"அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு. " ஔவையின் மூதுரை 17:
தற்போது கட்சி மாறி வருகிறவர்களுக்கெல்லாம் ஒதுங்கி வழிவிட்டு வழிவிட்டு இப்போது வந்தவர் யாரு? காலகாலமாக கட்சியை வளர்த்தவர் யாருன்னு தெரியாத அளவுக்கு வந்தவர்களின் ஆதிக்கம் திமுக மற்றும் பாஜகவில் வலுத்துப் போனது, திமுக மற்றும் பாஜக ஆரம்ப காலக் கட்சிக்காரர்களை சோகமாக மனசொடிஞ்சி நிக்கும் நிலைமைக்குத் தள்ளியது, மூன்று முறை முதல்வர் தேனி மாவட்டம் பெரியகுளத்து தேனீர் கடைக்காரர், பின் நகராட்சித் தலைவர் "O. பன்னீர் செல்லம் திமுக வில் இணைந்தார்" அதற்கு முன்,
பல அமைச்சர்கள் ஆர் எம். வீரப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஏ.வ.வேலு, எஸ்.ரகுபதி, தென்னவன், ஈரோடு S. முத்துச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி, சேகர் பாபு, ஃநிலோபர் கபில், அன்வர்ராஜா, தங்கதமிழ்ச்செல்வன்,வ. மைத்திரேயன்,பி.எச். மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஓ. பன்னீர்செல்வம் ஐயப்பன்,மருது அழகுராஜ், எஸ். வி. சேகர்,பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன்,பாஜகவில் தலைவராக அண்ணாமலை இருந்த போது அதிமுகவில் இருந்து மாறிய முன்னாள் MLA க்களின் விவரம்:- கரூர் தொகுதி அதிமுக MLA கே.வடிவேல், கோயம்புத்தூர் அதிமுக MLA சேலஞ்சர் துரைசாமி, அரவக்குறிச்சி அதிமுக MLA பி.எஸ்.கந்தசாமி, பொள்ளாச்சி அதிமுக MLA எம்.வி.ரத்தினம், சிங்காநல்லூர் அதிமுக MLA ஆர்.சின்னசாமி,
வலங்கைமான் அதிமுக MLA, முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன்,
ஆண்டிமடம் அதிமுக MLA ஆர்.தங்கராஜ்,
தேனி தொகுதி அதிமுக MLA வி.ஆர்.ஜெயராமன்,
வேடசந்தூர் தொகுதி அதிமுக MLA எஸ்.எம்.வாசன்,
புவனகிரி தொகுதி அதிமுக MLA பி.எஸ்.அருள்,
காட்டுமன்னார் கோவில் தொகுதி அதிமுக MLA ஆர்.ராஜேந்திரன்,
அவிநாசி தொகுதி அதிமுக MLA ஏ.ஏ.கருப்புசாமி,
பாளையங்கோட்டை தொகுதி அதிமுக MLA எஸ்.குருநாதன்,
காங்கேயம் தொகுதி அதிமுக MLA செல்வி முருகேசன்,
கொளத்தூர் தொகுதி அதிமுக MLA ஏ.ரோகிணி,
திட்டக்குடி தொகுதி தேமுதிக MLA கே. தமிழழகன், காரைக்குடி தொகுதி எம்எல்ஏ சோழன்காடு பழனிசாமி,
முன்னாள் திமுக பாராளுமன்ற உறுப்பின டாக்டர் குழந்தைவேலு,
