முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மடப்புரம் கோவில் காவலாளி அடித்துப் படுகொலை செய்த வழக்கில் புகார்தாரி நிகிதா கைதாவது எப்போது

காவல்துறை விசாரணைக் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கில் 

நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தகவல்,  காவலர்களுக்கு நீதிபதி கடுமையான கண்டனம்


காவல்துறை விசாரணை க் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட மரண வழக்கில் புதிய திருப்பமாக, நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தெரிவித்துள்ளது. அதைக்கேட்ட நீதிபதி, ஒன்றும் இல்லாத வழக்குக்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த காவலர்கள் விசாரணை முடியும் வரை சிறையிலிருக்கட்டும் என உத்தர விட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப் புவனம் அருகில் மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த திருமங்கலம் பகுதியில் வசிக்கும் நிகிதா என்பவரது காரை நிறுத்தி வைக்க ச் செய்ய கோவில் காவலாளி அஜித்குமாரிடம் கேட்டுள்ளார்.

அவரும் நிகிதாவின் காரை நிறுத்தி வைக்கச் செய்துள்ளார். பின்னர் அதற்கு பணம் கேட்டதாகவும் அப்போது நிகிதாவுக்கும் அஜித் குமாருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதில் ஆத்திரமடைந்து அஜிக்குமார் மீக காவல் துறையில் புகார் செய்த நிலையில் துணைக் கண்காணிப்பாளரின் தனிப்படைக் காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், சங்கரமணிகண்டன், ராஜா, ராமச்சந்திரன் ஆகியோர்


தாக்கும் காணொளிக் காட்சி வெளியாகியது. அதையடுத்து திருப் புவனம் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணி கண்டன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். சர்ச்சை பெரிதானதால், அஜித்குமாரை காவலர்கள் அடித்து கொலை செய்த மரணம் மற்றும் அவர் மீதான நகை திருட்டு வழக்குகளை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

அதன்பின் திருப்புவனம் காவல் நிலையம் முதல் மடப்புரம் கோயில் வரை உள்ள பாதைகளில் உள்ள சிசிடிவி காணொளிக் காட்சிகளை சிபிஐ உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர் அத்துடன், 

நிகிதா, காவல் ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோரையும் குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகி யோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்





அப்போது நீதிபதி ஸ்ரீமதி, அஜித் குமார் மீதான நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என்று கேள்வி எழுப் பினார். அதற்கு சிபிஐ தரப்பில், நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை. இதனால் அந்தப் புகார் முடித்து வைக்கப்பட்டது. இதுதொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய் யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைக் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, “நகை திருட்டு நடைபெறாமலேயே, நகை திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டு, ஒன்றுமில்லாத வழக்குக்காக ஒருவரை அடித்துக் கொலை செய் துள்ளனர். புகார் அளித்தவர் மீது நட வழக்கை எடுக்க வேண்டியதுதானே?




அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது” எனக் கூறப்பட்ட மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள் தனிப் படைக் காவலர்களில் பிரபு என்பவரைத் தவிர மற்றவர்கள் தான் அஜித்குமாரை தாக்கியதாக கூறியுள்ளனர். எனவே, பிரபுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதி ஸ்ரீமதி, “யாராக இருந் தாலும் வழக்கு முடியும் வரை சிறை யில் இருக்கட்டும். நடந்ததைக் கேட்டு மனம் பதறுகிறது. ஏதுமில்லாத ஒன்றுக் காக ஒருவரை இப்படி தாக்கியுள்ளனர். இதில் தொடர்புடைய காவல் துறை யினருக்கு பாடம் புகட்டுவோம். விசா ரணை பிப்ரவரி மாதம்.17-ஆம் தேதிக்கு தள்ளிவைக் கப்படுகிறது” என்று உத்தரவிட்டார். இந்த நிலைமை சிபிஐ தாக்கல் செய்யும் அறிக்கை அடிப்படையில் நிகிதா கைதாவாரா என்பது இனி சிபிஐ  நகர்வை வைத்து அறியலாம்.ஆட்சி அதிகார வர்க்கத்தோடு அந்தரங்கத் தொடர்பிருந்தால், எப்பேர்ப்பட்ட ஆட்டத்தையும் ஆடிவிட்டு, பாதுகாப்பாக க இருக்கலாம் போல என்பதை 


இதற்கு நிகழ்காலத்தின் நிகரற்ற சாட்சியாக உள்ளவர், திண்டுக்கல்  பேராசிரியை பணி செய்த திருமங்கலம் பகுதி நிகிதா! 

பேராசிரியை என்று முன்னொட்டு சேர்த்து சொல்வதற்கே சற்றும் அருகதையற்ற ஒரு கல்வித் துறையின் களங்கமே - இவராவார்

மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜீத்குமாரை காவலர்கள் அடித்து படுகொலை செய்து உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்தில்,

‘’நகை திருட்டுப் போகவுமில்லை.     அஜித்குமார் அதைத் திருடவும் இல்லை’’ என சி.பி.ஐ திட்டவட்டமாக உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

செய்யாத குற்றத்திற்கு சித்திரவதைகளை அரங்கேற்றி, ஒரு உயிர்பறிப்பு படுகொலை நடந்துள்ளது.

கோவிலுக்கு தொண்டுழியம் செய்து வந்த அந்த ஏழை வர்க்க இளைஞன், ‘’திருடனல்ல,  யோக்கியமானவன்’’ என்பதைச் சொல்வதற்கே ஏழெட்டு மாத காலமும், அதற்கு ஒரு சிபிஐ விசாரணையும் தேவைப்படுகிறது.

’இந்த எளிய உண்மையைக் கண்டறியும் அருகதை தன் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறைக்கு  இல்லை’ என தீர்மானகரமாக நம்பித் தான் தமிழ்நாடு முதல்வர் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தாரா..?  என்பது இங்கு எழுவினா அல்லது உண்மையை உரத்துச் சொல்லும் உள் மனத் திடமின்றி, ஒதுங்கி வழிவிட்டாரா? ன்பது தான் தெரியவில்லை.

துள்ளத் துடிக்க அடிந்து துவம்சம் செய்து உயிரைப் பறித்த கொலை கார ஏவலுக்கு அடி பணிந்த -காவல் துறையில் சில கயவர்கள் சிறையில் இருக்க,

அதற்கு கட்டளையிட்ட மேலிடமும், அந்தக் கட்டளைக்கு காரணமான பொய்ப் புகார்தாரியான நிகிதாவும் எப்படி இங்கே நிம்மதியாக வலம் வர முடிகிறதோ…? தெரியவில்லை.

சிபிஐ கைது செம்து அவரை சிறையில் வைத்து பின் நீதிமன்றத்திற்கு தெரிவித்து மக்கள் மத்தியில் நற்பெயரை சிபிஐ தட்டிச் செல்லும் நம்புவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...