சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பெண் கொலையில் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகைகளுடன் தப்பிச்சென்ற கொலைக் குற்றவாளியை காவல்துறை தீவிரமாகத் தேடிய நிலையில் தற்போது பக்கத்து வீட்டில் வசித்த நபர் கைது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மருதுபாண்டியர் நகரில் வசித்த சிங்கம்புணரி வட்டம், ஏரியூர் கிராமம் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர் பாண்டிக்குமார். சிங்கப்பூரில் வேலைபார்க்கிறார். இவருடைய மனைவி மகேசுவரி (வயது 38). இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயில்கிறார். மற்றொரு மகள் 8-ஆம் வகுப்பு படிக்கிறார். நிலம் வாங்கி விற்பதில் மற்றும் புரோக்ரேஜ் செய்து விற்பனை செய்த மகேஷ்வரி நிலம் அடையாளம் காண்பதற்காக பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இடங்களை நேரில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார் உடன் எப்போதும் இந்த குற்றவாளியையும் கூட்டிச் செல்வாராம்.
இந்த நிலையில் நேற்று காலை மகேஸ்வரி அவரது காரில் சிலரைக் கூட்டிக்கொண்டு காரைக்குடி- புதுக்கோட்டை சாலை அருகே ஆவுடைப்பொய்கை பகுதியில் வீட்டுமனை வாங்குவது சம்பந்தமாக சென்றதாகவும் . இடத்தைப் பார்த்துவிட்டு அவர் அழைத்து சென்ற நபர்களிடம் வீட்டுமனைக்கான விலை மற்றும் அதற்குரிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டுள்ளார்.
அப்போது திடீரென மகேசுவரிக்கும், அந்த நபர்களுக்குமிடையே பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதில், ஆத்திரமடைந்தவர்கள் மகேசுவரியின் தலையை கார் கதவில் மோத வைத்தும், கழுத்தை நெரித்தும், முகத்தை சிதைத்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் மகேசுவரி அணிந்திருந்த தாலிச்சங்கிலி, மற்றொரு சங்கிலி உள்ளிட்ட சுமார் 20 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு அவரது உடலை காருக்குள்ளேயே போட்டுவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பயோடிவிட்டனர்.
இதுதொடர்பாகசம்பவ நிகழ்விடத்திற்கு வந்த குன்றக்குடி காவல் நிலையத்தினர், தலையில் காயப்பட்டு இறந்து கிடந்த மகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் உதவிக் கண்காணிப்பாளர் கௌவுதம் உத்தரவி்ன் படி 'தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மகேஸ்வரிக்கு டிரைவிங் பயிற்சி கற்றுக் கொடுத்த காரைக்குடி லட்சுமி நகரைச் சேர்ந்த வேலுச்சாமி நாடார் மகன் சசிகுமார் வயது 33, மகேஸ்வரியுடன், விற்பனை வீட்டுமனையைக் காட்டுவதற்காக காரில் வந்தது தெரிந்தது. சசிக்குமாரைப் பிடித்து விசாரித்த போது தனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் மகேஷ்வரி இழுத்தடிப்பு செய்ததால் 'ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்று அருகில் மறைத்து வைத்துள்ளார். மகேஸ்வரியின் அலைபேசியிலிருந்து அவரது கணவர் பாண்டிக்குமாருக்கு, நில புரோக்கர் ஒருவரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகுமார் தகவல் அனுப்பியுள்ளார். சசிகுமாரைக் கைது செய்த தனிப்படைக் காவல்துறை, அவர் திருடி மறைத்து வைத்த நகையையும் மீட்டனர். காவல்துறை வழக்குப்பதிவு செய்து காரில் மகேஷ்வரியுடன் சென்றவர்கள் யார்? இடம் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணம், கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் இல்லீகல் இன்டிமஸி காரணமா? எனப் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் தப்பிச்சென்ற