முன்னாள் காங்கிரஸ் எம் எல் ஏ விளவங்கோடு விஜயதாரிணி, முன்பே காங்கிரஸில் இணைந்த சு.திருநாவுக்கரசர் என பலரும் இப்படி ஆனால் இப்போது பாஜகவில் இணைகிறார்கள் பலவகையில் திமுக ஒருபக்கம் பாஜக ஒருபக்கம் என நடத்தும் கயிறு இழுக்குற போட்டியில் முந்துவது என்னவோ திமுக தான்..ஆனால் முன்னால் அமைச்சர்கள் . கே. ஏ. செங்கோட்டையன், கு. ப.கிருஷ்ணன், நடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா ஆகியோர் தவெகவில் பல தொண்டர்களுடன் இணைந்துள்ளனர் தற்போது அதிமுகவில் உள்ள பலர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி வாய்ப்பு வழங்குவார் எனக் காத்திருக்கும் பலர் அதில் நடிகை கௌதமி, உள்ளிட்ட பலர் கிடைககாமல் போனால் இனிமேல் தான் கயிறு பலமாக இழுக்கும் பக்கம் தாவுவார்கள். காரணம் தலைமை ஏற்று நடத்தும் மண்டை வெல்லம் வியாபாரி மக்கள் ரசிக்கும் அல்லது விரும்பம் தலைமையாக இல்லை என்பது மட்டுமே உண்மை. அதாவது இலவ மரம் (அதிமுக) மார்ச் முதல் மே மாதங்களில் காய்த்து, பழுத்து பழம்பறிக்க பாஜக எனும் கிளி பத்து வருஷமாக மரத்தில் காத்திருக்க, வெடித்துப் பஞ்சுகள் பறக்கிறது திமுக உள்ள திசை நோக்கி காய் பழுத்துப் பஞ்சாகி பறந்து போகும் வரை காத்திருக்கும் பாஜக எனும் கிளியின் ஏமாற்றத்தைக் குறிக்கிறது, அதாவது இலவமரம் காய் பழுத்தவுடன் தானாகவே பஞ்சாக வெடித்துச் சிதறிவிடும். அது தெரியாமல் அதிமுக சிதறினால் பாஜகவுக்கு லாபம் வரும் எனக் காத்து எதிர்பார்த்திருந்த டில்லி வாலாக்கள் இப்போது தேடுவது மயிலாப்பூர் படடயக் கணக்கர் தான் ...இலவு காத்த கிளிக்கு .. கணக்கு நேராகும் காலமிது.
உண்மையான ஜெ. ஜெயலலிதா விசுவாசிகள் கண்ணீர் துடைத்தபடி திமுகவின் வாசலில் நிற்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தரும் "ஒற்றைத் தலைமை" என்ற பெயரில் அவர்கள் பெற்றது ஒற்றை அவமானம் மட்டுமே !
ஆனால் ஜெ.ஜெயலலிதா காலத்தில் தொண்டன் என்றால் தியாகி இன்று பழனிசாமி காலத்தில்
தொண்டன் என்றால் துரோகி "O பன்னீர் செல்லம் போல" – திமுகவில் சேர்ந்து விடு என்று அங்கு பலரும் சொல்லும் நிலை
எடப்பாடி பழனிசாமி தலைமை என்பது
ஒரு பெரிய "வெளியேற்றும் திட்டம்" உண்மை விசுவாசிகளை எல்லாம் திமுகவுக்கு அனுப்பும் திட்டம்!
அதிமுகவில் இருப்பவர்கள் இப்போது எல்லோரும் "காத்திருப்போர் பட்டியல்" எப்போது திமுகவுக்கு அழைப்புக் கிடைக்கும் என்று! ஆனால் உண்மை
இது துதி தான்.பழனிசாமி "சாதனை"க்கு! தொடர்ந்து விரட்டும் .
இன்னும் சிலர் மீதி இருக்கிறார்கள்
அவர்களையும் திமுகவுக்கு அனுப்பி
அதிமுகவை முழுதாக "காலி" இனி டி.ஜெயக்குமார் இணையலாம்! என்ற நிலையில் "எடப்பாடி பழனிச்சாமியை அ(ஜண்டா)வைத்து அமித்ஷா தூக்கிட்டாரல்லவா, செங்கோட்டையனை கவர்ச்சியான தலைவர் விஜய் தூக்கிட்டாரு... அதிரடியா டீக்கடை ஓ.பன்னீர் செல்வத்தை திமுக மு.க.ஸ்டாலின் தூக்கிட்டாரு! ஐ.பி.எல். ஏலம் மாதிரி அரசியல் போய்ட்டிருக்கே
கொஞ்சம் பொறுமை இன்னும் வி. கே.சசிகலா நடராஜன் பாக்கி இருக்கிறார் . வேடிக்கை பார்ப்போம்!!" அது எல்லாரையும் தூக்கி ஜெயிக்குமா இல்லையா என....?ஒன்றும் அதிசயமாக எதுவும் நடந்துவிடவில்லை!
அதிகாரத்தின் மீதான தீரா விசுவாசத்தில் எப்போதும் தீர்க்கமான முடிவெடுப்பவராக இருந்துள்ளார் ஒ.பன்னீர் செல்லம் !
அவர் முதன்முதலாக நேரடியாக பார்த்த அதிகார பீடம் சசிகலா அக்கா வனிதாமணி மகன் டி.டி.வி.தினகரன். 1999 ஆம் ஆண்டில் டி.டி.வி.தினகரன் பெரியகுளம் தொகுதியில் ஜெ. எம் ஹாரூனை எதிர்த்து போட்டியிட்ட போது, தன்னைவிட 12 வயது குறைந்தவரான டிடிவி. தினகரனிடம் ஒ.பன்னீர் செல்லம் காட்டிய பணிவும், இராஜவிஸ்வாசமும் அவருக்கு 2001ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
2002-ஆம் ஆண்டில் ஜெ.ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்த நிலையில், விசுவாசமான அடிமைத் தேடலில் ஈடுபட்ட போது, அவருக்கு வி. கே.சசிகலா நடராஜனும், டி.டி.வி. தினகரனும் ஒ.பன்னீர் செல்வத்தைக் கை காட்டினர்.
இதே போன்ற வாய்ப்பு மறுபடியும் ஜெ.ஜெயலலிதா மீண்டும் சிறை சென்ற போதும் கிடைத்தது.
மோடியா? லேடியா? என்று சவால் விட்ட ஜெ.ஜெயலலிதா அப்போலோவில் உயிருக்கு போராடிய நிலையில், அவருக்கு முடிவுரை எழுத விரும்பிய பாஜகவிற்கு ஒரு அடிமை விசுவாசி தேவைப்பட்டார். அப்போது ஜெ.ஜெயலலிதாவைக் காட்டிலும் பெரிய அதிகாரபீடம் டெல்லி என்பதை வேகமாக சுதாரித்துக் கொண்டு, அதிகார பீடத்தின் மீதான தன் தீரா விஸ்வாசம் என்பது மாறா விஸ்வாசமல்ல என்பதை நிரூபித்தார், ஒ.பன்னீர் செல்லம்
இதனால், அன்றைய தமிழ்நாடு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வி.கே.சசிகலாவால் முன் மொழியப்பட்ட எடப்பாடி கே.பழனிச்சாமியை அழைத்து ’’போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். என ஒபன்னீர்செல்வத்தை முதல்வாராக்கச் சொல்லியுள்ளது டெல்லி மேலிடம்’’ என விலக வைத்தார்.
ஆட்சி பீடம் ஏறியவுடன் மத்திய அரசுக்கு அடங்க மறுத்து கையெழுத்திடாமல் ஜெ.ஜெலலிதா தவிர்த்த பைல்களையெல்லாம் எடுத்து கையெழுத்து போட்டார் ஒ.பன்னீர் செல்லம் மேலும், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளில் வட இந்திய இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கவும் கையெழுத்திட்டார்.
