திருமதி வி. கே.சசிகலா நடராஜன் வருகை பாஜகவில் அண்ணாமலை பொறுப்பு தற்காலிக ஓய்வு,
நவெக விஜய் காங்கிரஸ் கூட்டணி இணைப்பு என தமிழ்நாடு அரசியல் களம் கலை கட்டுகிறதுகாங்கிரஸ் கட்சிக்கு திமுக தரும் 30 தொகுதியா அல்லது தவெக தரும் 78 தொகுதியா என்பது நாளை தெரியும் இந்த நிலையில் தனிக்கட்சி தான் துவங்க ஆயத்தமாகிறார் அண்ணாமலை என்ற யூகம் வருகிறது முரண்டு பிடிக்கும் பாஜகவின் முன்னாள் தலைவர் தனது தந்தையைக் காரணம் காட்டி தற்போது அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏன் வந்தது பாஜக தொண்டர்கள் சோர்வடைந்த நிலையில் சரணடையும் பாஜக தலைமை
டெல்லி தலைமை தன்னை பழிவாங்கி எடப்பாடி கே. பழனிசாமி கூறியதால் மாற்றிய தலைமை மீதான கடுப்பில் தான் தேர்தல் பணிகளில் இருந்து முன்னால் நிர்வாகியான அண்ணாமலை திடீரென விலகி இருப்பதாக தேசியக் கட்சியின் நிர்வாகிகள் முனுமுனுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தனிக் கட்சி தொடங்குவார் எனப் பேசப்பட்டு வந்தாலும், தற்போதை சூழலில் அந்தத் திட்டத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் அவரின் வார் ரூம் ஆதரவாளர்கள் தரப்பு கூறுகின்றனர்.
தேசிய கட்சியான பாஜகவின் தமிழ்நாடு பொறுப்புக்கு வந்த பின், தனது இஷ்டப்படி நிர்வாகிகளை ஆட்டி வைத்தவர் முன்னாள் நிர்வாகியான அண்ணாமலை ஆனால் தொண்டர்கள் அவரை நம்பினர் விரும்பினர் பாஜக தமிழ்நாட்டில் அரும்பியது என்பதே உண்மை நிலை . கட்சியில் தன்னைத் தாண்டி வளர்ந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தவருக்கு கடிவாளம் போட சீனியர்கள் பலரும் முயன்றனர். ஆனால் டெல்லி தேசிய தலைமை ஆதரவு இருந்ததால், முன்னால் நிர்வாகியான அண்ணாமலை பேச்சிற்கு யாரும் மறுபேச்சு பேச முடியாமலிருந்தனர். ஆடிட்டர் குருமூர்த்தி செய்த அரசியல் இதுவரை குழப்பம் நிறைந்த அரசியல் தான் அது வெற்றி பெறாது அது ஒரு மடத்தின் ஆதரவோடு சில ஆதரவாளர்களை திரட்டி பல அரசியல் பிரமுகர்களை நசுக்கி செய்த காழ்ப்புணர்ச்சி அரசியல்
ஆனால் கூட்டணிக்கு வரும் எதற்கும் துணிவான எடப்பாடி கே. பழனிசாமி போட்ட கண்டிஷனால் டெல்லி தலைமைக்கு வேறு வழி தெரியவில்லை. இதனால் உடனடியாக பாஜக நிர்வாகியான அண்ணாமலையை தூக்கி விட்டு, தென் மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை பதவிக்குக் கொண்டு வந்தது. அன்றைய தினமே கூட்டணியும் உறுதியான பின், அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டனர்.
அண்மையில் வெளியான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் கூட முன்னால் நிர்வாகியான அண்ணாமலையின் பெயரோ, அவரின் ஆதரவாளர்கள் பெயரோ இடம்பெறவில்லை. அதேபோல் என்டிஏ பொதுக்கூட்டத்தில் அவருக்கான உரிய மரியாதையும் அளிக்கப்படவில்லை. இதனிடையே கோயமுத்தூர் கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து புதிய கட்சியைத் தொடங்கப் போவதாகவும் சில தகவல் வெளியாகியது.
