முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரௌடி நாகேந்திரன் சாகவில்லை பிஎஸ்பி மாநிலத் நவைவர் நீதிமன்றத்தில் தகவல்

ரௌடி நாகேந்திரன் சாகவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு தப்ப வைத்ததென


நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் குற்றச்சாட்டு.சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்து போன கைதியான ரௌடி நாகேந்திரன் உயிரோடிருப்பதாக நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பு வாதத்தில் தகவல்.



பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட, ரௌடி நாகேந்திரன் மரணமடையவில்லை, அவரை தமிழ்நாடு அரசு தப்ப வைத்ததாக கொலயான ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பில் சென்னை மாவடட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற் றச்சாட்டு முன் வைக்கப் பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு அவர் வீட்டின் அருகிலாவெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட் டார்.


இந்த வழக்கில் ரௌடி நாகேந்திரன், அவனது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 குறறவாளிகள் எனக் கைது செய்யப்பட்டனர். உடல்நிலை பாதிப்பு எனக் காரணம் கூறி நாகேந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சமீபத்தில் மரணம் அடைந்ததாகத் கூறப்பட்ட நிலையில்

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.'

அதேவேளையில் மனுதா ரர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து கொலையான ஆம்ஸ்ட் ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்திருந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து.


மனுதாரர்கள் சார்பில்      ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்ட போதும், வழக்கு கோப் புகளை மாநிலக் காவல்துறை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை ஓராண்டுகளாக மனு தாரர்கள் சிறையில் இருந்து வருகிறார்கள். எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என வாதாடினார்.

கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தரப் பில் ஆஜரான பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான வழக்குரைஞர் ஆனந்தன், இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால் தான் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட் டுள்ளது. இதுபோன்ற சூழலில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள்' என வாதிட்டார்.



மேலும், 'இந்த வழக்கில் குற் றம் சாட்டப்பட்ட ரௌடி நாகேந்தி ரன் சமீபத்தில் மரணம் அடைந்ததாகக் கூறுவதில் உண்மை இல்லை. அவர், உண் மையிலேயே இறக்கவில்லை. தமிழ்நாடு அரசு அவரை தப்ப வைத்து விட்டது' என பரப ரப்புக் குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.

ஜாமீன் மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவடைந்த  நிலையில் 10- ஆம் தேதி நாளை இந்த மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். மற்ற ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையும் அதே தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் நடந்த இந்த விசாரணையின் போது தெரிவித்த தகவல்கள் குறித்து வழக்குரைஞர் ஆனந்தன் கூறும்போது, ‘ரௌடி நாகேந்திரன் சிறையிலிருக்கும் போதே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிவிடுவேன் என மிரட் டினார்.

அவ்வாறு அவர், அப்ரூவ ராக மாறினால் இந்தக் கொலை வழக்கில் முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள். அதனால், ஒரு நாடகத்தை அரங்கேற்றி ரௌடி நாகேந்திரனை வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வகையில் அவரை தப்பிக்க விடுவதென்றும், இதற்காக அவர் இறந்து விட்டாரென அறிவிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.

அந்த அடிப்படையில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு முக்கிய அரசியல் பிரமுகர்கள்  இந்தக் கொலை வழக்கில்           சிக்குவது  தடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ரௌடி நாகேந்திரனும் உயிரோடு தப்பவிடப்பட்டுள்ளார். இறந்து போன வேறொரு நபரின் முகத்தை  நாகேந்திரனின் முகத்தைப் போன்று 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து ரௌடி நாகேந்திரன் இறந்து போனதாக உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரௌடி

நாகேந்திரனின் குடும்பத் தினரிடம் ஒப்படைக்கப்பட்ட உடலின் முகத்தைப் பார்த் தாலே இது தெரியும். நாகேந்திரனை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும்,  அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதன் மூலம் இந்த நாடகம் உறுதி செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.ஸ்டான்லி மருத்துவமனையில்  9 ஆம் தேதி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின், அவரது உடல் மூத்த மகனான அஸ்வத்தாமனிடம்,  மறுநாள் காலை ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சென்னை, வியாசர்பாடியில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச்சடங்கில் அசம்பாவிதங்களைத் தடுக்க, 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், இறுதி சடங்கிற்காக வைக்கப்பட்டி ருந்த நாகேந்திரனின் உடல் முன், அவரது இளைய மகன் அஜித்ராஜ் - ஷகினா ஜோடி, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போதே பலருக்கும் லேசாக சந்தேகம் இருந்த நிலைமை ஆனால் கூறப்பட்ட காரணம் 2023 ஆம் ஆண்டில்  நிச்சயிக்கப்பட்ட திருமணம், பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில், நேற்று பிரேதம் முன் நடந்தது. ரௌடி நாகேந்திரனின் இறுதிச் சடங்கிற்காக, அஜித்ராஜ் 9ஆம் தேதி சிறையில் இருந்து பரோலில் வந்தது குறிப்பிடத்தக்கது. மாலை 4:00 மணியளவில், நாகேந்திரனின் உடல் வியாசர்பாடி, முல்லை நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கருத்து பலரையம் குழப்பமடையச் செய்கிறது.                     "உலகில் மிகப் பெரிய சக்தி நெருப்பு. தூண்டப்படாதவரை அது மரத்துள் வாழ்கிறது. சீண்டப்பட்டால் மரமே உணவாகிறது."

இது விதுர நீதி மனிதர்கள் சிலரும் இப்படித்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...