ஒ.பன்னீர் செலவம் முதல்வராகத் தொடரவிட்டால் இவர் தமிழ் நாட்டையே ஒட்டுமொத்தமாக பாஜகவிற்கு அடகு வைத்துவிடுவார் என்பதை உணர்ந்து விழிப்படைந்த வி. கே.சசிகலா நடராஜன் , ஒ.பன்னீர் செல்வத்திடம் ராஜூனாமா கடிதம் எழுதி வாங்கினார்.
உடனே டெல்லி எஜமானர்களின் ஆலோசகரான ஆடிட்டர் குருமூர்த்தியிடம் ஆலோசனை கேட்டார் ஒபன்னீர் செல்லம் அதன்படி தன்னை அடையாளம் காட்டி அதிகாரப்படுத்திய வி. கே.சசிகலா நடராஜன் , டி.டி.வி..தினகரன் ஆகியோரை எதிர்த்து தர்மயுத்தம் செய்து, வி. கே.சசிகலா நடராஜனை சிறைக்கனுப்பிய ஆறே மாதத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்து கொண்டு துணை முதல்வரானார்.
அதிமுகவின் கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய அதிகாரப் பதவியில் இருந்த போதும் அவர் எப்போதும் டெல்லியின் தீரா விஸ்வாசியே தான் என்பதில் தீர்க்கமாக இருந்ததால், கட்சியின் பொதுக் குழுவே ஒ.பன்னீர் செல்வத்துக்கு கல்தா கொடுத்தது.
அப்போது தன்னை உருவாக்கிய கட்சியின் தலைமை அலுவலகத்தையே ஆக்கிரமிக்க அடியாள் படையுடன் வந்த ஒபன்னீர் செல்லம் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைத்து அதை எதிர்த்த அதிமுக தொண்டர்களை அடித்து விரட்டியது.
தன்னையும் சேர்த்து வெறும் நான்கு எம்.எல்.ஏக்களை மட்டுமே கொண்டிருந்த ஒபன்னீர் செல்வத்துக்கு சட்ட சபையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிபோகாமல் பாதுகாப்பு தந்தது திமுக அரசு.
அதிமுகவில் தன்னை சேர்க்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்த ஒபன்னீர் செல்வம் அதற்கு இணக்கமான வகையில் அதிமுக மீதான தன் வழக்குகளை வாபஸ் வாங்க மறுத்தே வந்தார், டெல்லியின் கட்டளைப்படி. எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைப்பதற்கான வாய்ப்பாகவே ஒ.பனனீர் செல்வத்தை வைத்து அழகுபார்த்த டெல்லி தலைமையின் சூழ்ச்சி தெரிந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியும் கட்சிக்குள் ஒபன்னீர் செல்வத்தை அனுமதிக்கவில்லை.
கடைசியாக அமித்ஷாவிடம் தான் பேசிய போது, ’’மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவே ஆட்சிக்கு வரப் போகிறது’’ என அமித்ஷாவே சொல்லியதாகக் கோடிட்டு காட்டியிருந்தார், ஒ.பன்னீர் செல்வம்
அந்த சிக்னலுக்கு பிறகு, டெல்லி மேலிடத்தின் ஆசீர்வாதம் உள்ள இடத்திற்கே தற்போது வந்து அடைக்கலமாகியுள்ளார், ஒபன்னீர் செல்வம்
பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ்சின் மைத்ரேயனையே உள்வாங்கிக் கொண்ட இன்றைய திமுகவுக்கு பிரேமலதாவைத் தொடர்ந்து மற்றொரு பாஜக விசுவாசி வந்து சேர்ந்துள்ளார்.
’இவர்கள் பாசிச பாஜகவை எதிர்க்கும் படைக்கு பலம் சேர்ப்பார்கள். திமுகவின் கொள்கை கூட்டணிக்கு வலு சேர்ப்பார்கள்’ என்பதை நிராகரிக்கிறேன். இது ஒரு பிழைப்புவாத அரசியல். அவ்வளவே!


கருத்துகள்