்கு, அயல் நாட்டிலிருந்து ஊடுருவியவர்களின் வாக்குகள் எனும் இதுகாறும் இருந்த பெரும் சதிவலையத் தகர்த்தெறிகிறது SIR. இந்த சீர்திருத்தத்தை ஏற்பதற்கு மனமில்லாமல் புலம்பும் அரசியல் கட்சிகள் அதில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின், திமுகவின் முடிவுரை வெகு விரைவில் எழுதுவார் என பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கருத்தும் இணைகிறது.
இங்கே என்னென்ன மாறங்கள் வருமோ?
தொடக்கத்திலேயே இவைகளைத் தடுக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்க்க அவர்கள் கூறும் காரணங்கள் பல பர்மாவில் இருந்தும் இலங்கையில் இருந்தும் முன்பே அகதிகளாக வந்த பலர் தற்போது வாக்குரிமை பெற்ற நிலை உள்ளது. ஆனால் இந்தியா வந்த இந்தியாவில் பிறந்த பலர் மாநிலம் விட்டு மாநிலத்தில் வாழும் நிலையில் இனி பழைய தவறான நபர்கள் நீக்கி புதிய பலர் சேர்க்க இது வழிவகுக்கும் என்பதே.
அனைவரும் ஒன்றுபட்டால் அரண் அமைக்கலாம்! என்பது அக் கட்சிகள் திட்டம்.
பீகாரில் ஓட்டுரிமை பறிக்கப்பட்டவர்கள் 65 லட்சம் என்றால், திராவிட ஒவ்வாமை கொண்ட தமிழ்நாட்டில் எவ்வளவு பேரை அயல் நாட்டு பிரஜை என வாக்குரிமையை காவு கேட்பார்களோ..? என்ற பயமே.
தமிழ்நாடு அனைத்து கட்சிகளும் – மண்ணின் மைந்தர்கள் என்ற வகையில் - ஒன்று சேர்ந்து தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தேவையில்லை. இருப்பதே போதுமானது என தீர்மானம் நிறைவேற்ற முயன்றால் அதில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, தவெக அமமுக பங்கேற்குமா என்பது எழுவினா.? ஆனால் அந்த முன்னெடுப்பை செய்யப் போவது யார்?
என்பதே தற்போதய கேள்வி..































கருத்துகள்