முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆருத்ராவும் அமலாக்கத்துறை சோதனையும்.

ஆருத்ரா கோலடு நிறுவனம் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

ஆருத்ரா கோல்டு நிறுவன நிதி மோசடி தொடர்பாக நவம்பர் மாதம் 26 ஆம் தேதி காலை முதல் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர்  சோதனை மேற்கொண்டனர். சென்னை முகப்பேர் பகுதியிலுள்ள நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் வீட்டிலும், ஐஸ் ஹவுஸ் பகுதியில் முக்கிய நிர்வாகியாக பணியாற்றிய நபரின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அமலாக்​கத்துறை சார்பில் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்பில், "ஆருத்ரா நிறு​வனம் பல்​வேறு வட்டி சலுகைகளை அறி​வித்து 1,04,433 பேரிட​மிருந்து ரூபாய்.2,438 கோடிகள் வைப்​புத் தொகை​யாகப் பெற்று மோசடி செய்​துள்​ளது. இந்த வழக்​கில் இது​வரை பொருளா​தாரக் குற்​றப்​பிரிவு 40 தனி நபர்​கள், நிறு​வனங்​கள் மீது குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்துள்ள நிலை​யில் அமலாக்​கத்துறை விசா​ரணை​யில், ஆருத்ரா கோல்டு நிறு​வனத்​தின் வங்​கிக் கணக்​கு​கள் மற்​றும் தொடர்​புடைய நிறு​வனங்​களின் கணக்​கு​களில் சுமார் ரூபாய்.2 ஆயிரம் கோடி பரிவர்த்​தனை​கள் நடந்​திருப்​பது தெரிய வந்​துள்​ளது. மேலும் ரூபாய்.10 லட்​சத்​துக்கு மேல் நடை​பெற்ற 1,230 பரிவர்த்தனை​கள் பகுப்​பாய்வு செய்​யப்​பட்​டதில் பெரும்​பாலான பரிவர்த்​தனை​கள், பொது​மக்​களின் வைப்​புத் தொகை​யைத் தனிப்​பட்ட மற்​றும் வர்த்​தகம் அல்​லாத நோக்​கங்​களுக்​காக நிறு​வனத்​தின் பல வங்​கிக் கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது.




மேலும் இதில் ஆருத்ரா நிறு​வனத்​தின் சில இயக்​குநர்​கள் பெயரளவி​லானவர்​கள் என்​றும், மோசடி​யில் அவர்​களுக்கு எந்​தப் பங்​குமில்லை என்​றும் தெரிய​வந்​ததையடுத்து நேற்று முன்​தினம் சென்​னை, காஞ்​சிபுரம், மும்​பை, கொல்கத்தா உள்​ளிட்ட 21 இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூபாய்.1.50 கோடி மதிப்​புள்ள சொத்துக்களின் ஆவணங்​கள், ரூபாய்.22 லட்​சம் பணம், மோசடி தொடர்​பான ஆவணங்​கள், டிஜிட்​டல் ஆதா​ரங்​கள், சொத்துரிமை ஆவணங்​கள், நிதிப் பட்​டு​வாடா மற்​றும் பிற முதலீடு​கள் தொடர்​பான ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் அவரது மனைவி ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமறைவாக இருப்பதாகத் தெரியவந்த நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

ரூபாய்.2,438 கோடி மோசடி வழக்கில் சிக்கிய ஆருத்ரா நிறுவ னம் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.


சென்னை அமைந்தகரை மேத் தா நகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் "ஆருத்ரா கோல்டு டிரெடிங் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனம், தங்களிடம் ரூபாய்.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய். 36 ஆயிரம் வட்டியாக மட்டுமே வழங்கப்படும் என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடாக பணத்தைக் சேமித்தார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கி கணக்குகளில் இருந்த ரூபாய்.96 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும், ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு சொந்தமான ரூபாய்.23.44 கோடி மதிப்புள்ள 127 சொத்துகளையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கிவைத்தனர்.



அந்த நிறுவனம், 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேரிடம் முதலீட்டுத் தொகையாக ரூபாய்.2 ஆயிரத்து 438 கோடி பெற்று மோசடி செய்த தாகப் புகார் எழுந்தது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறை அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள் அவர்களில் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முறைகேடான பணப் பணபரிமாற்றத் தடை சட்டத்தின்( PMLA )கீழ் அமலாக்கத்துறையும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மீது வழக் குப்பதிவு செய்து விசாரித்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...