முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் ஆணைய Enumeration Form எனும் கணக்கெடுப்பு படிவம் பற்றி சில கேள்விகளும், கிடைக்காத பதிலும்

தேர்தல் ஆணையம் வெளியிட்ட Enumeration Form எனும் கணக்கெடுப்பு படிவம் பற்றி சில கேள்விகளும், தேடியும் கிடைக்காத பதிலும்  தெரிந்தவர்கள் பலநாள் முயன்று கடைசியாக ஒரு எழுவினா     


 1. படிவத்தில், பெற்றோரின் மற்றும் துணைவரின் EPIC எண்கள் கேட்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்ட பெற்றோரின் நண்பர்கள் துணைவரின் EPIC எண்களை கண்டுபிடிக்க 2002 வாக்காளர் பட்டியலில் தேடிக் கண்டுபிடிக்கலாம் 

2.முந்தைய SIR 2002 ல், EPIC நம்பரை அதில் கேட்டுள்ளனர். பலருக்கு வாக்காளர் அடையாள அட்டையே.2005 ஆம் ஆண்டில் தான் தரப்பட்ட நிலைமை அல்லது 2010 ஆம் ஆண்டுகளில் தான் கிடைத்தன. 2011 தான் ஆதார் கிடைத்தது  2002 ஆம் ஆண்டில் வாக்களிக்காத நபர் அதில் EPIC எண்ணை எங்கிருந்து எப்படித் தேடுவார்.

3 2004 ஆம் ஆண்டில்  ஓட்டுப் போடும் போது  தரப்பட்ட ஓட்டர் ஸ்லிப் இருந்தால்... அல்லது ஓட்டர் ஐடியே இருந்தாலும்... அதில் உள்ள தொகுதி வேறாக, மாவட்டம் வேறாக, முகவரி வேறாக, புகைப்படம் வேறாக இருக்கும். காரணம் அப்போது திருமணம் ஆகாத பெண்கள், மற்றும் வெளியூர் கல்வி வேலைக்கு சென்ற மாணவர்கள் பெற்றோர் வீட்டில், கல்லூரி காலத்தில், வேலை கிடைக்கும் முன், திருமணம் ஆவதற்கு முன் வசித்திருப்பார்களா. கடந்த 23 ஆண்டுகளில் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்றிருக்கலாம், வேலை கிடைத்து வெளியூர் சென்று வேவையிலிருக்கலாம், சுய தொழில் செய்து வருவாய் வந்து. கிராமத்தை விட்ட, விவசாயம் விட்டு, பிள்ளைகளின் கல்விக்காக பெரு நகரத்தில் பட்டிணம் சேர்ந்த புதிய முகவரி/ஊர்/ வட்டம்/ மாவட்டம்/ மாநிலம்/ தொகுதி/ மாறி இருக்கும் பலர் அந்த பழைய EPIC கொடுத்தால். அதை வைத்து புதிய படிவத்தில்  முரண்பட்ட தகவல்கள் உள்ளதாகக் கருதி, வாக்காளர் பட்டியலிலிருந்து நமது பெயரைத் தேர்தல் ஆணையம் நீக்கி விடவும் வாய்ப்பு உள்ளது.


4 அதன் பிறகு... 3வது காலத்தில்... பெற்றோர் அல்லது துணைவர்  என்று முந்திய காலத்தில் கொடுத்த உறவினரின்... 2002 ஆம் ஆண்டில் அவர்களது EPIC எண்ணைஅ தேடஃதேர்தல் ஆணையம் கொடுக்கும் online மூலம் கண்டு  கண்டுபிடித்து விட்டாலும்.  அன்று  2002 ஆம் ஆண்டில். பெற்றோரின் பணி, தொழில் நிமித்தம் வாழ்ந்து இருந்த பூர்வீக வீடு... என்று முகவரி/ஊர்/ வட்டம்/ மாவட்டம்/ மாநிலம்/ தொகுதி/ மாறி இப்போது வேறொரு இடத்தில். (அதாவது அவர்களின் பூர்வீக கிராம வீட்டிலோ,  அல்லது வயதான ஓய்வுபெற்ற பெற்றோர் பிள்ளைகளுடனோ அல்லது சகோதரர்கள் பணியாற்றும் வீட்டு முகவரி/ஊர்/ வட்டம்/ மாவட்டம்/ மாநிலம்/ தொகுதி/யில் இருந்தால்) இரண்டு EPIC தகவலும் ஒன்றுக்கு ஒன்று முரண் என்று கூறி. பெற்றோர் பெயரை வாக்காளர் பட்டியலில்  இருந்து தேர்தல் ஆணையம் நீக்கி விடவும் வாய்ப்பு உண்டு.


