முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றவாளிகளுக்கு குடைபிடித்து சொத்துக் குவித்த ஊழல் காக்கி பெண் ஆய்வாளர் ராஜலக்ஷ்மி

சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் இராஜலட்சுமி

தனது அரசு பணியைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமான வழிகளில் தனது பெயரிலும் தனது குடும்பத்தினரின் பெயரிலும் அசையும் அசையாச் சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.

இது போன்ற சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் அரசு பணிசெய்யும் அலுவலர்கள் மீது. அரசு மற்றும் நீதித்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் நம்பகமான தகவலின் அடிப்படையில், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்திற்கு விஜிலென்ஸ் அறிக்கை அனுப்பப்பட்டு, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு தலைமையகத்தின் அனுமதி பெற்ற பிறகு இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.


குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரிகிறார், துணைத் தடுப்புப் பிரிவு-1, கிரேட்டர் சென்னை காவல்துறை, பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகம், எழும்பூர், சென்னை  என்ற முகவரியில் ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் 2(சி) ன் கீழ் இவர் அரசுப் பணியாளராவார்.

குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல்துறை ஆய்வாளர் , வைஸ் ஸ்குவாட்-1, கிரேட்டர் சென்னை காவல்துறை, பழைய காவல் ஆணையர் அலுவலகம், வளாகம், எழும்பூர், சென்னை  முகவரியில், PEW, EOW, ECCUIL போன்ற முக்கியமான இடங்களில் பணிபுரிந்தபோது, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக நம்பகமான தகவல் உள்ளது. 01.06.2017 ஆம் தேதி முதல் 30.06.2025 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், அவரது பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலுமுள்ள அசையாச் சொத்துகள், அவர் பெற்ற ஊதியத்தை விட அறியப்பட்ட வருமான ஆதாரங்களுக்கு கூடுதல் விகிதாச்சாரமாக இது உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல்துறை ஆய்வாளர், வைஸ் ஸ்குவாட்-1, கிரேட்டர் சென்னை காவல்துறையில் 16.04.1999 ஆம் தேதியன்று பெண் சாரபு  ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்ற பிறகு, அவர் 2010-ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகருக்குள் முக்கியமான இடங்களில் மட்டும் பல எதிர்மறை அறிவிப்புகளுடன் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார், எனவே முக்கியமான இடங்களில் அவரது பணிக் காலத்தைக் கருத்தில் கொண்டு 01.06.2017 ஆம் தேதி முதல் 30.06.2025 ஆம் தேதி வரை அவரது ஊதியம் போக சட்டவிரோதச் சம்பாதியத்ததற்கான சோதனைக் காலமாகக் கணக்கிடப்பட்டது.

01.06.2017 ஆம் தேதியன்று சோதனைக் காலத்தின் துவக்கத்தில் குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல்துறை ஆய்வாளர் துணைத் தடுப்புப் பிரிவு-1, கிரேட்டர் சென்னை காவல்துறையின் ஊதியம் வருவாய் வரவு ரூபாய் 3,64,310.90 ஆகும். 30.06.2025 ஆம் தேதி நிலவரப்படி சோதனைக் காலத்தின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல் ஆய்வாளர், துணைத் தடுப்புப் பிரிவு-1, கிரேட்டர் சென்னை காவல்துறையின் பணிக்கால வரவுச் சொத்துக்களின் மதிப்பு ரூபாய் .4,62,06,529.10 ஆகும். குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல் ஆய்வாளர், துணைத் தடுப்புப் பிரிவு-1, கிரேட்டர் சென்னை காவல்துறை சோதனைக் காலத்தில் ஈட்டிய வருமானம் ரூபாய் . 1,45,80,000. குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல்துறை ஆய்வாளர்,  காவல்துறை சோதனைக் காலத்தில் செய்த செலவு ரூபாய் .2,25,98,000/- ஆகும். ரூபாய் .-80,18,000. அதாவது 01.06.2017 ஆம் தேதி முதல் 30.06.2025 ஆம் தேதி வரையிலான சோதனைக் காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி,  சொத்து மதிப்பு ரூபாய் .5,42,24,529/- ஆகும் (அவரது மாத வருமானத்தின் அடிப்படையில் உயர்வு  372 சதவீதமாகும். குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மீதான முதன்மையான வழக்கு நிலை வெளிப்படுத்துகின்றன. ராஜலட்சுமி, காவல் கண்காணிப்பாளர், வைஸ் ஸ்குவாட்-1, கிரேட்டர் சென்னை காவல் துறை, 01.06.2017 முதல் 30.06.2025 வரையிலான காலகட்டத்தில், ஊழல் மற்றும் சட்டவிரோதமான வழிகளில் ரூபாய் .5,42,24,529 க்கு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை தன் பெயரிலும், தன் குடும்பத்தினர் பெயரிலும், ஊழல் செய்து வேண்டுமென்றே பல சொத்துக்களையும் பெற்றுள்ளார். அந்த அறியப்பட்ட வருமான ஆதாரங்களுக்கு கணக்கிட்டால் விகிதாசாரமற்றவை.

