முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர்

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இன்று (நவம்பர் 22, 2025) நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.


இதில் குடியரசுத் தலைவர்  பேசியதாவது: பண்டைக் காலங்களிலிருந்து, நமது துறவிகளும் முனிவர்களும் தங்கள் செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் சமூகத்தை வழிநடத்தி வருகின்றனர். இந்த மாமனிதர்கள் சமூகத்தின் நலனுக்காக ஏராளமான பணிகளைச் செய்துள்ளனர். அத்தகைய சிறந்த ஆளுமைகளில் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். அவர் எப்போதும் சமூகத்தின் நலனுக்காக பாடுபட்டுள்ளார். "மனிதகுலத்திற்கு சேவை செய்வது கடவுளுக்கு சேவை செய்வது" என்ற நம்பிக்கையை ஸ்ரீ சத்ய சாய்பாபா வலியுறுத்தினார். மேலும் இந்த லட்சியத்தைப் பின்பற்ற தனது பக்தர்களை அவர் ஊக்குவித்தார். இந்த வழியில், அவர் ஆன்மீகத்தை பொதுநலனை நோக்கி செலுத்தினார். அவர் ஆன்மீகத்தை தன்னலமற்ற சேவை மற்றும் தனிப்பட்ட மாற்றத்துடன் இணைத்து, கோடிக்கணக்கான மக்களை சேவையின் பாதையைப் பின்பற்ற ஊக்குவித்தார் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

ஸ்ரீ சத்ய சாய்பாபா ஏராளமான சமூக நலப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் லட்சியங்களை யதார்த்தமாக மாற்றுவதில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார் என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மாணவர்களுக்கு உயர்தர இலவசக் கல்வியை வழங்குகிறது, இது கல்விச் சிறப்பையும் நற்பண்பு உருவாக்கத்தையும் இணைக்கிறது. கல்வியுடன், தரமான இலவச மருத்துவ சேவை மூலம் சத்ய சாய்பாபாவின் நோக்கமும் மேம்படுத்தப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதும் அவரது தொலைநோக்குப் பார்வையின் விளைவாகும் என்று அவர் கூறினார்.


சத்ய சாய்பாபாவின் "அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்" மற்றும் "எப்போதும் உதவு, ஒருபோதும் காயப்படுத்தாதே" என்ற செய்திகள் நித்தியமானவை மற்றும் உலகளாவியவை என்று குடியரசுத் தலைவர் கூறினார். உலகம் நமது பள்ளி என்றும், ஐந்து மனித மதிப்புகள் - உண்மை, ஒழுக்கம், அமைதி, அன்பு மற்றும் அகிம்சை - நமது பாடத்திட்டம் என்றும் அவர் நம்பினார். மனிதத்தின் மதிப்புகள் பற்றிய அவரது போதனைகள் அனைத்து கலாச்சாரங்களுக்கும் எல்லா காலங்களுக்கும் உண்மையானவை என்று அவர் தெரிவித்தார்.

'தேசம் முதலில்' என்ற உணர்வின்படி தேசத்தைக் கட்டியெழுப்புவது அனைத்து அமைப்புகளின் கடமை என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஆன்மீக அமைப்புகள் இதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய முடியும். மக்களின் வாழ்க்கையை எளிதாக்க மத்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இதன் மூலம் அவர்கள் தங்கள் திறமைகளையும் திறன்களையும் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும். அனைத்து தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் மக்கள் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு பங்களிக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் நமது இலக்கை அடைவதற்கு அவர்களின் பங்களிப்பு உதவியாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...