மலேசியாவில் நடந்த தவெக - காங்கிரஸ் இரகசிய ஒப்பந்தம் திமுகவுக்கு குட்பை சொல்லப்போகும் ராகுல் உடைகிறதா இந்திய கூட்டணி.?
2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகளைப் பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, தற்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஒரு தைரியம் வருவதற்கு முக்கிய காரணம், விஜய் தொடங்கி இருக்கும் த வெ க தான், அதாவது தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்துப் பேசி கடைசி நேரத்தில் கடந்த 2021 தேர்தலின் ஏமார்ந்தது போன்று ஏமார்ந்து விடக் கூடாது என்பதால் முன்னெச்செரிக்கையாக காங்கிரஸ் டெல்லி தலைமை பல அரசியல் நகர்வுகளை திமுகவுக்கு எதிராக நகர்த்தி வருகிறது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு தரப்பினர் திமுகவுக்கு ஆதரவாக பேச வைப்பது போன்று பேச வைத்து, மூத்த அரசியல் தலைவர் திருச்சி வேலுச்சாமி, மற்றும் பிரவின் சக்கரவர்த்தி மாணிக்கம் தாகூர் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் தலைவர்களை திமுகவுக்கு எதிராகப் பேச வைத்து வருகிறது காங்கிரஸ் டெல்லி தலைமை. காரணம் திமுகவை எதிர்கட்சிகள் கூட இந்த அளவுக்கு விமர்சனம் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு, மிகவும் கடுமையாக தொடர்ந்து திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார் அரசியல் அனுபவம் பெற்று திருச்சி வேலுச்சாமி.
இவரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதற்கு முக்கியக் காரணமே, இவரை பேசச் சொல்வதே காங்கிரஸ் தலைமை தான், அப்படி இருக்கையில், எப்படி காங்கிரஸ் திருச்சி வேலுச்சாமி மீது நடவடிக்கை எடுக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில் கடந்து சில வாரங்களுக்கு முன்பு திமுக தலைவர் முக ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு சந்தித்துபா பேசியது.
அதாவது வரும் சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளுக்கு குறையாமல் பெற வேண்டும் என்றால் திமுகவிடம் 60 தொகுதிகள் கேட்க வேண்டும் என்கிற முடிவில் , காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு 60 தொகுதிகள் கேட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் இதற்கு திமுகவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் கொடுக்கவில்லையாம். மேலும் காங்கிரஸ் ஐவர் குழு ஒருபக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த நிலையில் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யை பனையூரில் ரகசியமாகச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்த இரண்டு சந்திப்புமே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் அரசியல் நகர்வுகள் தான் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதி கொடுத்ததே அதிகம், இதற்கு மேல் அதிகம் தொகுதி வேண்டும் என்றால், கூட்டணியை விட்டு வெளியே செல்லட்டும் என்கிற முடிவில் இருக்கிறாராம் திமுக தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பிரவீன் சக்கரவர்த்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்துக்கு நேரடியாக பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அரசின் கீழ் தமிழகம் கடனில் மூழ்கித் ததத்தளிக்கிறது என விமர்சனம் செய்தது கூட்டணிக்குள் புகைச்சளை ஏற்படுத்திய நிலையில் சமிப்பதில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்காக நடிகர் விஜய் மலேசியா சென்றிருந்தார்.
மலேசியாவில் இருந்த விஜய்யை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணி குறித்துப் பேசிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரவீன் சக்கரவர்த்தி தரப்பில் விஜய்யை சந்திக்க நான்கு நபரை மலேசியாவுக்கு அனுப்பி இருக்கிறார், அவர்களும் விஜய்யை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இது மட்டுமின்றி கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகி இருக்கும் த வெ க நிர்வாகிகளுக்கு தேவையான உதவிகளை டெல்லியில் செய்து வருவது ராகுல் காந்திக்கு நெருக்கமான KV பைஜூ என்கிற காங்கிரஸ் முக்கியப் புள்ளி தான் என்கிற தகவல் வருகிறது. அந்த வகையில் த வெ க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.காங்கிரசை விட்டு விலகிய மூத்த தலைவராவார் அவர் செல்வம் பெருந்தகை மீது பகீர் புகார்!
காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான சூர்ய பிரகாசம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக, அதிமுக என பெரிய கட்சிகள் மட்டுமின்றி சிறிய கட்சிகள் கூட தயாராகி வருகின்றன. ஆனால் இந்தியாவின் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட, நாட்டில் அதிக முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலை தீர்க்க கடுமையாக போராடி வருகிறது. ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாடு அரசை விமர்சித்ததை தொடர்ந்து தமிழக காங்கிரஸில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மாநிலத் தலைவராக உள்ள செல்வம் பெருந்தகை உள்ளிட்ட ஒரு தரப்பினர் திமுக அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அமைதியாக பிரசீன் சக்கரவர்த்தி கருத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரசின் உட்கட்சி பூசலால் கட்சி அழிவுப்பாதையில் சென்று வருவதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி வெளிப்படையாகவே ஆதங்கத்தை கூறி விட்டார்.
காங்கிரசில் இருந்து சூர்யபிரகாசம் விலகல்
மேலும் செல்வம் பெருந்தகை காங்கிரசை திமுகவிடம் அடகுவைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சூர்ய பிரகாசம் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க. வின் அடிமைகள் கூடாரமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வம் பெருந்தகை தீவிர முயற்சி செய்கிறார். தமிழ்நாடு அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்பதை தி.மு.க அரசே தன்னுடைய 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் ஒத்துக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்தும் செல்வம் பெருந்தகை
இதை மறந்து பிரவின் சக்கரவர்த்தி உண்மைக்கு மாறாக தி.மு.க அரசின் மீது பழி போடுவதாக அவர் மீது வசைபாடி, வரும் தேர்தலில வெகுஜன தி.மு.க எதிர்ப்பினால் படு தோல்வி அடையப் போகும் தி.மு.க வோடு சேர்ந்து காங்கிரசும் படுதோல்வி அடையாமல் இருக்கவும், தமிழக வெற்றி கழகத்திற்கு தமிழக வாக்காளர்களிடம் வீசும் விஜய் ஆதரவு பேரலையை மற்றும் பிரகாசாமான வெற்றி வாய்பை கருத்தில் கொண்டு, த.வெ.க வோடு தேர்தல் கூட்டணி அமைத்தால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு
இதை மறந்து பிரவின் சக்கரவர்த்தி உண்மைக்கு மாறாக தி.மு.க அரசின் மீது பழி போடுவதாக அவர் மீது வசைபாடி, வரும் தேர்தலில வெகுஜன தி.மு.க எதிர்ப்பினால் படு தோல்வி அடைய போகும் தி.மு.க வோடு சேர்ந்து காங்கிரசும் படுதோல்வி அடையாமல் இருக்கவும், தமிழக வெற்றி கழகத்திற்கு தமிழக வாக்காளர்களிடம் வீசும் விஜய் ஆதரவு பேரலையை மற்றும் பிரகாசாமான வெற்றி வாய்பை கருத்தில் கொண்டு, த.வெ.க வோடு தேர்தல் கூட்டணி அமைத்தால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற காங்கிரசாரின் நீண்ட கால கனவை நனவாக்க போராடும் காங்கிரஸ் தொண்டர்களை தற்குறிகள் என்று செல்வம் பெருந்தகை கூறி வெளிப்படையாக அவமானப்படுத்துகிறார். ன சூரியப்பிரகாசம் சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை இதனால் செல்வபெருந்தகை தலைமையின் கீழ் வேலை செய்ய என் சுயமரியாதை இடம் கொடுக்காததால் இன்று முதல் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்துவது மட்டும் அல்லாமல் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலும் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.இரண்டாக உடையும் காங்கிரஸ் கட்சி ப.சிதம்பரம் கட்சிக்கு 10 சீட்..! பலிக்குமா மு.க.ஸ்டாலினின் ராஜதந்திரம் ..?
