முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

14 அமைச்சர்கள் தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுங்கிய அதிமுக

அஇஅதிமுக கூட்டணியில்



பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளைத் தவிர்த்து,  
தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) - 5, ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி- 2, , ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் -2,  பச்சமுத்து உடையார் எனும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி - 2, கே.சி.திருமாறன் ஜியின் தேசிய பார்வடு பிளாக் -1, மற்றும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் -1, என மேலும் சில சிறிய கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 37 முதல் 40 தொகுதிகளில் தாமரையில் களம் இறங்குகின்றனர்  இன்று அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு முதற்கட்டமாக 23 வேட்பாளர்களை முதலில் அறிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமி, எடப்பாடியில்:- எடப்பாடி K. பழனிசாமி,   வேப்பனஹள்ளியில்: கே.பி.முனுசாமி, திண்டுக்கல்:- திண்டுக்கல் C. சீனிவாசன்,     நத்தம் :- நத்தம் இரா. விசுவநாதன்,     தொண்டாமுத்தூர்:-  S.P. வேலுமணி,   குமாரபாளையம்:- பி.தங்கமணி,   இராயபுரம்:- D. ஜெயக்குமார், மைலம்:-C.Ve. சண்முகம், மதுரை மேற்கு:-செல்லூர் K. ராஜூ, பாலக்கோடு:-K.P. அன்பழகன்,  நன்னிலம்:-R. காமராஜ்,              வேதாரண்யம்:-O.S. மணியன், விராலிமலை,:-டாக்டர் C. விஜயபாஸ்கர், கோவில்பட்டி:-கடம்பூர் C. ராஜூ,  திருமங்கலம்:-R.B. உதயகுமார்,  சிவகாசி:-K.T. ராஜேந்திரபாலாஜி, மதுரவாயல்:-பா.பென்ஜமின், கலசபாக்கம்:-அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருப்பரங்குன்றம்:-V.V.ராஜன் செல்லப்பா, பவானி:-K.C. கருப்பணன்,ஜோலார்பேட்டை:-K.C. வீரமணி,  கரூர்:M.R. விஜயபாஸ்கர்,   அரியலூர்:-தாமரை S. ராஜேந்திரன்,  ஆகியோர் அறிவிக்கப்பட்டனர், 





பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளாக   
மயிலாப்பூர், தளி,   மொடக்குறிச்சி, உதகமண்டலம்,  அவிநாசி,திருப்பூர்  தெற்கு    கோயமுத்தூர் வடக்கு,   கந்தர்வகோட்டை,திருப்புத்தூர்(சிவகங்கை) ,மதுரை தெற்கு,   சாத்தூர்,  திருச்செந்தூர்,  வாசுதேவநல்லூர்,நாகர்கோவில்,விளவங்கோடு,ஆவடி,  தஞ்சாவூர்,   திருவண்ணாமலை, திருவாரூர்,மானாமதுரை, அறந்தாங்கி,குளச்சல், பத்மநாபபுரம், இராமநாதபுரம், புதுக்கோட்டை,   இராதாபுரம்,  இராசிபுரம். ஆகும் இதில் 14 மாநில அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக நேரடியாகப் போட்டியில்லை.






கூட்டணிக் கடசிகள் தான் போட்டி  என்ற நிலை    பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு மூவர் இதில் 
கீழ் வேளூர் - வடிவேல் இராவணன்- பொதுச்செயலாளர், செஞ்சி - அ.கணேஷ் குமார், அம்பத்தூர் - கே.என். சேகர்  போட்டி    அடுத்ததாக அமமுக போட்டியிடும் தொகுதிகளாக பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி,   திருப்பத்தூர், நாங்குநேரி, ஓட்டப்பிடாரம் ,     திருச்சிராப்பள்ளி மேற்கு,     சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளமாகும், பாமக போட்டியிடும் தொகுதிகளில்  சேலம் மேற்கு,   தருமபுரி, பென்னாகரம்,   விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்தரமேரூர்,ஜெயங்கொண்டம், செஞ்சி, ரிஷிவந்தியம், கீழ்வேளூர்,   பெரம்பூர், காட்டுமன்னார்கோவில்,   அம்பத்தூர், விருதாச்சலம்,சேலம் வடக்கு, போளூர், ஆகும்    புரட்சிபாரதம் பூவை மூய்த்தி போட்டியிடும்   கே.வி.குப்பம், ஆகும் அவிநாசி தொகுதியில் பாஜக போட்டி

அவிநாசி 1984 ஆம் ஆண்டு முதல் அதிமுக வசமுள்ள தனித் தொகுதி 1996 ஆம் ஆண்டில் மட்டும் திமுக வெற்றி 










முன்னாள் சபாநாயகர் தனபால் கடந்த 2 தேர்தல்களிலும் 60,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்யாசத்தில் திமுகவை வென்றார்

தற்போது பாஜகவின் இணை அமைச்சர் எல் முருகன் இங்கு போட்டி இட வாய்ப்பு,   காலமான  வெங்கடேஷ் பண்ணையார் மனைவி ராதிகா செல்வியை அதிமுக ஜெ.ஜெயலலிதாவிற்கு எதிராக தேர்தலில் பயன்படுத்திய திமுகவின் மு.கருணாநிதியைப் போல இல்லாமல் 

காலமான ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடியை வெற்றி பெற  வைக்க நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும் என அக் கட்சியினர் மத்தியில் கோரிக்கை வைக்கும் நிலையில் அதிமுக வேடபாளராக அவர் சென்னை திருவிக நகரில் களம் காண்கிறார்.  அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ்(மூ)கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதில் த.மா.காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.கவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்தார்.





