மகளிர் உரிமை தொகை என்பதே தவறு அது எந்த உரிமை?
அது யாருக்குள்ள உரிமை? இதில் உரிமை உள்ளவர்கள் யார்?, உரிமை இல்லாதவர்கள் யார்? எந்த அடிப்படையில் எதற்கான உரிமை என்பது குறித்து சரியான விளக்கம் இதுவரை இல்லை ஆனால் அது மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில்
திமுக அரசு குடும்ப அட்டையில் கணவர் இல்லாத அல்லது கணவரை குடும்மத் தலைவராக ஏற்காத அல்லது காட்டாத தங்களை மட்டும் முன் நிறுத்தி மாற்றம் செய்த பெண்களில் 60 சதவீதம் தவிர்த்து 40 சதவீதம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உரிமைத் தொகையை வங்கியில் 5000 ரூபாய் செலுத்தி பெண்களின் உரிமைத்தொகை என்கிற பெயரில் தங்களது ஓட்டு வங்கிக்கான ஒரு திட்டமிட்ட லஞ்சத்தைக் கொடுத்திருப்பது தான் மகளிர்உரிமைதொகை எனும் பெயரில்
திமுக அரசு குடும்ப அட்டைப் பெண்களில் 60 சதவீதம் தவிர்த்து 40 சதவீதம் உள்ளவர்களுக்கு மட்டுமே வங்கியில் 5000 ரூபாய் செலுத்தி பெண்களின் உரிமைத்தொகை என்கிற பெயரில் தங்களது ஓட்டு வங்கிக்கான லஞ்சத்தைக் கொடுத்திருப்பது மற்ற் உரிமை இல்லாத மகளிரை கொந்தளிக்க வைத்துள்ளது ஏனென்றால் இது அரசு பணம், நமக்குத் தெரிந்து ஒரு மாநகராட்சி மன்ற உறுப்பினர் வீட்டில் உள்ள மகளிர், மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்து வருவாய் ஈட்டும் கணவர் உள்ள மகளிர் என பலர் விதி மீறல் மகளிர், இவர்கள் குடும்ப அட்டையில் மட்டுமே விவாகரத்தானவர்கள், அல்லது குடும்ப அட்டையில் மட்டுபமே கணவரை நீக்கி கொலை செய்தவர்கள் தற்போது அணைத்து செய்தி மற்றும் சமூக ஊடகங்களிலும் இது பேசு பொருளாகியுள்ளது. குடும்பப் பெண்களுக்கு உதவித்தொகை என்கிற பெயரில் தேர்தல் காலம் நடக்கும் மூன்று மாதத்திற்கு ரூபாய் மூவாயிரத்தையும் பிறகு கோடைகாலச் சிறப்புத்தொகை என்கிற பெயரில் மேலும் ரூபாய் 2000த்தையும் இலவசமாகக் கொடுத்து விட்டு அதை பெண்களின் உரிமைத்தொகை என்று புத்திசாலித்தனமாகக் கூறுகிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் பல நிறுவனங்கள் வழியாக அரசு அதிகாரத்தின் மூலம் சம்பாதித்த ஊழல் பணம் போக அரசு கஜானாவில் இருக்கும் பணம் இப்படியாக மறு தேர்தல் மூலம் ஆட்சிக்கு வரப்பயன்படுகிறது.
தமிழ்நாடு வாக்காளர்களைப் பொறுத்தவரையில் இந்தப் பணம் பெண்களுக்கான உரிமை என்கிற முறையில் செயல்பட்டு அந்தப் பணத்தை பெற்றுக் கொள்வதில் யாருக்கும் எந்தவித வெட்கமும் இல்லாமல் ஏற்கும் படி சராசரியாக்கப்பட்டுள்ளது.வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் இப்படி எல்லாம் தரமாட்டார்கள் என்கிற கருத்தை பரப்பி அச்சத்தில் அதைப் பெற்றுக் கொண்டு திமுகவிற்கான ஓட்டாக மாற்றுவதில் இந்தப் பணம் எதிர்கால அரசியலாக உறுதிப்படுத்தப்படுகிறது. வரும் நடப்புத் தேர்தலில் விலை போன மக்கள் ஜனநாயகத்தின் அதிர்ச்சி இப்படியாகத்தான் இருக்கிறது. ரூபாய் 6, 550 கோடியை கடன் பெற்று இந்தத் தொகை தரப்படுகிறது என்பது வேதனை.
