முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரிங் மாஸ்டர் இல்லாத சர்க்கஸ் தே ஜ கூட்டணியில் இணைய முயலும் தவெக, தடுத்து நழுவும் அதிமுக

ரிங் மாஸ்டர் இல்லாத 




சர்க்கஸ் கூடாரம் தே ஜ கூட்டணியில் இணைய முயலும் தவெக, தடுத்து நழுவும் அதிமுக, கையறு நிலையில் பாஜக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் NDA உடன் கூட்டணி இல்லை என TVK மூத்த நிர்வாகி ஒருவர் நேரடியான கருத்தை தவெக தலைவர் விஜய் தரப்பு கறாராகச் சொல்லிட்டது. முதல்வர் பதவிக்கு தலைவர் விஜய் அடுத்த நிலை தான் கூட்டணியில் அதிமுகவுக்கு இடம் அதாவது தவெக, அதிமுக, பாஜக, பாமக, அமமுக,  தமாக, புநீக, மற்ற கடசிகள் 

என சரியாக, ஒத்து வந்தால் என் டி ஏ கூடடணி முதல் பெயர் நடிகர் விஜய் இரண்டாவது பெயர் பழனிச்சாமி அணைத்து தரப்பு சம்மதம் வந்தால் கூட்டணி  எடப்பாடி கே. பழனிசாமி ஒன்றும் மாஸ் நிறைந்த எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ இல்லை அவர் சுயேசசையாக நின்றால் டெபாசிட் பறிபோகும் சின்னம் இல்லாத அதிமுக எனும் நிலை வந்தால் அதிமுகவில் பழனிசாமி கட்சியை வெற்றி பெற வைக்க அவரால் முடியாது ஆகவே பாஜக சிந்திக்க வேண்டிய நேரமிது என தெளிவாகவே கூறப்பட்டுவிட்ட நிலை.




ஆனால் அதிமுக தரப்பு அதற்கு சமமதிக்கவில்லை, ஒருபுறம் பாஜகவிடம் இருந்து விடுபட முயற்சி செய்கிறது, அதற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலய் செய்த ஊழல்கள் தடுக்கிறது, அதனால் தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி வென்றால் யார் முதல்வர் என பாஜக தலைமை இதுவரை கூறாமல் இருப்பதே இந்த குழப்ப நிலைக்குக் காரணம்.  இதை  பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான பியூஷ்கோயலால் கூட சமாளிக்க முடியவில்லை ன்ற நிலையில், மதுரை திருச்சிராபபள்ளியில் பிரதமர் பேசிய கூட்டத்திலும், உள்துறை அமைச்சர் கலந்து கொண்ட கூடடத்திலும் எனடிஏ கூடடணி ஆட்சி தான் என்றார்கள் யார் முதல்வர் எனக் கூறவில்லை அதுவே முதல் பிழை, இந்த நிலையில் 

பிஜேபி கூட்டணிக் கட்சிகள் பரப்பிய சில வதந்திகளை தவெக நிராகரிக்கிறது, என மூத்த நிர்வாகிகள் வதந்தியா உண்மையா என்பதை நாம் அறிவோம் ஆனால் அரசியல் தெரியாத மக்கள் அறியவில்லை, என்பதால் இவ்வாறு தெரிவிக்கின்றனர், தமிழ்நாட்டில் தேர்தல் உடன்படிக்கை பற்றிய ஊகங்களுக்கு மத்தியில் NDA ஐ அதன் கருத்தியல் எதிரி என்று அழைக்கிறது; தீவிர ஊகங்களுக்கு மத்தியில் கரூரில் TVK புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது, விஜய்யின் TVK தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான NDA உடன் கூட்டணிக்கான வாய்ப்பை மறுத்துள்ளது  அது தவெக தலைமையில் வேண்டும் எனவும் மற்றும் தேர்தல் உடன்படிக்கைக்கான வாய்ப்பை "ஊடக ஊகங்கள்" என்று நிராகரித்துள்ளது. மார்ச் மாதம் 13 ஆம் தேதியன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றம் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பலம் மற்றும் பலஹீனம் கூட்டணி வாய்ப்புகள் குறித்து மதிப்பிட்டது.





