முன்னர் மண்டைவெல்லம் விற்ற சிலுவம்பாளையம் பழனிசாமிக்கு வேலை போட்டுக் கொடுத்ததாக அமைச்சரின் தாக்கு!
காங்கிரஸ் கூட்டணியை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொள்வார் திமுக கூட்டணிக்கு கங்கிரஸ் கட்சி வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும், காங்கிரஸில் ஆளில்லை, நாம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி அரசியல் நடத்த முடியாது என திமுகவின் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியது தான் தற்போது பேசுபொருளாகிறது மேலும், மண்டைவெல்லம் விற்ற எடப்பாடி (சிலுவம்பாளையம்) பழனிசாமிக்கு நான் தான் பொதுபணித்துறை அமைச்சராக இருந்த போது வேலை போட்டுக் கொடுத்தது எனப் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலை குனியாது எனும் தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடந்ததில் தமிழ்நாடு வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஎஸ்.இராஜகண்ணப்பன் மற்றும் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்த்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்
பொதுக் கூட்டத்தில் அமைச்சர் இராஜகண்ணப்பன் பேசுகையில்," மதுரை கிழக்குத் தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் உள்ள 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். நாம் தற்போது பலரைத் தோற்கடிக்க வேண்டும். இங்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவைத் தோற்கடிக்க வேண்டும்.
மத்திய அரசு நியாயமானதைச் சொன்னால் ஏற்போம். நியாயமற்றதைச் சொன்னால் ஏற்க மாட்டோம். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நமக்கு மோசமான அளவில் நிதி கொடுக்கிறார்கள். பீஹார் உத்தரபிரதேசத்திற்கு அதிக நிதியைக் கொடுக்கிறார்கள். அதிமுக என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது. அங்கிருந்த தொண்டர்கள் எல்லோரும் இங்கு வந்துவிட்டார்கள். நிர்வாகிகள் சிலர் சீட்டுக்காக அங்குள்ளனர். நான் நிறைய தோல்விகளைச் சந்தித்துள்ளேன். அதற்காக எப்போதும் வருத்தப்படவில்லை. மிட்டா மிராசுகளை பண்ணையார்களை எதிர்த்து உருவானது தான் திமுக,
காங்கிரஸ் கூட்டணியை பற்றி முதல்வர் பேசிக்கொள்வார். வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும். காங்கிரஸைப் பற்றி நான் குறை சொல்லவில்லை. காங்கிரஸில் ஆள் இல்லை. நாம் இல்லாமல் காங்கிரஸ் அரசியல் நடத்த முடியாது. அது முதல்வர் முடிவு எடுத்துக்கொள்ளட்டும். தவெக பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இல்லை புதிதாக கட்சி தொடங்குவது பெரிய விஷயமில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. மதுரையில் மாநாடு நடைபெற்றது அங்கு யார் யார் வருகிறார் என்று வண்டியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான்கு பேர் தான் பெரிய ஆட்களாக இருந்தார்கள். மற்றவர்கள் 15 வயதுள்ள ஆட்கள் அதிகமாக இருந்தார்கள். எம்ஜிஆர் திமுகவில் இருந்து ஒரு சின்ன அரசியல் செய்தார். எம்ஜிஆர் 30 ஆண்டுகள் திமுகவில் இருந்ததால் தான் பக்குவப்பட்டார். நமது முதல்வர் 55 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர். யார் பின்னால் எங்களைப் போன்றவர்கள் செல்ல வேண்டும் என உள்ளது. எனக்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏ ஆனவர். என்னைச் சந்திக்க ஜெயலலிதா அழைத்த போது சும்மா சென்று வா எனச்சொன்ன தலைவர் கருணாநிதி. என்னைப் பிள்ளை போல வளர்த்தவர் கருணாநிதி. (இவரை அடையாளப்படுத்தியவர் ஜெயலலிதா)
அரசியல் தலைவருக்கு இலக்கணமானவர் கருணாநிதி. நான் இளையான்குடியில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற போது என்னை அதிமுக கட்சிக்கு மீண்டும் அழைத்தவர் ஜெயலலிதா. நான் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் போது 64ஆயிரம் பேருக்கு வேலை போட்டுக் கொடுத்தேன். இப்போது அப்படிப் போட முடியவில்லை. மந்திரி பதவி என்பது வரும் போகும். அதிமுகவில் இப்போது இருப்பவர்கள் தலைவர்கள் இல்லை. ஒருகாலத்தில் மண்டைவெல்லம் விற்றவர் எடப்பாடி பழனிசாமி. தொழில் நஷ்டமடைந்து என்னிடம் வந்தார். நான் எடப்பாடி பழனிசாமிக்கு வேலை போட்டுக் கொடுத்தவன். பாஜகவின்
அமித்ஷா எடப்பாடிக்கு எதிராக
பின்பு செங்கோட்டையனை அழைத்து வந்தார். தற்போது அமித்ஷா பிடியில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அங்கு தங்கமணி வேலுமணி வீரமணி எல்லாம் மணி மணி என உள்ளனர். நன்றாகச் சம்பாதித்து இன்று பெரிய கோடீஸ்வர மணிகளாக எடப்பாடி உள்ளார். வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படும் இயக்கம் திமுக அல்ல.
ஸ்டாலினை விட்டுவிட்டால் நமக்கு நல்லதல்ல. குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்பது போல யாருக்கும் எந்தக்குறையும் இல்லை. அரசியல்வாதி என்பது தொழில் தான்" என்றார். ஆஹா இந்த நிலையில் ரூபாய்.6550 கோடிகளை இன்று காலை 1.31 கோடி பெண்மணிகளுக்கு கொடுத்து வாக்குகளை வேட்டையாடுகிறது. அவர் சொன்னதுபோல அரசியல் தொழிலில் முதலீடு செய்கிறது ஆரியர் எதிர்ப்பு திராவிட மாடல், பணம் கொடுப்பது தான் இங்கு தோல்வியை உறுதிப் படுத்துவதாகப் பேசப்படும்! எல்லாம் சரி திமுகவின் திருமங்கலம் சூத்திரம் என்பது அந்தக் கட்சிக்காரன் பணம்.
இது பழைய கதை ஆனால் இப்போது வழங்க உள்ள பணம்
இது மக்களின் வரிப் பணம். அரசு வட்டிக்குக் கடன் வாங்கி, திமுக வாக்குகளை விலைக்கு வாங்குகிறது என்பதே பொதுவான பார்வை அதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.
ஊழலே இது ஊரை அடித்து உலையில் போடுவதே ஊழல் ஆட்சி என்ற நிலை என மக்கள் பேசுவது அமைச்சருக்குப் புரிந்ததா எனத் தெரியவில்லை, இன்னும் பத்து நாளில் தேர்தல் அறிவிப்பு வந்து விடும் சட்டம் படித்து பல துறைகளில் அமைச்சராக இருந்தவர் அரசியலைத் தொழில் எனக் கூறுவது ஊழல் ஆதரவுப் பேச்சாகவே பார்க்கமுடிகிறது, இதில் பொதுநீதி யாதெனில்:- கோடைகாலம் வந்தால் பணம் தரவேண்டுமென்பது யார் கருத்து,? அபபடியானால் குளிர்காலம், இலையுதிர்காலம், வசந்தகாலம், பனிக்காலம், என எல்லாக்காலமும் எவ்வளவு தருவீர்கள். ஆக இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் தான்.கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் காலமே வரவில்லையே ஏன் இப்போது தேர்தல் காலம், மக்களை ஊழல் வாதிகளாக மாற்ற ஊழல் காலம்.











கருத்துகள்