இருக்கட்டும் தமிழ் நாட்டில் மொத்தம் பெண்கள் 2 கோடியே71 லட்சம். இதில் 1 கோடியே 31 இலட்சம் பெண்கள்
5000 ரூபாயை பெற்றனர்.மீதம் 1 கோடி 46 இலட்சம் பெண்களுக்கு இந்த மகளிர் என்ற உரிமைத் தொகை கிடைக்க வில்லை. அதில் அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்தும் நேரமையாளர் மனைவிகளுக்கு வழங்கவில்லை,
பொதுவான பார்வையில் வைத்துப் பார்த்தால் பெண்களுக்கு ஏதோ உதவித் தொகை கிடைத்தது மாதிரியும் அவர்களுக்கான நலன்களைச் செய்தது மாதிரியும் இந்தத் திட்டம் தோன்றினாலும் அதாவது அதன் நீண்ட கால விளைவுகளாகப் பார்த்தோமேயானால் இந்த உதவித்தொகையை நம்பியே பெண்களைக் குடும்பத்துக்கு வெளியே வாழ வைப்பது மாதிரி ஒரு மோசடி நடந்து கொண்டிருக்கிறது. மீனைக் கொடுப்பதற்கும் மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதற்கும் இடையே ஒரு தனிப்பட்ட குடும்ப முதலாளித்துவ அரசு தமிழ்நாட்டின் மீது ஒரு மோசமான வலை பின்னல் போல படர்ந்து இருக்கிறது. கல்வி இலவசமாக இல்லை அது 85 சதவீதம் தனிமார் மயம், மருத்துவம் இலவசம் இல்லை, அது இன்சூரன்ஸ் மயம், குடிநீர் இலவசமில்லை, அரசு மக்களுக்கு வழங்கும் சானறிதழ்கள், ஆவண நகல்கள், வீட்டு வரிகள் இலவசம் இல்லை, பால் மின்சாரம், பேருந்து கட்டணம் உயர்வு காரணமாக ஐந்து வருடத்தில் மக்கள் படும் வேதனை, துயரம் எல்லாம் அனுபவித்து, இன்றைக்குத் தமிழ்நாடு வாக்காளர் சமூகம் இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களித்து விடலாம். ஆனால் நாளை இதனுடைய விளைவுகளை அனைத்து மக்களும் தங்களது நெருக்கடியில் உணரும் பொழுது அல்லது கடுமையான பற்றாக்குறையைச் சந்திக்கும் பொழுது அத்தகைய நிலைமைகளுக்கு ஒருபோதும் இந்தத் திமுக அரசு ஆட்சியில் இருந்தாலும், இல்லாமல் போனாலும் பொறுப்பு ஏற்காது என்பது தான் உண்மை. ஏற்கனவே திமுக அமைச்சர்கள் ஓசி பஸ் ஓசி பயணம் என மக்களை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை மக்கள் மறந்தாலும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
இது தேச இறையாண்மையைக் காக்கும் பொருட்டு ஊழல் கொள்ளையர்களிடம் இருந்து மாற்று அரசியலை மீட்டெடுக்க வேண்டிய காலமாக இருப்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் திமுகவின் செயல் வீரர்கள் தங்களை சரியாக இந்த அரசு ஊதிய முறையில் அனுசரிக்கவில்லை. கடுமையாக உழைத்த எங்களுக்கு என எதையும் நிறைவேற்றித் தரவில்லை என்று அதிருப்தியில் இருக்கிறார்கள். எத்தனையோ விதமான முறைகளில் மனுக்கள் கொடுத்தும் எங்களுக்கான தேவைகளை இதுவரை இந்த அரசு செய்யவில்லை என்றாலும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று அவர்கள் எங்களது சுற்றுப்பயண காலங்களில் முறையிட்டார்கள். அரசு அலுவலகங்களில் கோப்புகள் நகராமல் தேக்கி வைத்து காலம் கடந்து லஞ்சம் வாங்கி பின்னர் நகர்கிறது, ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் மகளிர் உரிமைத் தொகை பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கீடு நிதியிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது ஆதாரம் வருமாறு:-
திடீர் 5000 ரூபாய் எதற்கு?
புதியதாகத் தொடங்கப்பட்ட ஆயிரம் மனமகிழ் மன்றங்களை மக்கள் அறிவார்களா?
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறைந்ததா?
போதைப் பொருள்களால் தமிழநாடு தள்ளாடுவதை மறைக்கவா?
சாலையில் அமர்ந்து போராடும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் நடத்தும் போராட்டங்களை மறைக்கவா ?
அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பை உருவாக்கிய கல்குவாரிகள் சார்ந்த கொள்ளைகளை மறைக்கவா.?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை மறைக்கவா.?
பொங்கலுக்கு ஏழை, ஏளிய மக்கள் அனைவருக்கும் வேட்டி சேலை கிடைக்காத கோபத்தைத் தணிக்கவா .? இந்தக் கோடையில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் வள்ளலாகிவிட்டார் என எதிர் கட்சிகள் பேசுகிறதே, எதற்காக இந்தப் பணம்?
