இலங்கைக்கு கடத்த முயன்ற ரூபாய் .300 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டத்தில் இருவர் கைது
இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு சிற்றூர்தியில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த, 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு காவல்துறை , இருவரைக் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட் டம், மண்டபம் தெற்கு கடற் பகுதி வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக
இராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் அதிகாலையில் தகவல் கிடைத்ததாகவும்
அதனடிப்படையில் அவர்களுடன், போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினரும் இணைந்து, மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள காரிக்கூட்டம் பேரூந்து நிலையம் அருகில் சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, மெத் ஆம்பெட்டமைன், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட பல போதைப் பொருட்களிருந்தன.
விசாரணையில் மண்டபம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த இப்ராஹிம் பாதுஷா, (வயது 29), அம்பலகாரத் தெரு முகைதீன் பயாஸ், (வயது 27), ஆகியோர் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது.
இவர்கள், இராமநாதபுரம் நேரு நகரில் ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை விசாரணை மூலம் கூறினர்.
இவர்களிடமிருந்து, 19 கிலோ மெத்ஆம்பெட் டமைன், 10 கிலோ ஹெராயின், 219 கிலோ கஞ்சாவும் பிடிப்பட்டது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு 300 கோடி ரூபாய் எனத் தெரிவித்தனர். இதில் முக்கிய குற்றவாளியான
முகைதீன் பயாஸ் மண்டபம் சேக் ரகுமானை Q பிரிவு காவல்துறை தேடி வருகின்றனர்.இப்ரஹீம் பாதுஷா மற்றும்
முகைதீன் பையாஸ் ஆகிய இருவரிடம்
ரூபாய் .300 கோடி மதிப்பில் போதைப் பொருட்கள் பறிமுதல்!
இராமநாதபுரம், மாவட்டம் மண்டபம் அருகில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூபாய் . 300 கோடி மதிப்புள்ள 248 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை பறிமுதல் செய்து இப்ராஹிம் மற்றும் பாயாஸ் கான் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.




கருத்துகள்