கோயம்பத்தூர் கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் மாநாடு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி (நாளை மறுநாள்) துவங்க உள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்து, சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்குகிறார். இந்த மாநாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மதியம் ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோயம்பத்தூர் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு மீண்டும் கோயம்பத்தூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு கோயமுத்தூரில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக உரியஜபாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.மேலும், கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி கோயம்பத்தூர் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோயம்பத்தூர் விமான நிலைய இயக்குநர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை விமான நிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிகளுக்கு முன் வாகனங்களை நிறுத்த கூடாது. அவ்வாறு நிறுத்தப்பட்டால் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.
அதே நேரத்தில் விமான முனையம் முன்பு 3 நிமிடங்களுக்குள் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் எந்தத் தடையுமில்லை. செவ்வாய் மற்றும் புதன் கிழமை வரை பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துமிடத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் கோயம்பத்தூர் வருகை நவம்பர் மாதம் 19 ஆம் தேதி
போக்குவரத்து மாற்றம் குறித்து விவரங்களை வெளியிட்ட கோயம்பத்தூர் மாநகரக் காவல்துறை :-
19.11.2025 ஆம் தேதியன்று கோயம்பத்தூர் மாநகருக்கு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் வருகை புரிவதால் நண்பகல் 12.00 மணி முதல் 16.00 மணி வரை நேரத்திற்கு தகுந்தாற் போல் கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
கோயம்பத்தூர் மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்
சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து விமான நிலையம் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.
நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள்
லட்சுமி மில் சந்திப்பில் U-Turn செய்து புளியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக L&T பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள்
நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோலப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.
நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள்
அவினாசி ரோடு, டைட்டல் பார்க் சந்திப்பில் U -Tum செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேலும் நகருக்குள் இருந்து வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள் நேரத்திற்கு தகுந்தாற் போல் சித்ரா வழியாக அனுப்பப்படும்.
19.11.2025 தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வருகையையொட்டி நண்பகல் 12.00 மணி முதல் 15.00 மணி வரை விமான நிலையத்திற்குள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் தடை செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் விமான நிலையத்திற்கு வருபவர்கள் 12.00 மணிக்கு முன்பாக விமான நிலையம் வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 12.00 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவினாசி ரோடு, ஜிடி நாயுடு மேம்பாலம் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் போது, 19.11.2025 தேதியன்று நண்பகல் 12.00 முதல் 15.00 மணி வரை மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் அதற்குத தகுந்தாற் போல் மாற்றுப் பாதையை தேர்வு செய்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
19.11.2025 ஆம் தேதியன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
16.11.2025 முதல் 19.11.2025 வரை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்படுகிறது. தற்போது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்பு மாலை 4 மணிக்கு மேல் பார்வையாளாகள் அனுமதிக்கப்படுவர்.
எனவே மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்புக் கொடுத்து, தங்களது பயண திட்டம் மற்றும் பயண பாதையை வகுத்து விரைவான பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட கோயம்பத்தூர் கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் மாநாடு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி (நாளை மறுநாள்) துவங்க உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்து, சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்குகிறார். இந்த மாநாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மதியம் ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோயம்பத்தூர் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு மீண்டும் கோயம்பத்தூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு கோயமுத்தூரில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக உரியஜபாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.மேலும், கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி கோயம்பத்தூர் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோயம்பத்தூர் விமான நிலைய இயக்குநர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை விமான நிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிகளுக்கு முன் வாகனங்களை நிறுத்த கூடாது. அவ்வாறு நிறுத்தப்பட்டால் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.
அதே நேரத்தில் விமான முனையம் முன்பு 3 நிமிடங்களுக்குள் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் எந்தத் தடையுமில்லை. செவ்வாய் மற்றும் புதன் கிழமை வரை பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துமிடத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் கோயம்பத்தூர் வருகை நவம்பர் மாதம் 19 ஆம் தேதி
போக்குவரத்து மாற்றம் குறித்து விவரங்களை வெளியிட்ட கோயம்பத்தூர் மாநகரக் காவல்துறை :-
19.11.2025 ஆம் தேதியன்று கோயம்பத்தூர் மாநகருக்கு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் வருகை புரிவதால் நண்பகல் 12.00 மணி முதல் 16.00 மணி வரை நேரத்திற்கு தகுந்தாற் போல் கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
கோயம்பத்தூர் மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்
சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து விமான நிலையம் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.
நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள்
லட்சுமி மில் சந்திப்பில் U-Turn செய்து புளியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக L&T பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள்
நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோலப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.
நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள்
அவினாசி ரோடு, டைட்டல் பார்க் சந்திப்பில் U -Tum செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேலும் நகருக்குள் இருந்து வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள் நேரத்திற்கு தகுந்தாற் போல் சித்ரா வழியாக அனுப்பப்படும்.
19.11.2025 தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வருகையையொட்டி நண்பகல் 12.00 மணி முதல் 15.00 மணி வரை விமான நிலையத்திற்குள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் தடை செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் விமான நிலையத்திற்கு வருபவர்கள் 12.00 மணிக்கு முன்பாக விமான நிலையம் வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 12.00 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவினாசி ரோடு, ஜிடி நாயுடு மேம்பாலம் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் போது, 19.11.2025 தேதியன்று நண்பகல் 12.00 முதல் 15.00 மணி வரை மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் அதற்குத தகுந்தாற் போல் மாற்றுப் பாதையை தேர்வு செய்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
19.11.2025 ஆம் தேதியன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
16.11.2025 முதல் 19.11.2025 வரை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்படுகிறது. தற்போது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்பு மாலை 4 மணிக்கு மேல் பார்வையாளாகள் அனுமதிக்கப்படுவர்.
எனவே மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்புக் கொடுத்து, தங்களது பயண திட்டம் மற்றும் பயண பாதையை வகுத்து விரைவான பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள்