இடதுசாரிக் கம்யூனிஸ சித்தாந்தம் சிவப்பாகவே எரிகிறது, மூட்டிய தோழர் இரா.நல்லகண்ணு காலமானார்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, பழைய திருநெல்வேலி மாவட்டம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இராமசாமி-கருப்பாயி தம்பதியினருக்கு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று, 10 குழந்தைகள் உள்ள விவசாயக் குடும்பத்தில் 4 சகோதரர்கள், 5 சகோதரிகள் கொண்ட பெரிய விவசாயக் குடும்பம், இவர் 3-வது குழந்தையாகப் பிறந்தார். 1958- ஆம் ஆண்டில் ரஞ்சிதம் மனைவியானார் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு, மனைவி ஆசிரியர் பணியில் குடும்பத்தைக் கவனிக்க
திருநெல்வேலி மாவட்டக் கமிட்டி உறுப்பினர் அண்ணாசாமியின் மகள்தான் இவர் மனைவி
ஆர். நல்லகண்ணு முழு நேரக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டதால், மனைவி ரஞ்சிதம் தனது ஆசிரியர் பணி வருமானத்தில் குடும்பம் பார்த்து வந்த நிலை,
1948-ஆம் ஆண்டில் கம்யூனிஸட் கட்சி பாரதத்தை தந்திரமாக ஆண்ட பிரதமர் பணக்கார ஜவகர்லால் நேருவின் காலனிய ஆதிக்கக் கைக்கூலியான காங்கிரஸ் அரசைத் தூக்கி எறிய வேண்டுமென்று தலைமறைவு ஆயுதப் போராட்டம் செய்த திருநெல்வேலி சதி வழக்கில் குண்டு வீசியதாக ஆயுள் தண்டனை பெற்றார்.
மேலும் உள்ளூர் ஜாதிக்கலவரத்தில் பட்டியல் சமூகத்தினரால் வெட்டிக் கொல்லப்பட்ட தனது மைத்துனருக்கு ஆதரவாக வெட்டியவர்களை நீதிமன்றத்தில் காட்டிக்கொடுக்கவும் மறுத்தார்.
அவருக்கு நீங்கள் கைமாறு என்ன செய்தீர்கள்?
கோயமுத்தூரில் பாஜவை ஆதரித்து அந்த கம்யூனிஸட் மாவீரனை வஞ்சகமாகவே வீழ்த்தினீர்கள்!
ஓய்வறியா உழைப்பு யார்?
ஒவ்வொரு நொடிப்பொழுதும் அயராமல் அதிகாரபூர்வமற்ற நான்காம் இணைப்புக்கும் சேர்த்து கொள்ளையடித்துத்
குவித்து தண்டனை பெற்ற, பெறாத பலரது பிணம் கொண்டாடி பூசை செய்யும் மெரினாவில், தோழர் இரா.நல்லக்கண்ணுவின் பிணம் மாணவர்களின் ஆய்வுக்கு தானமாக மருத்துவ கல்லூரியில்!
இதுதான் தியாகம், சேவை, நேர்மை தூய்மை, உண்மையான புரட்சி செய்த போது சிறை சென்றார், தனது வாழ்நாள் முழுவதையும் அடித்தள மக்களின் போராட்டங்களுக்காகவே அர்ப்பணித்த அந்த சிகப்பு சூரியன் தற்போது அஸ்த்தமனமானது, 101 வயதில்
இவருடைய 80 ஆவது பிறந்த நாளில் 1 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தார் தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்தார்.
பட்டியல் ஜாதியில் பிறந்து பின் தான் சார்ந்த சமூகத்திற்காக போராடும் புதிய தலைவர்கள் போல் அல்லாமல் வாழ்ந்தவர் தோழர் இரா. நல்லகண்ணு சேர்வை ஜாதிய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர்.மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு 1944-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்டு கட்சியில் உறுப்பினராக இணைந்தார். அதனைத் தொடர்ந்து, புரட்சியாக சென்னையில் கம்யூனிஸ்ட்டு கட்சியின் இதழான ஜனசக்தியில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய போது ஶ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் நெல் மூட்டைகள் லெவியை மீறி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிந்து ஜனசக்தியில் அந்த மோசடியை எழுதினார். களத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் நெல் மூட்டைகளை மீட்க நடவடிக்கை எடுத்தார்.
இதன் பின்னர் தோழர் இரா.நல்லகண்ணு நகர வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி நாங்குனேரி வட்டத்தில் விவசாயதத் தொழிலாளர்களை இணைத்து போராட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். அம்பாசமுத்திரம், சிவகிரி, புளியங்குடி, தென்காசி, நாங்குனேரி பகுதிகளில் திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் ஜீயர் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களில் வேலை செய்த விவசாயக் கூலி மக்களை ஒன்று திரட்டி நில உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டார். மடங்களின் அதிகாரத்தை மட்டுப்படுத்த வழி வகுத்தது.
