பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானது ரசிகர்கள் மத்தியில் பேரிழப்பு மரணம் குறித்து இரண்டு நாள் முன் மதியம் தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்துத் தெரிய வந்தது.
அதற்கு முன் பல வதந்திகள் ராமர் கோவில் நிறைவு விழா தொடர்பாக நமது செய்தி இரண்டு நாள் தாமதம் தெய்வ சங்கல்பம்.
பாலிவுட் நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் முன்பு அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக விலே பார்லேயில் உள்ள பவன் ஹென்ஸ் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி, மகள் இஷா தியோல், சஞ்சய் தத், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரும் வந்திருந்தனர்.
தர்மேந்திராவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.தர்மேந்திரா பாலிவுட்டின் வெற்றிக் கதாநாயகன், பல்வேறு திறமை கொண்ட சிறந்த கலைஞர் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த தர்மேந்திரா, தமிழ்நாட்டின் பிரபல நடிகையைத் திருமணம் செய்த மருமகன். நடிகை ஹேமமாலினி திருச்சிராப்பள்ளி பூர்வீகமானவர்.
அனுபமா படத்தில் உணர்ச்சி பொங்கும் எழுத்தாளர் என்றால், சத்யகம், சுப்கே சுப்கேயில் நகைச்சுவை நடிகர் என நடிப்பின் பல பரிணாமங்களையும் வாழ்ந்து காட்டிய தர்மேந்திரா.
நிஜ வாழ்க்கையில் கவிஞர், காதலன், தந்தை, 'உலகின் மிக அழகான' மனிதர்களில் ஒருவர், மது போதையிலிருந்து விடுபட்ட மனிதர் மற்றும் ஒரு காலத்து அரசியல்வாதி
1935-ஆம் ஆண்டில் பஞ்சாபில் பிறந்த தரம் சிங் தியோல், தன்னுடைய பூர்வீக கிராமமான நர்சாலியிலிருந்து மராட்டிய மாநிலம் மும்பை எனும் பழைய பம்பாய்க்குச் சென்ற பயணத்தை கனவுப்பயணம் எனலாம்.
தர்மேந்திராவின் ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ளனர். முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தர்மேந்திராவின் ரசிகர் தர்மேந்திராவின் தந்தை லூதியானாவுக்கு அருகில் சனேவால் கிராமத்தில் கணித ஆசிரியர், அங்கு திரைப்படங்களைப் பார்ப்பது என்பது நிறைவேறாத ஆசை எனலாம்.
1948 ஆம் ஆண்டில் வெளியான திலீப் குமாரின் ஷாஹீத் திரைப்படத்தை சிறுவனாக தரம் சிங் தியோல் ரகசியமாகப் பார்த்தார். அந்த திரைப்படமும், நடிகர் திலீப் குமாரும் சிறுவனின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த. அன்றே அவர் தலைவிதி நிர்ணயமானது என தர்மேந்திரா முடிவு செய்தார் எனலாம்
1958-ஆம் ஆண்டில், பிலிம்பேர் இதழ் போட்டியில் பிமல் ராய் மற்றும் குரு தத் போன்ற பிரபலங்கள் இருந்ததில் பங்கேற்க விரும்பிய தர்மேந்திரா, ஜான் முகமது போட்டோ ஸ்டுடியோவுக்குச் சென்று, "என்னை திலீப் குமார் போல படம் எடுத்துக்கொடு, நான் நிச்சயம் தேர்வாகிவிடுவேன்" என்றார்.
அவர் நினைத்தது தான் நடந்தது. கிராமத்து இளைஞர் பாலிவுட்டில் கோலோச்ச அன்றைய பம்பாயில் குடியேறினார்.
உணர்ச்சி, நாடகம் மற்றும் சோகம் கலந்த ஒரு திரைப்படக் கதை இப்படித்தான் தொடங்கியது தர்மேந்திரா 1960 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடிக்கத் துவங்கிய போது, ஷம்மி கபூர் அனைவரின் விருப்ப நாயகர். 1970 ஆம் ஆண்டுகளில், ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் போன்ற உச்ச நட்சத்திரத்திரங்களுக்கு மத்தியில்1960 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரை பிரபலமாக இருந்தது நடிகர் தர்மேந்திரா மட்டும் தான்.
1970 ஆம் ஆண்டில் தர்மேந்திராவின் தனித்துவமான பாணி நடிப்பில் வெளிப்பட்ட காலகட்டத்தில், ஜீவன் மிருத்யு, சீதா அவுர் கீதா, சரஸ், பிளாக்மெயில், சுப்கே சுப்கே என, ஆக்ஷன், காதல், நகைச்சுவை மற்றும் வணிக சினிமா என பலவிதமான திரைப்படங்களில் நடித்தாலும், 1975- ஆம் ஆண்டில் வெளியான ஷோலே திரைப்படம், அவர் புகழ் உச்சத்திற்குப் போனது. பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினியுடன் காதல் ஏற்பட்டது. ஆனால் தர்மேந்திராவுக்கு அதற்கு முன்பே திருமணமாகியிருந்தது. 1980-ஆம் ஆண்டு தர்மேந்திரா, பாலிவுட்டின் கனவுக் கன்னி ஹேம மாலினியை மணந்த போது, அது மிகப்பெரிய சர்ச்சையானது.
ஹேம மாலினியின் வாழ்க்கை வரலாறான "ஹேம மாலினி: பியாண்ட் தி ட்ரீம் கேர்ள்" என்ற புத்தகத்தில், எழுத்தாளர் ராம் கமல் முகர்ஜி கருத்து 1974-ஆம் ஆண்டு, ஜீதேந்திரா மற்றும் ஹேம மாலினியின் பெற்றோர், அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, தர்மேந்திரா முன்பே ஹேம மாலினியின் வாழ்க்கையில் நுழைந்திருந்தார். மெட்ராஸில் திருமணம் நடக்கப் போவது தெரிந்ததும் தர்மேந்திரா நேராக அங்கு சென்று ஹேம மாலினியிடம் தனியாகப் பேசினார், அதன் பிறகு திருமணம் நின்றுபோனது.
விஜேதா பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் தனது மகன்களான சன்னி மற்றும் பாபி தியோலை அறிமுகப்படுத்தினார் தர்மேந்திரா. இருப்பினும், தனது மகள்கள் இஷா மற்றும் அஹானா இருவரும் திரைத்துறையில் வருவதை விரும்பவில்லை.
மிகவும் பிரபலமான நடிகர் தர்மேந்திராவுக்கு மதுப்பழக்கம் பின்னடைவு, இருந்தும் 1970 கால ரசிகர்கள் இன்னும் உண்டு. ஹிந்தியில ஜெயலலிதா ஹீரோயினா நடிச்சது தர்மேந்திரா கூட மட்டுந்தான். ஒருயொரு படம்











கருத்துகள்