2027 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ராஜ்யசபா பதவி வேண்டும். அதற்கு திமுகவின் ஆதரவு தேவை என்பதில் அவர் கவனமாகவே இருந்து வருகிறார். இதனால் தான் ப.சிதம்பரமும், மு.க.ஸ்டாலினும் தனித்தனியாக சந்தித்தும் பேசி இருக்கிறார்கள்.
வழக்கம்போல 25 தொகுதிகளை மட்டுமே ஒதுங்கி தர முடியும். ஆட்சி அமைப்பதில் பங்கு தர முடியாது என உறுதியாக தெரிவித்து இருக்கிறது திமுக. இதற்கு சமாதிக்காவிட்டால் கூட்டணியில் இருந்து தாராளமாக விளகிக் கொள்ளலாம் என பின்னணிகளைக் கூறி எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழுவினர் தமிழக வெற்றிக்கழகத்துடன் திரைமறைவு பேச்சுவார்த்தையும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் இந்த பேச்சுவார்த்தை முடிவு பெற்று காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக்கழகத்துடன் இணையும் சூழல் ஏற்பட இருக்கிறது என்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாகவே இருக்கிறார். இதற்காக தொடர்ந்து ராஜதந்திரமாக அவர் பல திட்டங்களையும் வகுத்து செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாகவேகாங்கிரஸ் கட்சி தற்பொழுது இரண்டாக உடைய காத்திருக்கிறது. இதில் செல்வப்பெருந்தகை தலைமையிலான தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணையும். ஆனால், தமிழக காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சி உதயமாக இருக்கிறது. இந்த கட்சியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்குகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்பொழுது ராஜயசபா எம்பியாகவும் இருந்டு வருகிறார். வரும் 2027 வரை அவரது பதவிக்காலம் இருக்கிறது.
அவர் திமுக பக்கம் ஆதரவாக இருந்து வருகிறார். 2027 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ராஜ்யசபா பதவி வேண்டும். அதற்கு திமுகவின் ஆதரவு தேவை என்பதில் அவர் கவனமாகவே இருந்து வருகிறார். இதனால் தான் ப.சிதம்பரமும், மு.க.ஸ்டாலினும் தனித்தனியாக சந்தித்தும் பேசி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் ஏற்கனவே ஒரு காலகட்டத்தில் தமிழக காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்ற கட்சியை ப.சிதம்பரம் தொடங்கி இருந்தார். தற்போது அந்த கட்சியை மீண்டும் புதுப்பிக்கத் திட்டமிட்டும் இருக்கிறார். எனவே ப.சிதம்பரம் தலைமையில மற்றொரு காங்கிரஸ் கட்சி உதயமாக இருக்கிறது. இந்த கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவும் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முடிவானநிலை என செல்வம்பெருந்தகை மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் ப.சிதம்பரத்துடன் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி மாநில புதிய தலைவருடன் தவெகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவே வாய்ப்புள்ளது.
ப.சிதம்பரம் தலைமையிலான தமிழக காங்கிரஸ் ஜனநாயக கட்சி உதயமாகும் பட்சத்தில் அந்த கட்சிக்கு பத்து தொகுதிகளை ஒதுக்கி தர திமுக திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் காங்கிரஸ் கட்சியின் இறுதி கட்ட முடிவுகள் என்ன என்பது தெரிந்து விடும் என்கிறார்கள் கதர் கட்சி வட்டாரத்தினர்.பொதுவாழ்க்கையில் சுயநலம் மட்டுமே மிகுதியாகக் கொண்ட எவராலும் மக்களை வெல்ல முடியாது. மக்களை ஏமாற்றி பணத்தை வைத்து வென்றாலும் அதே மக்கள் மீண்டும் வீழ்த்திவிடுவார்கள்!
சுயநலமற்ற மக்கள் தலைவர்கள் ஓமந்தூரார், கு காமராஜர், M.G.இராமசந்திரன், வரிசையில் இன்றுவரை யாருமில்லாததே











கருத்துகள்