இராகுல் கையால் விசில் சப்தம் நாளை வரும் கூட்டணியில் மாற்றம். தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் எடுத்த சர்வேயால் சத்திய மூர்த்தி பவனில் பிரியாணி பரிமாறி விருந்து.!
தவெகவுடன் கூட்டணிக்கு வரவுள்ளது எனும் தகவல், தவெக தலைவர் நடிகர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்குத் தெரிய வந்ததும், அவர்கள் வரவேற்பு நிலையிலிருக்கின்றனர். ஆனால் ப. சிதம்பரம் மற்றும் அவர் சார்ந்த செல்லம் என்ற பெருந்தகை ஆதரவாளர்கள் 12 பேர் திமுக தரப்பு ஆதரவாக மாறிய நிலையில் புதிய கட்சி துவங்கும் நிலைக்கு அவர்கள் மாற உள்ளதாகத் தகவல் வருகிறது
‘‘பொது மேடையில், ஆட்சியில் பங்கு தர முடியாது' என பகிரங்கமாக திமுக முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்ததை, ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னை முதல்வர் மு. க. ஸ்டாலின் அவமதித்து விட்டதாகவே கருதுகிறார். ஏற்கனவே, காங்கிரசுக்கு சாதகமான 125 தொகுதிகளின் பட்டியலை வார் ரூம் நிர்வாகிகள் தயாரித்து வைத்திருந்தனர். அதிலிருந்து 70 தொகுதிகளைத் தேர்வு செய்து தருமாறு வார் ரூம் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தவெக தலைவர் நடிகர் விஜய் சந்திப்பு நடக்கும்.
அந்தத் தொகுதிகளின் பட் டியலை தவெகவிடம் வழங்கி, கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சு நடத்தும் பொறுப்பு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி சென்னை வருகிறார் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வேணுகோபால். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர் மாற்றத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி நடத்தும் பேரணியில் பங்கேற்கிறார். அப்போது, தவெக தலைவர் நடிகர் விஜயை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது’’ எனத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்ற தகவல், தவெக தலைவர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்குத் தெரிய வந்ததும், அவர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர். நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் வழக்கத்திற்கு மாறாக பிரபல அசைவ உணவகத்திலிந்து ஆட்டிறைச்சிப் பிரியாணி வரவழைத்து, விருந்து நடத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடக்கும் பேரணியை, வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உரிய பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய 25 தொகுதிகளை முறையே கூடுதலாக கீழ் கண்டவாறு ஒதுக்க முடிவு செய்துள்ளதாம் அந்தக் கூட்டணி
கூடுதலாக தலா 2 கம்யூனிஸ்ட். கட்சிகள், ப.சிதம்பரம் ஆதரவு காங்கிரஸ் பேரவை 8, கமலஹாசன் மையம் 6, மீதி 3 திமுகவுக்கு என முடிவு செய்ததாகவும் தகவல் வருகிறது .
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேச்சும், வீச்சும், தாக்கமும். மதுரை பொதுக்கூட்டம் முடித்த அமைச்சர் இராஜ கண்ணப்பன் நிகழ்ச்சிகள் அடுத்தநாளுக்கானது ரத்து செய்து முதல்வர் மு. க.ஸ்டாலின் திடீர் அழைப்பு வரவே அரசியல் நிலை சூடானது
தி.மு.க. தலைமையின் திடீர் அவசர அழைப்பை ஏற்று, திருநெல்வேலியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் அவசரமாகச் சென்னை புறப்பட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சநல்லூர் பகுதியில் இன்று மாலை தி.மு.க. சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் இந்தத் தொடர் கூட்டங்களில் பங்கேற்பதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று மதியம் வரை திருநெல்வேலியில் தங்கி இருந்தார். எனினும், தலைமையின் அழைப்பு வந்தவுடன் பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திலிருந்து அவர் அவசரமாகச் சென்னைக்குப் புறப்பட்டார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் கடந்த சில நாட்களாகப் பொதுக்கூட்டங்களில் பேசி வரும் கருத்துகள் கூட்டணிக் கட்சிகளிடையே, குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி குறித்து அவர் தெரிவித்த விமர்சனங்கள் சர்ச்சையாக வெடித்தன. குறிப்பாக, தி.மு.க.வுடன் காங்கிரஸ் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன; அதை முதல்வர் பார்த்துக் கொள்வார். கூடவே இருந்து கொண்டு காங்கிரசார் உயிரை வாங்குகின்றனர் என்று, காங்கிரஸ் கட்சி குறித்து கிண்டலும் கேலியுமாக தொடர்ந்து விமர்சித்து வந்தார். இது திமுக காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த நெருக்கடி என்பதே அரசியல் பார்வை
மேலும், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. 170 இடங்களுக்கு மேல் போட்டியிடுமென்றும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த தொகுதிகளையே அக்கட்சி மீண்டும் கேட்பதாகவும் அவர் பேசியதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் இந்தச் செய்தியை மேற்கோள் காட்டி தனது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார்.
தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் பேசியது அல்லது பேச வைக்கப்பட்டது தலைமைக்கு தீர்வையோ அல்லது நெருக்கடியையோ ஏற்படுத்தியுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்க அறிவுறுத்துவதற்காகவும், விளக்கம் கேட்பதற்காகவும் அவர் சென்னைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது அமைச்சரின் திருநெல்வேலி நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் தொடர்வரா இல்லை நிலமை மாறி அவர் மீண்டும் மக்கள் தமிழ் தேசம் கட்சியைத் துவங்கி வேறு கட்சியில் கூட்டணி வைப்பாரா என்பது இனித் தான் தெரியும். மேலும்,மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது.ஆனால்,அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை.கடந்த 3 ஆண்டுகளில்,தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன;5 தோல்வியடைந்தன-பிரவீன் சக்கரவர்த்தி!!!
காங்கிரஸ் திமுக கூட்டணிலிருந்து வெளியேற ஆயத்தமாகி வருகிறது! காங்கிரஸ் பேரவைத் தலைவராகப் போகும் ப சிதம்பரத்துடைய கருத்தை இலக்கிய நடராஜன் பிரதிபலிக்கிறார் அவ்வளவு தான்.



























கருத்துகள்