குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 25, 2026) நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்த உரை இரவு 7:00 மணி முதல் ஆகாஷ்வாணியின் அனைத்து அலைவரிசையிலும் முழுவதும் ஒலிபரப்பப்படும். தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் முதலில் இந்தியில் ஒளிபரப்பப்பட்டு, அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படும். தூர்தர்ஷனில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உரை ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, தூர்தர்ஷனின் பிராந்திய அலைவரிசைகளில் பிராந்திய மொழிகளில் குடியரசுத் தலைவர் உரை ஒளிபரப்பப்படும். ஆகாஷ்வாணி தனது அந்தந்த பிராந்திய அலைவரிசைகளில் இரவு 9:30 மணி முதல் பிராந்திய மொழியில் ஒலிபரப்பும்.


கருத்துகள்