முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவெக தலைவர் நடிகர் விஜய் மீதான விவாகரத்து வழக்கு அவரது அரசியலைப் பாதிக்காது மேலும் மெருகூட்டும்

குடும்ப நல வழக்கு விவரங்களை நீதிமன்ற இணையத்தில் காணவே இயலாது. பெயர்கள் பெருக்கல் ××××× குறியீட்டில் தான் இருக்கும். அது HMOP ஆனாலும் SMOP ஆனாலும் DVC ஆனாலும் 

தனி மனித குடும்ப நல வழக்கு மனு எப்படி இணையத்தில் பரவி்யது. செங்கல்பட்டு நீதிமன்றம் வழக்கு மனுவை பொது வெளியில் விதைத்தவர்கள் யார்?

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து சூமோட்டோவாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். விஜய் ஒரு சினிமா நடிகர் அவர் சினிமாவில் டூயட் பாட வேண்டும், நடிகை இல்லாமல் நடிகர் இல்லை, அது அரசியலில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகட்டும் எஸ்.எஸ்.ஆர். ஆகட்டும். நடிகர் விஜயகாந்த் நடிகை ராதிகா ஆகட்டும் நடிகை பானுமதி ஆகட்டும், நடிகர் கமலஹாசன் நடிகை கௌதமி ஆகட்டும், சினிமா உலகம் தனி அரசியலுக்கு தகுதி நேர்மை, தூய்மை, ஊழலற்ற நிலை மடடுமே தலைவருக்கு மனைவி யார்? துணைவி யார்? உப துணைவி யார் என சமூகம் பார்க்காது, ஆந்திராவில் என்.டி. ராமாராவுடன் சிவபார்வதி வந்த பின்னர் தான் அதிக மக்கள் வாக்களித்தனர்,  இதுபோல 200 உதாரணம் கூறமுடியும், அரசியல் நேர்மை மட்டுமே தேவை,


அது தவெக தலைவர் நடிகர் விஜயிடம் அதிகம் உள்ளதாகவே மக்கள் நம்பும் நிலையை நாம் காண்கிறோம். இரண்டு தரப்பு ஊழல் வாதிகளைப் பார்த்த மக்கள் இப்போது ஒரு மாற்றத்தை விரும்புவது கண்கூடாகத் தெரிகிறது, அது ஆணடவர்களுககும்,  ஆளுபவர்களுக்கும் பிடிக்கவில்லை. இதில் நாம் கூறும் உதாரணம் ஒன்று மட்டுமே, வள்ளி திருமணம் தெருக் கூத்தில் அரிதாரம் பூசிய இராஜபார்ட் முருகன் நடிகர் முடிவில் ஸ்ரீ பார்ட் வள்ளி நடிகை கழுத்தில் மாலை மாற்றிப்போட வேண்டும், ஊருக்கு ஊர் நடிகர்கள் மாறும் இது தொழில் தர்மம்,





அப்போது தான் அந்த மொத்த நடிகர்களும் காலையில் சம்பளம் வாங்கி ஊர் செல்ல முடியும், இராஜபாரட் மனைவி நேரில் கூத்துப்பார்க்க வந்தாலும் அதைத் தடுக்க முடியாது. இது நியதி, 2021 ஆம் ஆண்டில் முடிந்த பஞ்சாயத்து 2026 ஆம் ஆண்டு வருவதற்கு யார் காரணம் என்பதை அரசியல் அறிந்த பலருக்குத் தெரியும், ஆனால் மக்கள் பேப்பர் மற்றும் சமூக வலைதளங்கள் உண்மை பேசாது, 


காலஞ்சென்ற எம்ஜிஆர் உடன் மனைவி ஜானகி வந்து ஓட்டுக் கேட்பதை விட ஜெயலலிதா வந்தால் அதிகம் விழும் காரணம் இரசனை மிகுந்த தமிழ் ரசிகர்கள் தான், வாக்காளர்கள் விஜய் விவகாரத்தில் சங்கீதா யாரெனப் பார்க்க மட்டார்கள். 1999 ஆம் ஆண்டு நடிகர் விஜய் லண்டனில் வசிக்கும் சங்கீதா திருமணம் நடைபெற்றது -27 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துளளார், அது அவர்கள் தனிப்பட்ட விவகாரம் அரசியல் அல்ல 

நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது 2021 ஏப்ரல் மாதம் அவருக்கு தெரியவந்ததாம் ஏன் 5 வருடம் காத்திருந்து இதைக் கூற வேண்டும்,  அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும், அதை விஜய் வழக்கறிஞர் மூலம் சந்திப்பார்.

