முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமலாக்கத்துறை சிக்கலில் காங்கிரஸ் ப.சிதம்பரம், ஊழல் வழக்கில் சிக்கப்போகும் அமைசசர் கே. என்.நேரு

அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் இராகுல் நவீன் இன்று சென்னை வருகை தந்தார்.டில்லியிலிருந்து 3 நாள் பயணமாக வந்த இராகுல் நவீன்,

நிலுவையிலுள்ள நகராத வழக்குகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும், தற்போது நீதிமன்றங்களில் தமிழ்நாடு தொடர்பான தேக்கமான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை உயர் அலுவலர்களுடனும் மத்திய அரசு வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரின் தமிழ்நாடு வருகை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.மேலும், தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான ஊழல் பண மோசடி உள்ளிட்ட வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.



தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி  அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது  ஊழல் வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு ஊழல் செய்து லஞ்சம் பெற்ற வழக்கு விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கோரிக்கை வைத்த அமலாக்கத் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபி-க்கு பலமுறை கடிதம்அனுப்பப்பட்டிருந்தது.




இந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அந்த வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.




இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினர்  சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  மேலும் ED, தகுதியான அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட ப. சிதம்பரம் மீது வழக்குத் தொடர அனுமதி உத்தரவை, தஐஎன்எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் விவகாரத்தில் பணமோசடி செய்த குற்றம் தொடர்பாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், எல்.டி. சிறப்பு நீதிமன்றம் மூலம் விவகாரம் வருகிறதுசென்னை மண்டலம் உள்ளிட்ட அமலாக்கத்துறை விசாரணையில் (PMLA) பணமோசடி வழக்குகள் அதிகம் நிலுலையிலுள்ளது, பல அந்நிய செலாவணி மோசடி வழக்குகளும் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலுள்ளது. கௌஹாதியில் நடந்த அமலாக்கத்துறை அகில இந்திய ஆலோசனைக் கூட்டத்தில், 2 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடித்திட வேண்டுமென உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னை அமலாக்கத்துறையின் அவசரக் கூட்டம் அமைச்சர்களுக்கு போடும்  கிடுகிப்பிடி நடவடிக்கை எனப் பார்க்கப்படுகிறது, 



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்,  அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசியல் களத்தில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசரக் கூட்டம் , அரசியல் களத்தில் பரபரப்பை உறுவாக்கி வைத்துள்ளது.

அமலாக்கத்துறை, தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு காவல்துறைக்குக் கடிதம் எழுதிய விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவுசெய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் இயக்குநரான இராகுல் நவீன், தமிழ்நடு வருகை  திடீரென முடிவானதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் குறித்து அமலாக்கத்துறை வட்டாரத்தில், ``ஏற்கெனவே அமலாக்கத்துறையில் தமிழ்நாடு அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது கே.என்.நேரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. 

சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அமலாக்கத்துறையின் விசாரணையில் பணமோசடி வழக்குகள் அதிக அளவில் நிலுலையில் உள்ளன. அதேபோல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பல, 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. 

இந்த அடிப்படையில்தான் சென்னையில் மூன்று நாள்கள் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்தினை இராகுல் நவீன் நடத்த உள்ளார். இதில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளார்கள். 

ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் சிலரின் வழக்குகள் பல ஆண்டுகளாக அமலாக்கத்துறையின் விசாரணை என்கிற பெயரில் கிடப்பில் கிடக்கின்றன. அந்த வழக்குகளின் விவரங்களை இப்போது அமலாக்கத்துறையின் இயக்குநர் கேட்பார்” என்கிறார்கள். 

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழ்நாட்டை தி.மு.க-விடமிருந்து மீட்போம்” என்று முழங்கியிருந்தார். இதற்கு ஏற்றார்போல மத்திய அரசின் ஏஜென்சிகளும் தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராகப் பிடியை இறுக்கத் துவங்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், அமலாக்கத்துறை இயக்குநர் வருவதும், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மண்டல அமலாக்க அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை நடத்த இருப்பதையும் வெறும் அலுவல் பயணமாக மட்டும் பார்க்க முடியாது. 

“தேர்தலுக்கு முன்பாக அமைச்சர்களுக்கு அவர்கள் செய்த ஊழல் அடிப்படையில் அமலாக்கத்துறை நெருக்கடி கொடுத்து தேர்தல் பணிகளை முடக்கும் நிலை வரலாம் என்கிறார்கள் தி.மு.க-வினர்.காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதில் சட்டவிரோதப் பணம் சிக்கியதாகவும் ED கூறுகிறது. ஏஜென்சி பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இனி, நீதிமன்றம் தான் இந்த விஷயத்தில் முடிவு செய்யும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...