ஆர்.நல்லகண்ணு 1948- ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட்டு கட்சி தடைசெய்யப்பட்ட பின் தலைமறைவாக வாழத் தொடங்கினார். டிசம்பர் மாதம் 1949- ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி சதி வழக்கில் இணைக்கப்பட்டார். நாங்குனேரி சிறையில் ஓராண்டு இருந்த பின்னர் 1950-ஆம் ஆணடில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை கொக்கிரக்குளம் சிறையிலடைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக நீண்ட காலம் பயணித்தவர், தோழர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்ட நாள் 1925 டிசம்பர் 26ஆம் தேதி.தோழர் நல்லகண்ணு பிறந்ததும் அதே நாளில் தான் என்பது மிக நெகிழ்ச்சியான தகவல். கடந்த கால கமயூனிஸ்ட் கட்சியின் இறுதி அத்தியாயமாக வரலாற்றில இருக்கிறார்.
பிப்ரவரி 26, 2021 தோழர் தா. பாண்டியன் மறைந்த நாள். பிப்ரவரி 25, 2026 தோழர் இரா.நல்லகண்ணு மறைந்த நாள். ஒரு நாள் வித்தியாசம், ஆனால் இருவரின் போராட்ட வரலாறும் ஒன்றே. இவர்கள் இருவரும் பதவிக்காக அல்ல, பொதுமக்களின் உரிமைக்காக வாழ்ந்தவர்கள். அரசியலை அதிகாரமாக அல்லாமல் அர்ப்பணிப்பாக வாழ்ந்தவர்கள். தோழர் தா. பாண்டியன் கூர்மையான சிந்தனை, தெளிவான பேச்சு, கொள்கையில் உறுதி.
தோழர் நல்லகண்ணு எளிமையின் உருவம், நேர்மையின் சின்னம், நிலத்தின் மண்வாசனையோடு கலந்த தலைவர்.
(நன்றி, கார்டூனிஸட் பாலா ) இரண்டு தலைவர்களின் மரணங்களும் நமக்குச் சொல்லும் செய்தி.
கொள்கை மாண்டு போகாது.போராட்டம் நிற்காது. மக்கள் அரசியல் அழியாது. அவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லும் செய்தி.
அச்சமின்றிப் பேசுங்கள். அடக்குமுறைக்கு தலைவணங்காதீர்கள். மக்களின் பக்கம் நின்று வாழுங்கள்...
இவர் சமகாலத்தில் வாழந்த தோழர்களான கம்யூனிஸ்ட் தலைவர்கள் உமாநாத், மன்னை அம்பிகாபதி, மதுரை சங்கரய்யா, கூத்தகுடி சண்முகம் போன்ற தலைவர்கள் அனைவரும் 100 வயதுக்கு முன்பே காலமாயினர் ஆனால் 101 வயது மூத்த தோழருக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் ஒரே வயது
அங்கே ஏழாண்டு காலச் சிறை வாசத்திற்குப் பின் 1956-ஆம் ஆணடில் விடுதலை செய்யப்பட்டார். சிறைக் காலத்தில் அரசியல் கைதிகளுக்கு பி வகுப்பு சிறையை ஒதுக்க வேண்டும் என 12 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். விடுதலையானவுடன் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் முதல்வர் கு.காமராஜரைச் சந்தித்து பிற கட்சித் தோழர்களையும் விடுதலை செய்யக் கேட்டு கொண்டார். அது சட்ட விதிகளுக்கு முரணானது என மறுக்கப்பட்டது. இரா.நல்லகண்ணுவின் முயற்சியின் காரணமாக அரசியல் கைதிகளுக்கு பி வகுப்பு சிறை கிடைத்தது.
மக்கள் போராட்டத்தில் ஆர்.நல்லகண்ணு 1966-ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் பகுதியிலுள்ள கடனா நதியில் அணை கட்டித் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகளை ஒன்றிணைத்து 11 நாட்கள் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் நல்லகண்ணுவின் கோரிக்கை ஏற்கப்பட்டு அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையில் கடனா நதியில் அணை கட்டப்பட்டது.
1967-ஆம் ஆண்டு நொச்சிகுளத்தில் விவசாயிகள் பயிரிட்டு வந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து ஆர்.நல்லகண்ணுவின் தலைமையில் போராட்டம் நடைபெற்றதை ஒடுக்குவதற்காக காவல் துறை துப்பாக்கி சூட்டினை நடத்தியதைக் கண்டித்து பன்னிரெண்டு நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இறுதியில் விவசாயிகள் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டது .
திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதிக்கு இவர் போட்ட சிவப்புத் துண்டைபாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் மாற்றம் செய்து மஞ்சள் துண்டாக மாற்றிப் போடவே இறுதிவரை அதை அவர் மாற்றவில்லை தோழர் ஆர்.நல்லகண்ணு 2010-ஆம் ஆண்டில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாமே வாதாடினார். அதன் காரணமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்தது.நாங்கள் பார்த்த ஐயா
தோழர் இரா.நல்ல கண்ணு அவர் தீமைக்கு எதிரான கண், அவர் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான கண், தாமிரபரணி மணல் காத்த கண், இனி எப்போது வரும்
தமிழகத்திற்கு கிடைத்த நேர்மை கொண்ட நல்ல கண் போல வருமா? என பலருக்கும் அவரை இழந்த சோகம்!
கண்களில் கண்ணீர் தான், ஓயுமோ, நேர்மை நீதி தலை சாயுமோ, சுதந்திரப் போராட்ட வீரரான தோழருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வீரவணக்கம்,



















































கருத்துகள்