போலி ஆருடம் கூறும் காலி காமுகனுக்கு பாலியல் வழக்கில் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் ஆருடம் பரிகாரம் என்ற பெயரில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்து போக்சோ வழக்கில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்நில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு மூலம் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட குற்றவாளிக்கு, இப்போது விசாரணை முடிவில் தண்டனை உத்தரவு விரைவு நீதிமன்றம் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்த
போலி ஆருடம் பார்த்த ராமகிருஷ்ணன் எனும் குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போலி ஆருடம் பாரத்தவருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் மானகிரி இராமகி ருஷ்ணன் (வயது 52). ஜோதிடர். இவரிடம் கடந்த 2021ஆம் ஆண்டு, ஒரு பெண் தன் னுடைய 18 வயது மற்றும் 14 வயதுடைய மகள்களுடன் ஜோதிடம் பார்க்க வந்துள்ளார். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெண் கூறியுள்ளார். இதனையடுத்து இருவ ருக்கும், பரிகார பூஜை செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண், மகள்களுடன் ஜோதிடர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை ஒரு அறையில் தனியாக இருக்கும்படி கூறிவிட்டு, இரண்டு சிறுமிகளையும் மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று ஆருடம் பார்ப்பவர் பலாத்காரம் செய்துள்ளார்
இந்த தகவலை யாரிட மும் தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தெரி வித்தால் தாயும், தந்தையும் இறந்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமிகள் இருவரும், இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர். இரண்டு சிறுமிகளுக் கும் அடிக்கடி உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. ஆண்டுக்கணக்கில் உடல்நலப் பாதிப்பு தொடர்ந்ததால், இருவரையும் மருத்துவமனையில் பலாத்காரம் செய்ததை சேர்த்து பரிசோதனை செய்துள்ளனர். அதில் பால்வினை நோயால் சிறுமிகள் பாதிக்கப்பட் டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமிகளிடம் விசாரித்த போது, ஜோதிடரிம் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போலி ஆருடம் கூறும் நபர் ராமகிருஷ்ணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கின் விசாரணை, சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், குற்றம் சாட்டப் பட்ட போலி ஆருடம் கூறும் குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூபாய் .2 லட்சம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட 2 சிறுமி களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கும் உத்தரவிட்டார். சிவகங்கையில் போக்சோ நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் முதல் முறையாக அதிகபட்ச தண்டனையாக ஒரு குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2023-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில், 23.02.2026 ல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளிக்கு நான்கு குற்றச்சாட்டுகளில் தலா 50 ஆண்டுகள் வீதம் மொத்தம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் .2,00,000 அபராதம் விதிக்கப்பட்ட வழக்கில் திறம்பட குற்றப் புலன் விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சிவ பிரசாத், இ.கா.ப., பாராட்டுதா தெரிவித்துள்ளார்

.jpg)












கருத்துகள்