2021 ஆம் ஆண்டு முதல் மனதளவிலும், உணர்வுப்பூர்வமாகவும் விஜய் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆஹா இது ஒன்றே போதும் தாராளமாக விவாகரத்து கிடைக்கும்.


விஜயின் திருமணத்தை மீறிய உறவால் 2021ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வசித்து வருகிறோம் உங்களுக்கு நீதிமன்றம் கடவுச் சீட்டை கேட்கும் நினைவில் கொள்க

எனது கணவர் விஜய் தொடர்ந்து நடிகையுடன் வெளிநாடு செல்கிறார், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் (அது தொழில்) 







என் கணவருடன் வெளிநாடுகளுக்கு செல்லும் நடிகை இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என இன்னும் சில சங்கதிகள் சேர்த்து விவாகரத்து கோரி  செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில்  எஸ்.எம்.ஓ.பி. மனு சங்கீதா விஜய் மனுதாரர் /எதிராக/ ஜோசப் விஜய் சந்திரசேகர் எதிர் மனுதாரர் என சிறப்புத் திருமணச் சட்டம், 1954 ன் பிரிவு 27(1)(a), (b), (d) மற்றும் பிரிவுகள் 36 & 37 ஆகியவற்றின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட  வழக்கில் சங்கீதா வழக்கறிஞர்கள் M/s. ரெத்தின அசோகன், ம்ருணாலினி தேஷ்முக், டிப்ரோசன்னா மற்றும் பி.மஞ்சுளா, ஆவர். இந்த வழக்கை தவெக தலைவர் நடிகர் விஜய்  தனது வழக்கறிஞர் மூலம் சந்திப்பார் அதற்கும் அரசியலுக்கும் எந்த விதமான தொடர்புமில்லை.கோடீஸ்வரரின் மகளாச்சே.. யார் இந்த சங்கீதா? ரசிகை மனைவியானது எப்படி? பின் விவாகரத்து கோரும் பின்னணி என்ன?


நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ள நிலையில் சங்கீதா யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தவெக தலைவர் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜயிடம் விவாகரத்துக் கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தது.  வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது சங்கீதா இலங்கை வாழ் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். உலக ரியல் எஸ்டேட் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தும் சொர்ணலிங்கம் மகள் பெற்றோருடன் லண்டனில் செட்டில் ஆகியிருந்தார்.



அதாவது இலங்கை தமிழர்கள் மீதான யுத்தம் தீவிரமாக நடந்த போது வசதி இல்லாத ஏழைகள் இநதியாவில் தனுஷ்கோடி வரை படகில் வந்து அகதி பரதேசியாக அகதிகள் முகாமில் வசிக்கும் நிலையில் வசதியுள்ள பலர் ஐரோப்பாவில் லண்டன் மறற்றும் ஜொனிவா எனப் புலம் பெயர்ந்தனர் அவர்கள் நிலையை பணம் தான் முடிவு செய்தது, சங்கீதாவின் தந்தை தொழிலதிபர். விஜயை விட பெரிய கோடீஸ்வரர். கலைஞர் மு. கருணாநிதி மகள் பெங்களூரு வசிக்கும் செல்வி செல்லத்துக்கு வேண்டிய குடும்பம் சங்கீதா, விஜயின் நடிப்பில் வெளியான படத்தால் அவர் ரசிகையாகவே ஈர்க்கப்பட்டார். 26 வருடம் முன்பு 
குறிப்பாக "பூவே உனக்காக" படத்தில் விஜயின் நடிப்பில் சங்கீதா ரசிகரானார். இதனால்  லண்டனில் இருந்து நடிகர் விஜயை சந்திக்க சங்கீதா சென்னை வந்தார். படப்பிடிப்பு தளத்தில் விஜயை, சங்கீதா சந்தித்துப் பேசினார். தீவிர ரசிகை என்பதை வெளிப்படுத்தி விஜயை புகழ்ந்தார். இது விஜயை கவர்ந்தது.


அதோடு சென்னை வந்த சங்கீதா, விஜய்யின் வீட்டிற்கு அருகிலேயே உள்ள ஒரு விஐபி வீட்டில் தங்கியிருந்தார். இதனால் விஜய் அவரை தனது வீட்டிற்கு அழைத்தார். அங்கு விஜய்யின் பெற்றோர்களான இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரை சங்கீதா சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே அவர்களுக்கு சங்கீதாவைப் பிடித்துப்போனது.