5.இடைப்பட்ட 2002 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரைக்குமான காலகட்டத்தில். தொகுதி வரையறை மூலம் பல்வேறு தொகுதிகளின் பெயர்கள் எண் மாறியுள்ளன.  அதே முகவரியில் இருந்தாலும் கூட ஒரு தொகுதியில் இருந்த  ஊர் வேறொரு தொகுதியில் சேர்க்கப்பட்ட நிலையில். கடைசி வரியில் AC (Assembly Constituency) விபரம் மாறும். தொகுதி மாறவில்லை என்றாலும் பலருக்கு வாக்குச்சாவடி (Part No) மாறியுள்ளது. 

ஒவ்வோர் ஆண்டும். வாக்காளர் பட்டியல் அப்டேட் ஆகும்போது. Sr.No. மாறும். இதை எல்லாம் எப்படி சரி செய்வார்கள் என்பது எழுவினா? 2002 ஆம் ஆண்டிலுள்ள விபரங்களைத் தேடி எடுத்து அறிந்து சரியாக பூர்த்தி செய்ய இயலும்..? விபரங்கள்  "தெரியவில்லை" என்று படிவம் நிரப்பாமல் கட்டத்தை காலியாக விட்டு விட்டால். Enumeration எனும் கணக்கெடுப்புப் படிவத்தை..."ஆஹா, சூப்பர் எல்லாம் சரியாக உள்ளன" என்று ஏற்றுக்கொள்ளுமா. அல்லது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விடுமா.  தேர்தல் ஆணையம்..? என்பதும் தான் தற்போது கேள்வி.SIR எனும் Voter List Revision 2025: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி 1.ஜனவரி.2026-ஆம் தேதியைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, தமிழ்நாடு முழுவதும், 04.நவம்பர்.2025 முதல் 04.டிசம்பர் 2025 முடிய சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLO) கீழ்க்காணும் விவரப்படி வாக்காளர் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுவதன்படி.     



                     Pdf  Download.                                                              aspx https://erolls.tn.gov.in/Rollpdf/PdfDownload.aspx                                                                                    1. வாக்காளர் கணக்கெடுப்பின் போது தற்போதைய நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் சுய விபரங்கள் பகுதியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்கள் இரட்டைப் பிரதிகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் 04.நவம்பர் 2025 தேதி முதல் 04.டிசம்பர் 2025 ஆம் தேதி வரை வாக்காளர்களது வசிக்கும் இல்லங்களில் வழங்கப்படும்.



2.கணக்கெடுப்புப் படிவங்களை பெற்ற வாக்காளர்கள் கணக்கெடுப்புப் படிவத்தினை முழுவதுமாகப் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) வழங்க வேண்டும்.

3.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்கள் கணக்கெடுப்புப் படிவங்களை முதல் வருகையின் போது வாக்காளர்களிடம் வழங்க இயலவில்லை எனில் மூன்று முறை வரை வாக்காளர்களின் இல்லங்களுக்கு வருவார்கள்.




4.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்புப் படிவத்தின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொண்டு அவர்களது செல்போன் ECI செயலியில் உள்ளீடு செய்வார்கள். ஒரு பிரதியில் ஒப்புகை செய்து அந்தந்த வாக்காளர்களிடத்தில் வழங்குவர்.

5.கணக்கெடுப்பின் போது தங்களது குடும்பத்தில் காலஞ்சென்ற உறுப்பினர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பின் அதன் விவரத்தை வாக்குச் சாவடி நிலை அலுவலருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

6.மேலும், இரட்டைப் பதிவு, நிரந்தரமாக வெளியூர் சென்றுவிட்ட வாக்காளர்களது விவரம் தெரிந்திருப்பின் அதனை வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.

7.கணக்கெடுப்புப் பணியின்போது வாக்காளர்கள் எவ்வித ஆவணங்களையும் இணைத்து வழங்க வேண்டியது அவசியம் இல்லை. பழைய அடையாள அட்டை கருப்பு வெள்ளை புகைப்படம் இருந்தால் கலர் புகைப்படம் இணைக்கலாம்.

8.வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் திரும்பப் பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் மட்டுமே 09.12.2025 ஆம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 04.11.2025 முதல் 04.12.2025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களை சேகரிக்க உள்ளார்கள். வாக்காளர்கள் https://voters.eci.gov.in, என்ற வலைதளத்தை பயன்படுத்தி வாக்காளர் சுய விரபங்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் ECINET செயலி மூலம் படிவங்களை நிரப்பி பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.


