பாரதிய ஜனதா கட்சியில் யாராவது தலைவராகலாம் ஆனால் அமைப்புப் பொதுச்செயலாளராக ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் மட்டுமே பதவி வகிக்க முடியும்
பிரதமர் நரேந்திர மோடி கூட குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைப்புப் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். அந்தப் பொறுப்பிலிருந்து தற்போது கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளார். சமீபத்தில் முன்னாள் பாஜக தமிழ்நாடு தலைவர் தேர்தல் தொகுதிப் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில் அதுகுறித்து விமர்சனம் வைத்ததாக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மீது பாஜகவின் ஒரு தரப்பு புகார் எழுப்பிய நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராயநகபாஜகவின் நகரில் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நிர்வாகிகள் மத்தியில் காட்டமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சில முக்கியப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில் முன்னாள் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நிர்வாகிகள் மத்தியில் காட்டமாகப் பேசியதாகக் தெரிகிறது.
"தமிழ்நாட்டில் இன்னும் 60 நாட்களுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. பேட்டி தருவது மட்டும் தான் கட்சியினுடைய பணியாக இருக்கக் கூடாது. மூத்த தலைவர்கள் தங்களை மட்டுமே முதன்மைப்படுத்திக் கொள்ளக் கூடாது. மூத்தவர்கள் தங்களுடைய தொகுதிகளுக்குச் சென்றால் அந்தப் பகுதியிலுள்ள நிர்வாகிகளையும் முன்னிலைப்படுத்த வேண்டும்" என கட்டமாக தெரிவித்ததாகத் தகவல்கள் அதேபோல் தொகுதிப் பொறுப்பில் தலைவர் குறித்து விவாதிக்கத் தடை விதிக்கப்படுகிறது என பி.எல்.சந்தோஷ் பேசியதாகத் தகவல்
இந்த நிலையில் சென்னை சேத்துப்பட்டு எம்வி நயுடு தெருவில் உளள பஞ்சவடியில் உள்ள ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜகவின் அமைப்புப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டதாகத தகவல்கள் வெளியாகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் அமைப்புப் பொதுச்செயலாளராக உள்ள கன்னியாகுமாரி மாவட்ட முழுநேர சுயம்சேவக் கேசவவிநாயகம்இந்த நிலையில் மதியம் 3 மணிக்கு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் சென்ற முன்னால் பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு அமைப்புப் பொது செயலாளர் பி. எல். சந்தோஷை சந்தித்துப் பேசிய நிலையில் பாஜகவின் அரசியல் களம் விறுவிறுப்பாகிறது
அரசியல் கட்சி என்றால் சில கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும், அதுவே உள்கட்சி ஜனநாயக முறை இந்தியாவில் பா ஜ க இப்போது மிகப் பெரிய கட்சி, இங்கே முழு ஜனநாயகமும் சுதந்திரமும் இருக்கிறது, விரைவில் அனைத்தும் சரியாகி விடும் செய்தி
ஊடகங்கள் தான் தற்போது தங்கள் இஷ்டத்திற்கு திரித்து செய்திகளை வெளியிடுகிறது, நாம் அதை எல்லாம் புறம் தள்ள வேண்டும்தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் முக்கிய ஆலோசனை நடத்தியது
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக (மூ) தமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற நிலையில் சட்டசபைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க என்டிஏவில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைக்க பாஜக மேலிடம் திட்டமிட்டு இதற்காக பாஜவின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வந்துள்ளார் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக இன்னும் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
5 சட்டசபைத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயணப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததற்கு, அவரது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி இருந்தார். ஆனால் உண்மையில் அண்ணாமலை, கட்சிக்குள் இருக்கும் அதிருப்தி காரணமாகவே இந்த முடிவை எடுத்தார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
பாஜகவில் நிலவும் சலசலப்பு அண்ணாமலை, தமது பொறுப்பிலிருந்து எளிதாக விலகியதைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவில் சலசலப்புகள் நீடித்து வரும் நிலையில் அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வருகை தந்துள்ளார். பாஜக நிர்வாகிகள் உடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய போது கட்சியினருக்கு சில அறிவுரைகள் வழங்கியதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
பி.எல்.சந்தோஷ் தான் அண்ணாமலையின் அரசியல் குரு . கர்நாடகாவில் அண்ணாமலை ஐபிஎஸ் அலுவலராகப் பணியாற்றிய போது இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்தே அண்ணாமலை பாஜகவில் இணைந்தார் பிஎல் சந்தோஷ் மூலமாகவே அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர் பதவியையும் பெற்றார்
இந்நிலையில் 2026 சட்டசபைத் தேர்தல் களத்தில் அண்ணாமலை எடுத்த முடிவால் கட்சிக்கு மட்டுமின்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்வதற்கு பி.எல்.சந்தோஷ் முக்கிய கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியில் இருந்து விலகிய அண்ணாமலையை சந்தித்து அவரை சமாதானப்படுத்தவும் பிஎல் சந்தோஷின் இந்த தமிழ்நாடு வருகை கமலாலயத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.பாஜக அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை பொறுப்பில் இருந்து விடுவித்த பின் ஆர்எஸ்எஸ்சில் இருப்பவர்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற நிலையில் யார் புதியவர் என்ற நிலை எழுந்துள்ளது. அவரது இரண்டு நாள் பயணம் அதை முடிவு செய்யும்.
RSS பிராந்திய பிரசாரக் பிரசோப்குமார் அமைப்புப் பொதுச்செயலாளராக தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்புப் பொறுப்பாளாராகவும் நியமிக்கப்பட வாய்ப்பு!








கருத்துகள்