1995 ஆம் ஆண்டுக்குப் பின் ஒரு முறை கூட சட்டசபை தேர்தலில் போட்டியிடாத நிதிஷ் குமார். இந்த முறையும் மேலவை உறுப்பினராக இருந்து10 ஆவது முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார்.
பீஹார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள், நவம்பர் மாதம் 14, 2025 ல் வெளியாகி, இந்திய அரசியலின் அலைமோதல்களைப் புரிந்துகொள்ள ஒரு சுவாரஸ்யமான கண்ணாடியாகத் திகழ்கின்றன. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), 243 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்டவற்றில் வெற்றி பெற்று, மிகப்பெரிய அளவிலான வெற்றியைத் தனதாக்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 95 தொகுதிகளில் வாகை சூடியது, ஜேடியூ 84-ஐ, பெற்ற நிலையில் அதன் கூட்டணியின் மற்ற கட்சிகள் 20-க்கும் மேல் வென்றுள்ளன. இதற்கு மாறாக, லாலு பிரஷாத் யாதவ் மகனான தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மஹாத்பந்தன் கூட்டணி, வெறும் 40-க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிந்தது. இந்த முடிவுகள், பீஹாரின் சமூக-அளவிலான சிக்கல்களைத் தாண்டி, தேசிய அளவிலான அரசியல் போக்குகளை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
பீஹார் தேர்தலின் வெற்றிக்கு முக்கியக் காரணம், நிதிஷ் குமாரின் 'மக்கள் நலத்' திட்டங்கள். செப்டம்பர் மாதம் 2025-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 'முக்யமந்திரி ரோஜ்கர் யோஜனா' திட்டத்தின் கீழ், 75 லட்சம் பெண்களுக்கு ரூபாய்.10,000 நிதி உதவி வழங்கப்பட்டது. இது பெண் வாக்காளர்களிடையே (71.6 சதவீதம் வாக்குப்பதிவு) பெரும் ஆதரவைப் பெற்றது. மேலும், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறுபரிசீலனை (SIR) செயல் முறையில், வாக்காளர் பட்டியலை 'சுத்தப்படுத்தியதென்று என NDA வாதிடுகிறதுகிறது. ஆனால், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போன்றோர் இதை 'தேர்தல் சதி' என்று விமர்சித்துள்ளனர். இந்த SIR-ஐ , தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது' என அவர் எச்சரித்துள்ளார்.
இது, தமிழ்நாட்டில் 2025-ல் நடைபெற்று வரும் SIR-ஐ (78.09 சதவீதம் படிவங்கள் விநியோகம்) ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. பீஹாரின் இந்த 'வாக்காளர் சுத்திகரிப்பு' மாதிரி, தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களின் (குறிப்பாக பீஹாரிகளின்) வாக்காளர் சேர்க்கை குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டும். தற்போது 6.5 லட்சம் பீஹாரிகள் மற்றும் சௌகார்பேட்டை,முதல் வேப்பேரி மற்றும் புரசைவாக்கம் வரை குடியேறிய ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி மார்வாடிகள் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக இருக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கணிக்கிறது. ஆனால், இது 'புலம்பெயர் வாக்காளர்கள்' என்று விமர்சிக்கப்படுகிறது. பீஹார் முடிவுகள், SIR-ஐ 'என்டிஏவின் ஆயுதம்' என்று சித்தரித்தால், தமிழ்நாட்டில் திமுகவின் 'புலம்பெயர் அரசியல்' விமர்சனத்தை பலப்படுத்தும். பாஜக, இதைப் பயன்படுத்தி, 'போலி வாக்காளர்கள்' என்று தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தலாம், இது தேர்தல் போட்டியை சமூகப் பிளவுகளின் அடிப்படையில் மாற்றிவிடும் அபாயம் உள்ளது.
தேசிய அளவில், பீஹார் வெற்றி பாஜகவுக்கு " மோடி தாக்கம்" என்ற உற்சாகத்தை அளிக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஐ.என்.டி.ஏ.யின் பலஹீனத்திற்குப் பிறகு, பாஜக ''உள்ளூர் தலைவர்களுடன் (நிதிஷ் போன்றோர்) கூட்டணி' என்ற யுக்தியின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில், பாஜக-அஇஅதிமுக கூட்டணி இதைப் பயன்படுத்தி, '2025, பீஹார் போல தமிழ்நாட்டிலும் நிதிஷ் மாதிரி உள்ளூர் தலைமை வெற்றி பெறும்' என்று பிரச்சாரம் செய்யும். ஏற்கனவே, பீஹார் வெற்றியைப் பட்டாசுகளால் கொண்டாடும் தமிழ்நாட்டு பாஜகவினர், இதை 'மாற்றத்தின் அறிகுறி' என்று சித்தரிப்பார்கள். ஆனால், இது விமர்சன ரீதியாகப் பார்த்தால், பீஹாரின் வெற்றி 'நிதி உதவி' அடிப்படையில் விளைந்தது.
தமிழ்நாட்டில், ஸ்டாலினின் 'மகளிர் உரிமைத் தொகை' (மாதம் ரூபாய்.1,000), இலவச பேருந்துப் பயணம் போன்ற திட்டங்கள் ஏற்கனவே உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணி பெண்களைக் கவர கவர்ச்சிகரமான திட்டங்களுடன் களத்திற்கு வருவார்கள். பீஹாரில் பெண்கள் வாக்கு அதிகரித்தது போலவே தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்களின் ஆதரவைப் பெற முயல்வார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை என்ற குற்றச்சாட்டு மற்றும் பூதாகரமான ஊழல் திமுகவிற்கு எதிராக மாற்ற முயற்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னெடுக்கும்.