எனவே, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் சரியாகத் தயாரிக்க ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது கள விசாரணையின் போது பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், தேர்தல் ஆணையத்திற்கு என தனிப்பட்ட பணியாளர்கள் இல்லை மேலும்  வருவாய்த் துறை, வளர்ச்சித்துறை, கல்வித்துறை ஆகியவை மட்டுமே படி செய்யும் நிலையில் அவர்கள் பணியை விட்டு விட்டு தேர்தல் பணி செய்வதால் அவர்கள் மக்கள் பணி பாதிக்க வாய்ப்பு உண்டு, மேலும் மாதாந்திர சம்பளம் மட்டும் அல்லாமல் தேர்தல் பணியில் சிறப்பு ஊதியமும் பெறும் நிலை உள்ளது, ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட சில பணியாளர்கள் தேர்வும் தேவையும் அவசியம்.இலங்கை மற்றும் பர்மா, மற்றும் இதர நாட்டு அகதிகள் இங்கு வாக்காளர் பட்டியலில் இனி சேர முடியாது, உயிருள்ள நபர்கள் மட்டுமே பட்டியலில் இருக்க வாய்ப்பு, மற்றும் அயல் நாடு சென்ற நபர்கள் என் ஆர் ஐ பட்டியல் மூலமே இணையலாம், மேலும் தகுதி என்பது பிறப்புரிமை, மற்றும் குடியுரிமை அடிப்படையில் 25 சதவீதம் பணி மட்டுமே தற்போது தேர்தல் ஆணையம் செய்கிறது.மீதம் 75 சதவீதம் பணி என்பது வாக்காளர் தாம் தந்தை முகவரி, மற்றும் அவரது  தாத்தா பாட்டி காலத்தில் உள்ள குடி உரிமை மற்றும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தாங்கள் வசித்து வந்த வசிப்பிடம் ஆகியவை அடங்கும். என்பதே NPR அப்போது அது ஒவ்வொரு நபரின் IC யாக அமையும். தற்போது கள்ள ஒட்டு கலாச்சாரம் பழகிய பல அரசியல் கட்சிகள் சாரை எதிர்க்கின்றனர்.  ஆக எதிர்காலத்தில் இந்தியாவில் வாக்காளர் ஆவதற்கு தனி மனித குடும்பம் குறித்த வரலாறு அறியாதவர்கள் இனி அறிவது முக்கியம்.மேலும் SIR கணக்கெடுப்பு மூலம் நடக்கும் பீஹார் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 வாக்கு பதிவு சதவீதம் உயரும் காரணம் சரியான கணக்கெடுப்பு தான். தற்போது அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூபாய். 100 கோடியைத் தாண்டியுள்ளது






இந்தியத் தேர்தல் ஆணையம், 2025 ஆம் ஆண்டு பீஹார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறவிருவதை  அடுத்து பீஹார் முழுவதும் 824 பறக்கும் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

2025 நவம்பர் 03 அன்று, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பல்வேறு அமலாக்க முகமைகள் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் ரூபாய்.9.62 கோடி ரொக்கம், ரூபாய்.42.14 கோடி (9.6 லட்சம் லிட்டர்) மதிப்புள்ள மதுபானங்கள், ரூபாய்.24.61 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள், ரூபாய்.5.8 கோடி மதிப்புள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூபாய்.26 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிற இலவசப் பொருட்கள் உட்பட சுமார் ரூபாய்.108.19 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.





தேர்தல்களின் போது பணம், மற்றும் போதைப்பொருள்கள், மதுபானம் மற்றும் பல சட்டவிரோதப்  பணப்பரிமாற்றத்தை தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு  அனைத்து அமலாக்க அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதற்கான சோதனை மற்றும் ஆய்வின் போது சாமானியக் குடிமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை  அமலாக்கத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியது.


இசிஐநெட் தளத்தில் உள்ள சி-விஜில் செயலியைப் பயன்படுத்தி குடிமக்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த புகார்களைப் பதிவுசெய்யலாம். 1950 என்ற உதவி எண்ணிலும் புகார்களைத் தெரிவிக்கலாம். இதே நிலை இனி தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் காணலாம்.SIR படிவம் நிரப்பும் வழிமுறைகள்




BLO வழங்கும் படிவத்தில் 

உங்கள் பெயரை SIR-2002 / 2005-ல் தேட: https://erolls.tn.gov.in/electoralsearch/

வாக்காளர் பட்டியல் PDF ல் பதிவிரக்கம் செய்ய:


SIR - 2002: https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

SIR-2005: https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...