பாஜக முன்னால் நிர்வாகியான அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் கூட தொடங்கப்பட்டன. இதனால் அவர் புதிய கட்சி தொடங்கலாமா என்று ஆலோசித்ததாக விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கினர். இப்படியான சூழலில் தான் டெல்லியின் சாணக்கியர் உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பெயரில் 2 முறை டெல்லிக்கு சென்றார் அண்ணா மலை. அதன்பின் சில கூட்டணித் தலைவர்களை மட்டும் சந்தித்திருந்தார்.
ஆனால் கூட்டணி இறுதியான நேரத்தில் கூட அண்ணாமலை அந்த இடத்தில் இருக்கவில்லை. சென்னையில் கூட்டணி இறுதியான போது, அவர் கோயம்பத்தூர் பகுதி யில் முகாமிட்டிருந்தார். இந்த நிலையில் தேர்தல் நெருங்கிட்ட சூழலில் அவர் வசம் 6 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அந்த 6 தொகுதிகளையும் தேர்தலுக்கு தயார்ப்படுத்தவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதில் விருகம்பாக்கம், மதுரை தெற்கு, காரைக்குடி, சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் திடீரென அவர் பணி பதவி இறக்கம் காரணமாக யூடர்ன் போட்டுள்ளார். தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது தந்தையின் உடல்நலன் காரணமாக பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாகக் கூறி நயினார் எடப்பாடி உள்ளிட்ட பலரையும் வாயை அடைத்திருக்கிறார்.
ஏற்கனவே தமிழ்நாடு நிர்வாகிகளை ஆலோசனைக்கு டெல்லி அழைத்த போது, திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகக் கூறி ஜாகா வாங்கினார். அன்றைய நாளில் மட்டும் 11 திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது தந்தை உடல்நலன் காரணமாக அரசியல் பணிகளிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கிறார். இது தேசியக் கட்சியான பாஜக வட்டாரங்களில் சில முனுமுனுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் தலைவர் பதவியில் இருந்து இறக்கிய போதே அவருக்கு டெல்லி தலைமை சில உறுதிகளை கொடுத்திருக்கிறது. ஆனால் இதுவரை அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்று புலம்பி இருக்கிறார். இதன் காரணமாக டெல்லி பாஜக தலைமை மீது அவர் தரப்பு கடுப்பில் இருப்பதாக தி நகர் பகுதி பாஜக கட்சிக்காரர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் என்னதான் டெல்லி தலைமை மீது அதிருப்தியில் இருந்தாலும், அண்ணாமலை வெழியேறி புதிய கட்சி தொடங்கும் திட்டத்தை பற்றி எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று அவரின் வார் ரூம் நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் பணிகளில் இருந்து விலகி இருப்பது பின்னடைவாகும் என்றும் அவரின் ஆதரவாளர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றன்ர். இதனால் டெல்லி தலைமை விரைவில் அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தை நடத்கும் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.அண்ணாமலை விலகியது.. முழுக்க முழுக்க பாஜக திட்டம்!! என காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு நெருக்கபான மற்றும் தற்போது திமுக ஆதரவாளராக உள்ள முன்னால் தலைமைச் செயலாளர் உறவினர் ஆன நடிகர் எஸ்.வி. சேகர் சொல்லும் தகவலை புறக்கணித்து விட முடியாது காரணம் அவர்வீட்டில் கெடடுப்போன பாலை மாற்றிக் கொடுத்த எடப்பாடி கே. பழனிசாமி நன்கு அறிவார்.