நபர்களை வலைவீசி தேடிவரும் நிலையில் காரைக்குடி ஆவுடைப்பொய்கை பகுதியில் மகேஷ்வரி காரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது வீட்டின் அருகே வசித்து வரும் சசிகுமார் என்பவரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து காவல் துறை நடவடிக்கை. எடுத்திருந்தாலும் இன்னும் வேறுநபர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் என்ற கோணத்தில் விசாரணை கண்டறிவது தொடர்கிறது. சம்பவநிகழ்விடத்தில் காரைக்குடியை கூடுதல் பணியாகக் கவனிக்க தேவகோட்டை உதவிக் கண்காணிப்பாளர் பொறுப்பு கௌதம் விசாரணை செய்கிறார் கொலை நடந்ததாக கூறப்பட்ட நிகழ்வு
இடத்தில் சிவகங்கையிலிருந்து கை ரேகை வல்லுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களைச் சேகரித்தனர். மோப்பநாய் முகுளி வந்த பின் சிறிது தூரம் மட்டுமே ஓடியது ஆனால் அது யாரையும் பிடிக்கவில்லை. இளம் பெண் காட்டுப்பகுதியில் காரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, நிலத்தைக் காட்டுவதாகக் கூறிய புரோக்கர் மருவன் என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்ததாகத் தெரிகிறது. அங்கு காரை நிறுத்தி நிலத்தை பார்த்த போது, மர்ம நபர்கள் திடீரெனத் தாக்கி, கார் கதவுகளில் அவரது தலையை அடித்துக் கொன்றனர். என காவல்துறை முதற்கட்ட விசாரணையின்படி, கொலை செய்யப்பட்ட மகேஸ்வரி அணிந்திருந்த 9 சவரன் தங்க நகைகளைப் பறிக்க முயன்ற போது, அவர் கடுமையாக எதிர்த்ததால் இரு தரப்புக்குமிடையே சண்டை ஏற்பட்டதில் கோபமான குற்றவாளிகள் அவரை கொலை செய்ததாகக் கருதப்படுகிறது.
நகைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டதாகவும், காருக்குள் இரத்தகறைகள் மற்றும் சண்டை நடந்த அறிகுறிகள் காணப்படுவதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், கொலையின் முழுமையான காரணம் மற்றும் குற்றவாளிகளைத் தீவிர விசாரணையின் மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்கின்றனர்.
தகவல் அறிந்ததும், தேவகோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் கௌதம் தலைமையில் காவல்துறை குழுவினர் சம்பவ நிகழ்விடத்திற்கு விரைந்ததும். உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர், பிரதேச குற்றவியல் ஆய்வு அலுவலகத்தினர் (பிசிஆர்) மூலம் விரிவான பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
காட்டு மற்றும் பின் ஊரகப் பகுதியாக இருப்பதால், சிசிடிவி கேமராக்கள் இல்லாததும், சாட்சிகள் கிடைக்காததும் விசாரணைக்கு சவாலாக உள்ளது. தற்போது, மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளின் தடயங்களைத் தேடி வருகின்றனர்.
கைரேகை நிபுணர்கள் காரின் கைப்பிடிகள், கதவுகள் மற்றும் உள்ளே உள்ள பொருட்களைச் சோதித்து வருகின்றனர். புரோக்கரின் பின்தொடர்ச்சி குறித்தும், அவரது சம்பந்தம் குறித்தும் ஆழமான விசாரணை நடக்கிறது. சம்பவத்தை அறிந்த குடும்ப உறுப்பினர்கள் கதறி அழுதனர்.
"அம்மா தனியாகச் சென்றதால் இப்படி நடந்தது. நிலம் பார்க்கத்தான் போனார், இப்படி யாரும் எதிர்பார்க்கவில்லை" எனக் கண்ணீருடன் கூறினர்.இந்தச் சம்பவம் சிவகங்கை மற்றும் ஃகாரைக்குடி பகுதியில் மக்கள் மத்தியில் அச்சமும், ஒரே வாரத்தில் நடந்த மூன்று கொலை சம்பவமும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தனியாகப் பயணிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதும், மேலும் தகவல்கள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

























கருத்துகள்