மற்றொரு அளவுகோலாக, காங்கிரஸின் தோல்வி. பீஹாரில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 5-ல் மட்டுமே முன்னிலை. இ து2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சொதப்பலை (2 சதவீதம் வாக்கு) போன்றது. தமிழ்நாட்டில், இந்தியா கூட்டணியின் (திமுக-காங்கிரஸ்) பலவீனத்தை வெளிப்படுத்தி, பாஜக 'காங்கிரஸ் = தோல்வி' என்று தனது 'தனி' பிரச்சாரத்தை வலுப்படுத்தும். திமுக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கு குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கக் கூடும். காங்கிரஸ் அதிருப்தியை காங்கிரஸ் வெளிப்படுத்தும். கூட்டணியிலிருந்து வெளியேறக் கூட எத்தனிக்கலாம். திமுக கூடுதல் தொகுதிகளை அதாவது தனித் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு வழங்கி கூட்டணி ஒற்றுமை'யை கூட உருவாக்கலாம்.
பீஹார் முடிவுகள் தமிழ்நாட்டுக்கு 'எச்சரிக்கை'யாக உள்ளன. அது, நிதி திட்டங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சுத்தீகரிப்பின் தாக்கங்களை வெளிப்படுத்துகிறது. பாஜக இதை 'வெற்றி அலை' என்று கொண்டாடும், திமுக "SIR " ஐ எதிர்க்கும், சமூக நீதி, மக்கள் நலத் திட்டங்களைப் பேசும். ஜன் சுராஜைப் போல த வெ க கூட்டணி அமைக்காத பட்சத்தில் வாக்குகளை மட்டுமே பிரிக்கும், இது திமுகவிற்குப் பாதகமாக அமையலாம். பந்தயத்தில் ஃபுல் ஃபார்ம்ல இருக்கும் குதிரையாக பாத்து செலக்ட் பண்ணிட வேண்டியது. நாம சிறப்பாக எதுவும் செய்ய வேண்டாம், எல்லாவற்றையும் மேற்படி குதிரையே கழட்டிக்கும்னு 'வியூக' வகுப்பாளர்கள் எனும் அதி மேதாவிகளுக்கு ஏற்கெனவே தெரியும். பிறகென்ன, குதிரை முன்னாடி வந்து Win box ல மூக்கைக் குத்திட்டு நின்னதும் 'பாத்தியா ரிசல்ட்டை'ன்னு பெருமை கொள்ள வேண்டியது. குதிரை உரிமை கொண்டோரும் போதாத குறைக்கு எல்லாப்புகழும் வியூகம் வகுத்த மேதாவிக்கே சேரும்னு சொல்லி; இன்னும் டிமாண்டை உண்டாக்க வேண்டியது.
2021-ல திமுகவுக்கு ரூட் கிளியராக இருந்தும் இந்த பீஹாரு பஞ்சவர்ணக்கிளி தான் தொண்டையில் கிச்கிச்சே இல்லாமல் நல்லா பாடும்னு பொறுப்புக் குடுத்து துட்டையும் பொட்டியில் குடுத்து தட்டியும் குடுத்து ஏதேதோ ஆச்சு. ஒரு மூத்த தலைவர் வேற, "நாங்க, அந்தாள தூக்கிட்டோம்னு எதிர்க்கட்சி ஏரியாவ்ல கதருகிறாங்க"னு கிச்கிச்சி பண்ணாரு. சொந்தக்கட்சியோட பலமோ பலஹீனமோ கொஞ்சம்கூடத் தெரியாமயே ஜோஸியக் காரன் போல சீட்டைத் தேய்த்து விட்டு உளர வேண்டியது. அந்த சிக்ஸ் பேக்காக வர்ணிக்க ப்படட ஐபேக்கை அதாவது
பீஹாரிய பீஹாரி பிறந்த மண்ணிலயே ஓடவிட்டு ஸ்பைனல் ஃகார்டு நாப்பது துண்டா போகமளவுக்கு உடைச்சு விட்டுட்டாங்க. இனி ஊருல ஒரு கட்சி கூட 'ஜீரோ' லெவல் கூட வியூக வகுப்பாளர்களை நம்பப் போறதில்ல. இந்த லட்சணத்துல புதுசா உறுவான கட்சிக்கும் இவரைத்தான் பேசி அட்வான்ஸெல்லம் குடுத்து விட்டாங்கனு பேச்சு வருகிறது. திடீர்னு ஒருநாள் அங்கயும் ஆளைக் காணவில்லை. நடிகர் வடிவேலு கணக்காக வெறும் பாடி சோடாதான் இதுன்னு ஒரு வேளை புதுக்கட்சி ஏரியாவ்ல கண்டு பிடிச்சுருப்பாங்க போல.
யேயப்பா பீஹார் ராசா... இங்க வூட்டுக்கு வூடு ஐடி ஏரியாவ்லவும், ஸ்ட்ராடெஜி மைதானத்திலயும், வியூக வகுப்பிலும் பின்னி பெடலெடுத்துட்டு பெடலே இல்லாம சைக்கிள் ஓட்டிட்ருக்காங்க.
கிளம்பு ராசா காத்து வரட்டும்...பிஹாரிக்கு பீஹாரிலேயே
என்னாஅடி.ஆஹா. தற்போது கிழிந்த நிலையில் தையலுக்கு காத்திருக்கிறது ஐ-பேக் ஆனால்
பீஹார் பாடகி மைதிலி தாக்கூர் யாதவ் இளம் வயதில் வெற்றி பெற்ற சாதனையாளர் அவர் தமிழ் திரைப்படத்தில் பாடிய பின்னணி ப் பாடலிது படம் விஸ்வாசம்.


























கருத்துகள்