 த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளின் களம் காணும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் செல்வாக்கு அந்த மாதிரி. ஈரோடு மேற்கில் அமைச்சர் முத்துச்சாமி, இராணிப்பேட்டையில அமைச்சர் காந்தி, ஒட்டன் சத்திரம் அமைச்சர் சக்கரபாணி, கும்பகோணத்தில் சாக்கோட்டை அன்பழகன்,  கிள்ளியூர் சட்டமன்றக் காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், இந்த 5 பேரை எதிர்த்துத் தான் களம் காணவேண்டிய கட்டாயம் த.மா.க.வுக்கு உள்ளது.

அ.தி.மு.க. தேர்தல் வரலாற்றில் ஒரு முறை கூட வெற்றி பெறாத கிள்ளியூர் 5 தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு வெற்றியைத் தராத ஒட்டன் சத்திரம்.10 வருடங்களாக தி.மு.க.வின் கொடி பறக்கும் ராணிப்பேட்டை. 30 வருடங்களாக திமுக வசமான கும்பகோணம். எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் என 3 முதலமைச்சர்களின் அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர் முத்துச்சாமி களம் காணும் ஈரோடு மேற்கு. என தொகுதிகளைத் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சிக்கு அ.தி.மு.க. வழங்கியுள்ளது.

 பா.ஜ.க மேலிடமோ, இதுவரை மக்களைச் சந்திக்காமல் , சத்தமில்லாமல் மேல்சபைக்கு சென்று வந்த  ஜி.கே வாசனுக்கு, இந்த 5 தொகுதிகளையும் கொடுத்து தாமரை சின்னம் வழங்கி பரீட்சையில் இறக்கி விட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர் தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் அணியில்,      இந்த நிலையில் ஒரு  நடிகர் விஜயகாந்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக ரசிகர்கள் உண்டு. அது பிரேமலதா பக்கம் உள்ளதோ இல்லையோ அவர் நம்பும் அவர் சார்ந்த சமூகம் 

பாமகவை வட மாவட்டங்களில் நடிகர் விஜயகாந்த் செல்லாக் காசாக்கியதில் தேமுதிக பெரும் பாங்காற்றியது.

வன்னியர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு விஜயகாந்தைப்  பிடிக்கும்.

அதையும் விட வட மாவட்டங்களில் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகள் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் அதிகம்.இந்தப் புரிதல் இல்லாமல் அரசியல் பேசுவது மடமை.

திமுகவின் நகர்வு வாக்குகள் அடிப்படையில். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வட மாவட்டங்களில் திமுக கடும் தோல்வியைத் தழுவியது. இதுவே உண்மை, பாமக கோட்டையை உடைத்துத் தான் நடிகர் விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவரனார் 

விசிக கடசிக்கு போன முறையும் இதே ரெண்டு பொதுத் தொகுதிகள் கொடுத்துத்தான் போட்டியிட்டார்கள். இது ஒன்றும் சமூக நீதி  இல்லை, திருமா கட்சியில் இருக்கும் திமுக ஆதரவாளர்கள் அணி நிர்வாகிகளான ஷா நவாஸ் ஹூசைன் மற்றும் எஸ்.எஸ் பாலாஜி  ஆகியோர் பட்டியல் சமூகம் இல்லை அவர்கள் தனித் தொகுதிகளில் நிற்க முடியாது. ஆகவே அவர்கள் பங்கு ஆறில் இரண்டு பொதுத் தொகுதி 

ஏன் - திமுக சமூக நீதி காக்கும் இயக்கம் ஆனால் கொங்கு கட்சிக்கு தனி தொகுதி கொடுக்கலாமே? அட அவுங்களுக்கு குடுக்குற பொது தொகுதி ல கவுண்டர் அல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்கலாமே? இது கூட வேண்டாம் . இஸ்லாமியர்கள் கட்சிகளுக்கு கொடுக்கும் தொகுதிகளில் ஒரு தனித் தொகுதியையோ அல்லது இஸ்லாமியர் அல்லாத வேட்பாளர் ஒருவருக்கோ கொடுக்க வைத்து வெற்றி பெற வைத்து மத சார்பின்மையை நிலை நாட்டலாமே. என பலரும் பேசும் நிலையில் தான் ஜான் பாண்டியன் கட்சி இராஜபாளையம் பொதுத்தொகுதியில் போடடியிடுகிறது,

தொகுதிகளைக் கவனியுங்கள். பாசக தெளிவாக காய் நகர்த்தியது என்று மக்கள் பேசக் காரணம்.

பாஜக வளர்ச்சிக்கு உதவுகிறது அஇஅதிமுக. கடந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சி போட்டியிட்ட நிலையில், இந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது.14 திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக நேரடியாக போட்டியில்லை

திமுக அமைச்சர்கள் 14 பேரை எதிர்த்து நேருக்கு நேராக போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கிய அதிமுக.

அமைச்சர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), பெரியகருப்பன் (திருப்பத்தூர்), மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), நாசர் (ஆவடி), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), மதிவேந்தன் (ராசிபுரம்) ஆகிய தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்தும் 

கே.என்.நேரு (திருச்சிராப்பள்ளி மேற்கு), மன்னார்குடி (டி.ஆர்.பி.ராஜா), சைதாப்பேட்டை (மா.சுப்பிரமணியன்) ஆகியவற்றை அமமுகவுக்கு ஒதுக்கீடு செய்தும்.

சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), ஈரோடு மேற்கு (முத்துசாமி), ராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆகியவற்றை தமாகாவுக்கு ஒதுக்கீடு செயதும்.

ராஜேந்திரன் (சேலம் வடக்கு) பாமகவுக்கும், எஸ்.எஸ். சிவசங்கர் (குன்னம்) IJK வுக்கு ஒதுக்கீடு செய்தும். என்டிஏ கூட்டணி தெர்தலைச் சந்திக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...