சாத்தான்குளம் வழக்கின் நியாயத் தீர்ப்பு நீதி வென்றது
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சி.பி.சி.ஐ.டி-காவல்துறைக்குபாராட்டு என வழக்கறிஞர் ஹென்றி திபேன் கருத்து, இந்த வழக்கில் தண்டனை விபரம் மார்ச 30-இம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த கிருஸ்தவ நாடார் வணிகர்களான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் இருவரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் தாக்கியதாலேயே இருவரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தந்தை மகன் படுகொலையானது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில்,
இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததன்படி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 105 சாட்சியங்களில் பெரும்பாலான சாட்சியங்கள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு எதிராகவே இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் ஜாமீனில் விடுவிக்கக் கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.






கருத்துகள்