தமிழ்நாடு தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலையாக விலகவில்லை, அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகவில்லை. அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால் ஒரு தொகுதியிலும் பாஜக வெற்றி பெறாது என்பது நயினார் நாகேந்திரனுக்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் தெரியும். அதனால் இவரை பொறுப்பாளராக அறிவித்த 6 தொகுதிகளிலும் நிச்சயம் பாஜக வெல்லாது என்பது தெரியும்.
மேலும் தனது தலைமையில் தமிழ்நாடு பாஜக நிறைய இடங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெயிக்கவில்லை என்கிற போது வேறு தலைவரான நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக வென்றுவிட கூடாது என்ற எண்ணம் கொண்டவர் அண்ணாமலை.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னைத் தவிர வேறு யாரும் வெல்லவே கூடாது என்ற எண்ணத்துடன் தேர்தல் பணியாற்றினார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெல்லாததற்கு காரணம் அண்ணாமலை தான். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்தார். (இது அவர் மீதான வெறுப்பு கரணமாக பதிவு) என நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 ஏப்ரல் மாதம் நடத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் ஜரூராக பணியாற்றி வருகிற நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் பேரவைத் தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் செல்ல உள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் பார்த்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமையாகும். இதனால் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.மாநில தலைவர் இல்லை, எந்த ஒரு அதிகாரமும் இல்லை,
ஆனால் ஒரே ஒரு பேட்டியின் மூலம் இன்று தமிழ்நாடு முழுவதும் அவர் மட்டும்தான் தலைப்பு செய்திமாக
தமிழ்நாட்டின் எதிர்காலம் யாருக்கு என்று தெரியும்,
தன்மானம் என்பது அரசியல்வாதிகளுக்கு இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் மத்தியில்,
தன்மானமிக்க ஒருவன் இருந்தால் அனைவருக்கும் அது கசக்கத்தான் செய்யும்,
காலமும், நேரமும் அனைவருக்கும் சொந்தமானது இல்லை,டெல்லி அதிகார மையம் எடுத்த ரகசிய சர்வே படியே அரசிமல் சதுரங்கக் காய்கள் நகர்கிறது . நடிகர் விஜய்யின் தவெகவுக்கு 120 தொகுதிகள் உறுதியாக கிடைக்கும் என்ற உளவுத்துறை தகவல் காரணமாக.. அதிர்ச்சியில் பாஜக வட்டாரம். திமுக ஜெயிக்காது என்ற ஒரே திருப்தி தான் தற்போது அமித்ஷாவுக்கு.. திமுகவை தோற்கடிக்க அமித்ஷா திட்டம் போட்டார்.. ஆனால் அவர் வேலையை நடிகர் விஜய் தவெக மூலம் பார்த்துவிட்டார், இனிமேல் தமிழ்நாட்டில் கூட்டணி என்ற பருப்பு வேகாது என்பது தெளிவாகிறதா?
தமிழ்நாடு அரசியலில் இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை டெல்லி மேலிடம் நடத்திய ரகசிய சர்வே முடிவுகள் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாகத் தேர்தல் நெருங்கும் வேளையில் உளவுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் டெல்லி அதிகார மையம் தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை கண்டறிவது வழக்கம். அந்த வகையில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 120 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்தை ஊழல் ஆட்சியாளர்களை அதிர வைத்துள்ளது. இந்த தகவல் கசிந்த உடனே பாஜகவின் டெல்லி தலைமை மற்றும் தமிழ்நாடு நிர்வாகிகள் மத்தியில் ஒருவித பதற்றமும், அதே சமயம் கணிக்க முடியாத மௌனமும் நிலவி வருகிறது.
பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்திக் கொள்ள பல வியூகங்களை வகுத்து வந்தது. குறிப்பாக திமுகவின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலம் தங்களது செல்வாக்கை உயர்த்தலாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கணக்குப் போட்டிருந்தனர். ஆனால், இந்த சர்வே முடிவுகள் பாஜகவின் கணக்குகளை தலைகீழாக மாற்றியுள்ளன. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, நடுநிலை வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு பெருமளவில் தவெக பக்கம் சாய்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாஜகவின் வளர்ச்சி வேகம் தடைபட்டுள்ளதோடு, அக்கட்சி எதிர்பார்த்த இரட்டை இலக்க இடங்கள் என்பது தற்போதைய சூழலில் கேள்விக்குறியாக மாறியுள்ளது பாஜக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மறுபுறம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்த செய்தியில் ஒரு சிறிய திருப்தி இருப்பதாகவே கூறப்படுகிறது. அது என்னவென்றால், வரும் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதுதான். திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதில் அமித்ஷா மிகவும் உறுதியாக இருந்தார். அதற்காக பல்வேறு அரசியல் காய்களை அவர் நகர்த்தி வந்த நிலையில், இப்போது ரகசிய சர்வே முடிவுகள் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று சுட்டிக்காட்டுவது அவருக்கு ஓரளவுக்கு நிம்மதியைத் தந்துள்ளது. இருப்பினும், அந்த வெற்றியை பாஜக கூட்டணி அறுவடை செய்யாமல் நடிகர் விஜய் தட்டி செல்வது என்பது பாஜகவின் நீண்ட காலத் திட்டங்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாகவே பார்க்கப்படுகிறது.
உண்மையில், திமுகவை தோற்கடிக்க அமித்ஷா என்னென்ன திட்டங்களை வைத்திருந்தாரோ, அந்த வேலைகளை விஜய் மிக எளிதாக செய்து முடித்துவிட்டாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் ஒரு வலுவான மாற்று சக்தியிடம் செல்வது ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமைச்சர் அமித்ஷா வகுத்த வியூகங்களை விட, நடகர் விஜய்யின் நேரடித் தொடர்பு மற்றும் அவரது மக்கள் செல்வாக்கு களத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் தவெகவின் எழுச்சி அசுர வேகத்தில் இருப்பதாக இந்த சர்வே முடிவுகள் கோடிட்டு காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் இனிமேல் ‘கூட்டணிப் பருப்பு வேகாது’ என்ற எதார்த்தமான உண்மையை இந்த ரகசிய சர்வே உணர்த்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வழக்கமாக அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்து சில இடங்களை பெற்று வந்த தேசிய கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணி. நடிகர் விஜய் கட்சி தவெக தனித்து போட்டியிட்டு 120 இடங்களை நெருங்குவார் என்றால், அது தமிழ்நாடு அரசியலில் பல ஆண்டுகளாக நிலவி வந்த இருமுனை போட்டியை உடைத்து எறியும். மக்கள் இப்போது பெரிய கட்சிகளின் கூட்டணிக் கணக்குகளை விட, ஒரு புதிய மாற்றத்தையே விரும்புகிறார்கள் என்பது இந்த ரகசிய ஆய்வின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.
இறுதியாக, இந்த சர்வே முடிவுகள் ஒருபுறம் உற்சாகத்தையும் மறுபுறம் பாஜகவுக்கு கலக்கத்தையும் கொடுத்திருந்தாலும், தேர்தல் களம் என்பது எப்போதும் மாற்றங்களுக்கு உட்பட்டது. ஆனால் டெல்லி வரை சென்றுள்ள இந்த ‘விஜய் மேஜிக்’ பற்றிய தகவல், தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கப் போவதை உறுதிப்படுத்துகிறது. திமுகவை வீழ்த்த அமித்ஷா போட்ட திட்டத்தை விட, விஜய்யின் வருகை அதிக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
வரும் மாதங்களில் கூட்டணிகள் மாறலாம், புதிய வியூகங்கள் வகுக்கப்படலாம், ஆனால் 120 தொகுதிகள் என்ற அந்த ரகசிய இலக்கம் தமிழ்நாடு அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக் என்பதில் மாற்றமில்லை.






































கருத்துகள்