அதோடு, நடிகர் விஜய்க்கும், சங்கீதாவை பிடித்ததை சந்திரசேகர் - ஷோபா உணர்ந்தனர். இதனால் சங்கீதாவை திருமணம் செய்கிறாயா? என விஜயிடம் தந்தை சந்திரசேகர் கேட்டார். அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இருகுடும்பத்தினரின் ஏற்பாட்டில் பிரமாண்டமாக விஜய் - சங்கீதா திருமணம் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நடந்தது.


இவர்களுக்கு 2000 ஆண்டில் மகன் பிறந்தார்.  ஜேசன் சஞ்சய். 2005 ஆம் ஆண்டில் மகள் பிறந்தார்.  திவ்யா சாஷா. ஜேசன் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் 'நான் அடித்தால் தாங்கமாட்டே' பாட்டில் திரைப்பட அறிமுகம் வந்து செல்வார். மகள் திவ்யா சாஷா 'தெறி' படத்தின் கிளைமேக்சில் வருவார். சங்கீதா பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜயுடன் சேர்ந்து பங்கேற்று வந்தார்.

ஆனால், 2023 ஆம் ஆண்டில், அவர்களின் விவாகரத்து வதந்திகளாக சமூக வலை தளங்களில் பரவியது. இயக்குநர் அட்லியின் மனைவிக்கு வளைகாப்பு மற்றும் விஜய்யின் 'வாரிசு' பட டிரெய்லர் வெளியீட்டு விழாக்களில் சங்கீதா இல்லாமல் விஜய் மட்டுமே பங்கேற்றார். அப்போதே விவாகரத்து தொடர்பான செய்திகள் வெளியாகின.

ஆனால் விஜய் - சங்கீதா தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருவரும் அமைதியாக இருந்தனர். இதனால் அது யூகமாகவே வெளியில் கருதப்பட்ட நிலையில் தற்போது சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தற்போது விஜய் ஒன்றும் கோவிலில் குருக்கள் வேலை செய்யவில்லை,  சினிமாவில் பிரபல நடிகர் அரசியலில் நுழைந்துள்ள நிலையில் அவர் எதிரிகள் எடுத்த அவதூறு குடும்ப ஆயுதம் இது ஆனால் இது சங்கீதாவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும், காரணம் ஏழைகளின் மகள் ஜீவனாம்சம்  கேடடால் நியாயம் விஜயை விட வசதி படைத்த ஒருவர் 125 வது பிரிவில் கேட்டால் கிடைக்குமா? மேலும் அவர் லண்டனில் வசிக்கும் நிலையில் இந்திய விஷா அணைத்தையும் காடடிக் கொடுக்கும் காரணம் NRI மேலும் 18 வயது கடந்த மேஜர் பிள்ளைகளை ஜீவனாம்சம் குறியீடு கட்டுபபடுத்தாது,  சினிமா விழாவில் அயல்நாடு செல்வது சகஜம், சிறிய நடிகர் நடிகைகளே செல்லும் நிலையில் பிரபல நடிகர் நடிகை செல்வது குற்றமில்லை,  ஆனால் நடிகைக்காக அரசு பனத்தை செலவு செய்து கார் ரேஸ் நடத்தவது குற்றம் , மற்றும் வேறு ஒரு பிரபல நடிகை வசிக்கும் தெருவுக்கு பல கோடியில் கடற்கரையில் சாலை அமைத்துத் தருவதே ஊழல் தான். ஆகவே அரசியல் வேறு நடிகர் குடும்ப வாழ்க்கை வேறு என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.               




இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019-க்கான விதிகளை மார்ச் மாதம் 11, 2024 அன்று இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இலங்கையில் பிறந்து இங்கிலாந்து நாடடில் லண்டன் நகரில் வசித்து இந்தியாவில் திருமணம் செய்த சங்கீதாவுக்கு நீதிமன்றத்தில் குடியுரிமை குறித்து வினா எழும்,
விஜய் இந்தியக் குடியுரிமை கொண்டவர் ஆனால் சங்கீதா திருமணச் சான்றிதழ் UK, லண்டன் குழந்தைகள் பிறப்புச் சான்றிதழும் UK.. லண்டன் முதலில் அவரது குடும்பம் இந்தியக் குடியுரிமையுள்ளதா என்பதை பரிசீலனை செய்வது மத்திய அரசு வெளிவிவகாரத்துறை விசாரணை தேவை, இங்கிலாந்து நாட்டில் இவர்கள் குடும்பம் தமிழ்நாடு சார்ந்த யார் பினாமி என்பதை மக்கள் அறியச்செயவது இன்னும் சிறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...