வெள்ள முன்னறிவிப்பு மற்றும் வெள்ள மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிலரங்கை மத்திய நீர் ஆணையம் நாளை புதுதில்லியில் நடத்துகிறது
மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மத்திய நீர் ஆணையம், முன்னறிவிப்பு சேவைகள், வெள்ள மேலாண்மை ஆகியவை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்த ஒரு நாள் பயிலரங்கை நாளை (பிப்ரவரி 9, 2026) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை புது தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
பயிலரங்கை நீர்வளம், நதி மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு வி.எல். காந்த ராவ், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் திரு அனுபம் பிரசாத், மத்திய நீர் ஆணைய உறுப்பினர்கள், மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் தொடங்கி வைக்கின்றனர். இந்த பயிலரங்கின் போது, வெள்ள முன்னறிவிப்பு, தயார்நிலை, வெள்ள மேலாண்மை திட்டமிடலில் மத்திய-மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவது குறித்து கவனம் செலுத்தப்படும்.
காலையில் தொழில்நுட்ப அமர்வுகளும், பிற்பகலில் வெள்ள மேலாண்மை பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரித்தல் குறித்த அமர்வும் நடைபெறும்.




கருத்துகள்