இந்தத் திட்டத்தை மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்தால், நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என (அனைத்து பத்திரிகைகளும் நன்றாகவே தெரியும்).
வேலைக்குச் செல்ல கடினமான கோடை காலத்தில் இந்தத் தொகை நிறுத்தப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பது நமக்குத் தெரியும்.
உங்கள் மாதாந்திர செலவை எப்படிச் சமாளிக்க முடியும்.?
குடும்பத்தினருக்கு மாத்திரை மருந்து வாங்கித் தர முடியுமா?
குழந்தைகளுக்கான கல்விச் செலவைத் தான் சமாளிக்க முடியுமா?
இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத் தான் முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்.
அதன்படி மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூபாய்.3 ஆயிரத்துடன் கூடுதலாக கோடை காலச் செலவைக் கருத்தில் கொண்டு, ரூபாய்.2 ஆயிரம் சிறப்பு தொகையும் சேர்த்து தற்போது ரூபாய்.5 ஆயிரத்தை சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக உங்களுக்கு வங்கிக் கணக்கில் போட்டுள்ளேன்." என இவ்வளவு உருகி, உருகி காரணம் சொல்வானேன்?
‘’எங்களுக்கு ஓட்டுப் போடுவதற்காக இந்தப் பணத்தை தருகிறேன்’’ எனச் சொல்ல கூச்சமாக உள்ளது தானே! அதைச் சொல்ல வெட்கப்பட்டுத் தானே இப்படிப் பேசுகிறீர்கள்!
1.31 கோடி மகளிரின் ஓட்டுக்ளை வேட்டையாடி அள்ளிக் கொள்வதற்கு ஆட்சியிலுள்ள ஒரு கட்சி சார்ந்த அரசு கஜானாவிலிருந்து பல கோடிகளை எடுத்துத் தருவது அதிகார துஷ்பிரயோகம் என்பதை மறைக்க, இத்தனை ‘ஜால்ஜாப்பு’ ம் சொல்ல வேண்டியதுள்ளது !
ஏழை, எளியோரின் துன்பத்திற்கு உருகுகிற முதலமைச்சராக நீர் உமது ஆட்சி நடந்த நான்கு ஆண்டு பத்து மாதம் நடந்த நிர்வாகத்தில் அல்லவா, வெளிப்படுத்தி இருக்க வேண்டும்? அது சுத்தமாக இல்லையே!
உழைக்கும் மக்களின் போரட்டங்களுக்கோ, அழுகைக்கோ, கதறல்களுக்கோ சிறிதும் செவி சாய்க்காமல் உச்சபட்ச அராஜக ஆட்சியல்லவா, நடத்தினீர்கள்! ஊழல் ஒழிப்பு லோக் ஆயுக்தா கூட தமிழ்நாட்டில் மட்டும் சரியாக செயல்படவில்லையே ஏன்
கடுமையான வெயிலிலும், மழையிலும், பனியிலும் வீதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விலை பேசி விற்றுவிட்டு, சிலரது கமிஷனுக்காக அந்த எளியோர்கள் வாங்கிய சம்பளத்தில் 25 சதவிகிதம் குறைத்தீரே! இந்த அநீதிக்கு எதிராகப் போராடிய தூய்மைப் பணி செய்யும் தாய்மார்களை நடு ராத்திரியில் காவல்துறையை ஏவிக் கதறக் கைது செய்துவிட்டு, ஏசி பிரிவ்யூ திரையரங்கில் ரஜினிகாந்தின் புதுப் படத்தைப் பார்த்து புகழுரை வழங்கிய மாகானுபவரல்லவா நீர்? என ஈதிஅகட்சித் தலைவர்கள் கூறும் கருத்தையும் நாம் கவனிக்க வேண்டும்,
இவ்வளவு பெரிய நிதியை எந்தக் கோரிக்கையும் எழாமல் வலிந்து வந்து, தர முடிகிறதே எப்படி..?
ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், மின்சார வாரியப் பணியாளர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் என உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரின் உழைப்புக்கும் மதிப்பளிக்காமல் அத்துக் கூலிகளாக வேலைக்கு வைத்து, நீதி இல்லாமல் சுரண்டிய நிதியல்லவா இது?
இப்படி அவர்களின் வயிற்றிலடித்த பணத்தை நீர் ஓட்டைப் பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் தருவீர்கள். அதை வாங்கிக் கொண்டு திமுகவுக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள் இல்லையா..?
இந்த 131 கோடி குடும்பத்திற்குள் தன் மேற்படி அநீதிக்கு ஆளானவர்களும் அடங்குகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்! நீங்கள் இவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியத்தை உத்திரவாதப்படுத்த மறுத்து செய்த துரோகத்தை இந்த 5,000 த்தைக் கொண்டு சரி செய்ய முடியுமா? என்பதைப் பார்ப்போம்!
