முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசி தமிழ் சங்கமம் 4.0, மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 முதல் நடத்தவுள்ளது

 காசி தமிழ் சங்கமம் 4.0, மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 முதல் நடத்தவுள்ளது

காசி தமிழ் சங்கமம் தமிழ்நாடு மற்றும் காசி இடையேயான நாகரிக பிணைப்புகளைக் கொண்டாடும்

தமிழ்நாட்டிதிற்கும் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக தொடர்புகளைக் கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமத்தின்   நான்காவது பதிப்பை டிசம்பர் 2 முதல், மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, இரு பகுதிகளுக்கும் இடையிலான நாகரிகம், கலாச்சாரம், மொழியியல் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை தொடர்ந்து அதிகரிக்கிறது, இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கிறது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் மற்றும் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகம்  ஆகியவை ஒருங்கிணைக்கின்றன, மேலும் கலாச்சார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம், உத்தரப்பிரதேச அரசு ஆகியவை இந்நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன.


2022-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, காசி தமிழ் சங்கமம் பொதுமக்களின் மிகப்பெரிய பங்களிப்பைக் கண்டுள்ளது. இந்தியாவின் இரண்டு பழமையான கலாச்சார மரபுகளை மீண்டும் இணைக்கும் ஒரு மைல்கல் பாலமாக இது உருவெடுத்துள்ளது. காசி தமிழ் சங்கமத்தின் முந்தைய மூன்று பதிப்புகளின் வெற்றியைக் கட்டியெழுப்ப, 4-வது பதிப்பு மேம்பட்ட கற்றல் பரிமாற்றங்கள், கலாச்சார ஈடுபாடு, கல்வி தொடர்புகள் மற்றும் அதிக இளைஞர் பங்கேற்பு மூலம் ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2025-ம் ஆண்டிற்கான கருப்பொருள்: “தமிழ் கற்கலாம்”

“தமிழ் கற்கலாம்” என்ற கருப்பொருளைச் சுற்றி ஏற்பாடு செய்யப்படும் நான்காவது பதிப்பு இந்தியா முழுவதும் தமிழ்க் கற்றலை ஊக்குவிப்பதுடன்,  இந்தியாவின் பாரம்பரிய மொழியியல் மற்றும் இலக்கிய பாரம்பரியத்திற்கான பரந்த அளவிலான பாராட்டை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் பதிப்பில், தமிழ்நாட்டிலிருந்து 1,400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பின்வரும் ஏழு பிரிவுகளின் கீழ் பங்கேற்பார்கள்:

1. மாணவர்கள்

2. ஆசிரியர்கள்

3. எழுத்தாளர்கள் & ஊடக வல்லுநர்கள்

4. விவசாயம் & அதனுடன் தொடர்புடைய துறைகள்

5. தொழில் வல்லுநர்கள் & கைவினைஞர்கள்

6. பெண்கள்

7. ஆன்மீக அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்

பிரதிநிதிகள் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு வருகை தருவது, கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரியம் பற்றிய வெளிப்பாடு உள்ளிட்ட 8 நாள் அனுபவ சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார்கள்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மூதாதையர் இல்லம், கேதார் காட், "லிட்டில்  தமிழ்நாடு" பகுதியில் உள்ள காசி மடம், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் மாதா அன்னபூர்ணா கோயில் உள்ளிட்ட வாரணாசியில் உள்ள குறிப்பிடத்தக்க தமிழ் பாரம்பரிய இடங்களுக்கு பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். கல்வி மற்றும் இலக்கிய தொடர்புக்காக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில்  உள்ள தமிழ்த் துறையையும் அவர்கள் பார்வையிடுவார்கள்.

காசி தமிழ் சங்கமம் 4.0-ன் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய முயற்சிகள்

1. தென்காசியில் இருந்து காசிக்கு அகத்திய முனிவர் வாகனப் பயணம்

தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையிலான பண்டைய கலாச்சார வழிகளைக் கண்டறியும் "அகத்திய முனிவர் வாகனப் பயணம்" டிசம்பர் 2 அன்று தென்காசியில் துவங்கி, டிசம்பர் 10 அன்று காசியில் முடிவடைகிறது. இந்தப் பயணம் பாண்டிய மன்னர் ஸ்ரீ அதிவீர பராக்கிரம பாண்டியனின் முயற்சிகளைக் குறிக்கிறது. அவர் தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு தனது பயணத்தின் மூலம் பாரத கலாச்சாரத்தில் ஒற்றுமையின் செய்தியைப் பரப்பினார். மேலும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலைக் கட்டினார். ஒற்றுமையின் உணர்வை அடிக்கோடிட்டுக் காட்ட நகரத்திற்கு தென்காசி (தட்சிண காசி) என்று பெயரிட்டார்.

இந்தப் பயணம் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய மற்றும் விஜயநகர காலங்களின் நாகரிக தொடர்புகளை எடுத்துக்காட்டும் அதே வேளையில், பாரம்பரிய தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம் மற்றும் பகிரப்பட்ட பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும்.

2. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பள்ளிகளில் தமிழ் கற்பித்தல்

“தமிழ் கற்கலாம்” என்ற பிரச்சாரத்தின் கீழ், காசியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்தி தெரிந்த 50 தமிழ் ஆசிரியர்கள் தமிழ் கற்பிப்பார்கள்.

3. உத்தரப் பிரதேச மாணவர்களுக்கான தமிழ் கற்றல் படிப்புச் சுற்றுலாக்கள்

காசியைச் சேர்ந்த மொத்தம் 300 கல்லூரி மாணவர்கள் 15 நாள் தமிழ் கற்றல் திட்டத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய  நிறுவனங்களுக்குச் செல்வார்கள். சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையம் நோக்குநிலை மற்றும் கற்றல் பொருட்களை வழங்கும், அதே நேரத்தில் நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியம், மரபுகள் மற்றும் காசியுடனான வரலாற்று உறவுகளை எடுத்துக்காட்டும் கல்வி மற்றும் கலாச்சார சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யும். இந்த மாணவர்கள் சென்னையில் அன்புடன் வரவேற்கப்படுவார்கள்.

கலாச்சார பரிமாற்றம், மொழியியல் செறிவூட்டல் மற்றும் அறிவுப் பகிர்வு மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டை காசி தமிழ் சங்கமம் 4.0 மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பல்வேறு சமூகங்களை ஒன்றிணைப்பதன் மூலம், இந்தத் திட்டம் இந்தியாவின் நாகரிக தொடர்ச்சி மற்றும் கலாச்சார ஒற்றுமையின் உயிருள்ள சாரத்தை உள்ளடக்கியது.

பதிவுகளுக்கு:

காசி தமிழ் சங்கமம் 4.0 க்காக இரண்டு பிரத்யேக பதிவு இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் பங்கேற்பதற்காக, https://kashitamil.iitm.ac.in/ என்ற தளம் மற்ற அனைத்துப் பதிவுகளுக்கும் திறந்திருக்கும். பதிவுச் சாளரம் நவம்பர் 21 அன்று இரவு 8:00 மணிக்கு மூடப்படும், மேலும் தேர்வு வினாடி வினா நவம்பர் 23 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்படும்.

இரண்டாவது தளம்  https://kashitamil.bhu.edu.in/, டிசம்பர்  மூன்றாவது வாரத்தில் 15 நாள் கல்விப் பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் 300 மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...