முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாகத் தகவல்

ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?'  பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாகத் தகவல். 




மேற்கத்திய வளைகுடா நாடுகள் தங்களது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளதன்படி கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியது. அபுதாபியில் ஈரான் போர் சூழல் வான்பரப்பை மொத்தமாக மூடிய துபாய். விமானப் போக்குவரத்து முழுவதும் ஸ்தமித்தது!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான் வழி தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனை எதிர்த்து இஸ்ரேலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிற நிலையில், துபாய் உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகள் தங்கள் வான் பரப்பை மூடியிருக்கின்றன. இதன் காரணமாக சர்வதேச அளவில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக, வான்வழிப் பாதைகள் மூடப்பட்டு, ஏராளமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் உலகின் முக்கிய விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா 'ஆபரேஷன் எபிக் ஃபுயூரி' என்றும், இஸ்ரேல் 'ஆபரேஷன் லயன்ஸ் ரோவர்' என்றும் பெயரிட்டன. அதிகாலையில் நடைபெற்ற தாக்குதல்கள் ஈரான் தலைநகர் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கரஜ் உள்ளிட்ட பல ஈரானிய நகரங்கள் குறிவைக்கப்பட்டன. ஈரானின் இராணுவத் திறன்களை அழிப்பதும், அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதும் தான் இதன் நோக்கம் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே  பல நாடுகளின் சிவில் வான்வெளிகள் முடங்கின. இஸ்ரேலும், ஈரானும் தங்கள் வான்வெளியை முழுவதுமாக மூடிக்கொண்டன. அண்டை நாடான ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளும் வர்த்தக விமானப் போக்குவரத்தை நிறுத்திக்கொண்டன. முன்னணி விமான நிறுவனங்கள் உடனடியாக பெருமளவிலான விமானச் சேவைகளை ரத்து செய்ததால், பயணிகள் குழப்பத்திலும் அச்சத்திலும் விமான நிலையங்களில் தவித்தனர்.


சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இரு நாடுகளின் வான்வெளிகளும் தாக்குதல்கள் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மூடப்பட்டதாக உறுதிப்படுத்தினர். விமான நிறுவனங்களுக்கோ அல்லது புறப்படத் தயாராக இருந்த பயணிகளுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. மத்திய கிழக்கு முழுவதும் நாடுகள் உடனடி விமானத் தடைகளை அமல்படுத்தின. இந்த நிலையில் இந்திய எம்ஃபஸி  மற்றும் வெளி விவகார அமைச்சகம் அங்கு வாழும் இந்திய மக்களுக்கு முன் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது அதில் ."சத்தியமேவ ஜெயதே"

இந்தியத் தூதரகம், பஹ்ரைன்

ஆலோசனை.

தற்போதைய பிராந்திய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பஹ்ரைனில் உள்ள அனைத்து இந்தியப் பிரஜைகளும் தகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் செய்திகள் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றவும்.

எங்கள் தூதரகம் வழக்கம் போல் இயங்கி வருகிறது.

தூதரகத்தின் 24×7 உதவி எண் 00973-39418071 ஆகும், மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலை பற்றிய அறிக்கை

'சத்தியமேவ ஜெயதே'

இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம்

அறிக்கை

ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதட்டம் அதிகரிப்பதைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம். பதட்டங்களைத் தணிக்கவும், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உரையாடல் மற்றும் இராஜதந்திரம் பின்பற்றப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்.

பிராந்தியத்தில் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய நாட்டினருடன் தொடர்பில் உள்ளன, மேலும் அவர்கள் விழிப்புடன் இருக்கவும், தூதரகங்களுடன் தொடர்பில் இருக்கவும், உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதலைப் பின்பற்றவும் கேட்டு பொருத்தமான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அதிகரித்து வரும் ஈரான்-வளைகுடா பதட்டங்களுக்கு மத்தியில் கட்டுப்பாடு மற்றும் உரையாடலை இந்தியா வலியுறுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...