உங்கள் ஐந்து வருட ஆட்சி குறித்து உங்களுக்கே எவ்வளவு அவ நம்பிக்கை இருந்திருந்தால், அரசு கஜானாவிலிருந்து பெரும் தொகையை அள்ளிவீசித் தான் ஓட்டு பெற முடியும் என்ற அச்ச உணர்விற்கு தள்ளப்பட்டு இருக்கிறீர்கள் என யோசித்து பார்க்கிறேன். எனும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி கருத்தை ஏற்கத்தான் வேண்டும்,அதை மத்தியில் ஆளும் தேஜக கூட்டணி வேடிக்கை பார்க்கிறதா? இல்லையா என்பது இனி நடக்கும் நடவடிக்கை மூலம் தான் தெரியும். ஆனால் சிவகங்கை
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் கௌரவ விரிவுரையாளர் திடீர் மயக்கமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இது இன்றுள்ள நிலை தேர்தலில் வாக்களிக்க ஒன்பதாயிரம் தந்திருக்கிறோம் என்கிறார்கள்.
சரி. ஊழல் திமுக அதிகாரத்திற்கு வராமல் ஒரு முப்பது ஆண்டுகள் தோல்வியைத் தழுவி மக்கள் பணி செய்யட்டும். அதன் பின்னர் பார்க்கலாம் சரியா மக்களே என பல அரசியல் கட்சிகள் குரல் தருகிறது. மேலும் இரண்டு நாட்கள் முன் நிரந்தர டிஜிபி நியமனத்திற்காக தகுதி வாய்ந்த மூன்று பேர் அடங்கிய பட்டியலை உடனே UPSC-யில் ஒரு வாரத்திற்குள் பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு! !பணம் வாங்கினா ஓட்டுப் போட வேண்டும் எனக் கட்டாயமில்லை பணம் வாங்காத ஒரு கோடி பெண்கள் உள்ளனர் (ரேசன் அட்டைதாரர்கள்) திமுகவிற்கு எதிராகவே எப்போதும் வாக்களிப்பார்கள். தோல்வி உறுதி.நம்பிக்கையாக இருங்கள் முதல்வர் ஸ்டாலின் எனும் பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை கருத்தில் நமக்குப் புரிகிறது, தற்போது அணைத்து ஊடகங்களிலும் பேசு பொருளாகியுள்ளது. குடும்பப் பெண்களுக்கு உதவித்தொகை என்கிற பெயரில் நடப்புத் தேர்தலில் விலை போன ஜனநாயகத்தின் அதிர்ச்சி இப்படியாகத்தான் இருக்கிறது. ரூ 6, 550 கோடி கடன் பெற்று இந்த தொகையை தருகிறது என்பது தேச இறையாண்மையைக் காக்கும் பொருட்டு ஊழல் கொள்ளையர்களிடம் இருந்து மாற்று அரசியலை மீட்டெடுக்க வேண்டிய காலமாக இருப்பதை மக்கள் உணர உச்சநீதிமன்றத்தில் வரும் வழக்கு இதை தீர்வு செய்யும்,தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு தரும்! பணம் வாங்கினா ஓட்டுப் போட வேண்டும் எனக் கட்டாயமில்லை பணம் வாங்காத ஒரு கோடி பெண்கள் உள்ளனர் (ரேசன் அட்டைதாரர்கள்) திமுகவிற்கு எதிராகவே எப்போதும் வாக்களிப்பார்கள். என்பது புன்னுக்கு புனுகு போடுவது போல அது குணமாக நாளாகும் என்பதே தோல்வியை உறுதிப் படுத்தும் நிலைக்கு செல்லும் என்பதே பலரது கணிப்பு.தேர்தல் கால இலவசங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் மாரச் மாதத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளதன் நீட்சியாக, தேர்தலுக்கு முன்பு இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்று பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.இது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சூரியனையும், சந்திரனையும் தவிர மற்ற அனைத்தையும் ஆளும் அரசியல் கட்சிகள் இலவசங்களாக அறிவிப்பதாகவும், இது ஒரு ஊழல் நடைமுறைக்குச் சமமென்றும் அஸ்வினி குமார் உபாத்யாயா வாதிட்டார். இதனைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், இது ஒரு முக்கியமான பிரச்னை என்றும், இவ்வழக்கை மார்ச் மாதத்தில் பட்டியலிடுகிறோம் என்றனார்.இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே, தமிழ்நாடு அரசு அடுத்த 2 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வரவு வைத்துள்ளது.










கருத்துகள்