எனவே, இயக்குநர், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பாளர் , சென்னை, அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகு, ஊழல் தடுப்புச் சட்டம் 8, ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு, சென்னை சிட்டி-II தனிப்பிரிவு குறற எண்.01/AC/2026/CC-II u/s 13(2), r/w 13(1)(e) ல் வழக்குப் பதிவு செய்து. 01.06.2017 ஆம் தேதி முதல் 25.07.2018 ஆம் தேதி வரை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988 இன் u/s 13(2) r/w 13(1)(b) ஊழல் தடுப்பு (திருத்தம்) சட்டம், 2018 ல் திருத்தப்பட்டதன் படி. 12.02.2026 ஆம் தேதியன்று 16.00 மணிக்கு குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல் ஆயவாளருக்கு எதிராக விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு நகர சிறப்புப் பிரிவு (புலனாய்வு )ஆலந்தூர், சென்னை ஆய்வாளர் ஜி.விமலா அவர்கள் கண்காணிப்பாளர் வழிகாட்டி ஆலோசனை படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முதன்மை மாவட்ட நீதிபதி, சென்னைக்கும் மற்றும் அதன் நகல்களை உயர் அலுவலர்களுக்கும் அனுப்பியதாக, மேலும் முதல் தகவல் அறிக்கை நகலை டிஎம்டிஎன்-க்கு அனுப்பியதாக சுமத்ரா, க கண்காணிப்பாளர், நகர சிறப்புப் பிரிவு-I, ஆலந்தூர், தகவல் தெரிவிக்கிறதுசம்பளம் பல்லாயிரங்களில்.. 8 வருடத்தில் 372 சதவீதம் கூடுதல் சொத்து சேர்த்த சென்னை ராஜலட்சுமி இது வெல்கம் காலனி ரகசியம்

சென்னையில் ஒரு பெண் காவல் ஆய்வாளர் ஒட்டுமொத்த காவல்துறையையும் எட்டு வருடம் அலற விட்டுள்ளார் சம்பளம் என்னவோ இவருக்கு தகுதிக்கேற்றபடி கிடைக்கிறது..


ஆனால், வருமானத்திற்கு அதிகமாக 5.42 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சேர்த்து விட்டாராம் இந்த பெண் காவல் ஆய்வாளர் இது எப்படி சாத்தியம்? லோக் ஆயுக்தா அமைப்பின் கைகள் கட்டிப்போடபபடாமல் இருந்தால் இவர் போல பலர் சிக்குவார்கள் ஆனால் அந்த அமைப்பு தமிழ்நாடடில் மட்டும் சரியாகச் செயல்படவிலலை என்பதால் தான் குருநாதன் போட்ட வழக்கு அதுவும் முடிவாகவில்லை காரணம் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்,என்றுதான் பார்க்கும் நிலையில் பல காக்கிச் சட்டைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம்.. யாரிந்தப் பெண் ஆய்வாளர் ? இவரை ஆயவு செய்ய இன்னொரு ஆய்வாளர் 

சென்னையில் உள்ள விபச்சார தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள வெல்கம் காலனியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு நேரடியாக காவல்துறை உதவி ஆய்வாளராக தன் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு எனப் பல்வேறு முக்கிய பிரிவுகளில் செல்வாக்கு மிக்க பொறுப்புகளை செல்வாக்கான நபர்கள் மூலம் வகித்துள்ளார்.

இவர் அதிகாரத்தில் இருந்த காலத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக பெரும் அளவில் பணம் சம்பாதித்ததாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையகத்திற்கு வரிசையாகவே புகார்கள் அணி வகுத்துச் சென்ற வண்ணம் இருந்தன..

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களும் தங்களது ரகசிய விசாரணையைத் தொடங்கினர். அப்போது கிடைத்த முதற்கட்ட ஆதாரங்களின்படி, பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராஜலட்சுமியின் வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிபபு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.


நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், பல முக்கியமான சொத்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் மேற்கொண்ட தீவிர கள ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 8 ஆண்டுகளில், ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு எகிறி விட்டுள்ளதாம்..

அதாவது 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெறும் 3.64 லட்ச ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, 2025 ஆம் ஆண்டிற்குள் பல கோடிகளை தொட்டுள்ளது.

கணக்கிடப்பட்ட வருமானத்தை விட 5.42 கோடி ரூபாய் அளவுக்கு அவர் கூடுதலாகச் சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது அவரது சாதாரண வருமானத்தை விட 372 சதவீதம் அதிகமாகும்.

பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியபோது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அவர் இந்த சட்டவிரோத பணத்தை சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது.

இந்தப் பணப் பரிமாற்றம் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து ராஜலட்சுமியிடம் நேரில் விசாரணை நடத்தவும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை மாநகரக் காவல் துறை உயர் அலுவலர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் ஈசியாக எடுத்துக் கொண்ட போதிலும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் நம்முடைய காவல்துறையில் எத்தனையோ நேர்மையான அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.. அப்படியான பணியை செய்ய வேண்டிய காவல் துறையிலேயே, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள இந்தச் சம்பவம், தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இவருக்கு லஞ்சம் கொடுத்த குற்றவாளிகள் இப்போதய நிலை சிபிஐ விசாரணை தேவை அல்லது சிபிசிஐடியாவது தேவை நடக்குமா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...