"என்.டி.ஏ-வுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. பாஜக எங்கள் சித்தாந்த எதிரி என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்," என நிர்மல் குமார் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆனால், தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிமுகவின் எடப்பாடி கே. பழனிசாமியின் தீவிர ஆதரவாளராகவே மாறியுள்ளார் என்ற நிலையில் , டிவிகே உடனான கூட்டணிக்கான பேச்சு வார்த்தை எனடிஏ உடன் நடந்து வருகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நேரடியான பதிலைத் தவிர்த்தார்.

கூட்டணி குறித்து கவலைப்படுகிறீர்கள், குறிப்பாக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மக்கள் பிரச்னைகள் குறித்து கவலைப்படுகிறேன் என திசை மாற்றி பேசி சமாளித்தார் நைனார் நாகேந்திரன் சென்னையில் சனிக்கிழமை மார்ச் 14 ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார்.


















வீடு வீடாகப் பிரச்சாரம் முன் எடுத்து 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பேசிய கரூர் தேர்தல் பிரச்சாரப் பேரணியில் 41 பேர் உயிரிழந்த கரூரில் கூட்ட நெரிசல் விவகாரத்தைத் தொடர்ந்து அக்கட்சி குறைந்த அழுத்த நிலையிலேயே இருந்தது, பின்னர் படிப்படியாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் பேரணிகளை நடத்தத் தொடங்கியது. கரூர் மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் தலைமையில் டி.வி.கே நிர்வாகிகள் கரூர் கோடாங்கிபட்டியில் உள்ள கோவில்களில் இருந்து வேல் பெற்று தேர்தல் பிரசாரத்தை துவக்கினர். மக்கள் மத்தியில் கட்சி சின்னமான "விசில்" பிரபலப்படுத்துவதற்காக உறுப்பினர்கள் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் அதிமுக சில முடிவுகளை பாஜகவின் தலைமை வழிகாட்டுதல் இலலாமல் எடுக்கத் துணிந்துள்ளதை நாம் தற்போது காணலாம், இது கடந்த பத்து வருடங்கள் கடந்த பின் நடக்கும் நிகழ்வு ஆகும்.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் அதிமுக தரப்பில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைத்து எடப்பாடி கே பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.




.


அதே போல், வேட்பாளர்களை இறுதி செய்யும் அதிமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 6-லிருந்து 9-ஆக அதிகரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளதில், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் பாண்டிச்சேரி நிலை வேறுவிதமானது திமுகவில் ஜெகத்ரடசகன் கை ஓங்கி இருந்தாலும் அங்கு காங்கிரஸ் பெயர் இருககும் கூடடணி தான் முடிவு செயயும் யூனியன், ஆகவேதமிழ்நாட்டில் தி.மு.க, காங்கிரஸ் கூடடணி அமைந்திருப்பதன் மூலம், பாணடிச்சேரியிலும் அந்தக் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. அதே போல பா.ஜ.க.வுடனான தேஜகூட்டணிக்கு பிடிகொடுக்காமலிருந்த முதல்வர் ரங்கசாமி,  பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு கூட்டணி தொடர்வதாக தெரிவித்தார்.ஆனால் அதன்பிறகு தொகுதி உடன்பாடு குறித்து உள்ளூர் பா.ஜ.க-வினருடன் அவர் பேசாமல் இருந்தார். அதனால், `ல.ஜ.க தலைவரும், கோயமுத்தூர் 'லாட்டரி'










தொழிலதிபரின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூட்டணிக்குள் வருவதை முதல்வர் ரங்கசாமி விரும்பவில்லை. அதனால் சார்லஸ் மார்ட்டினை வெளியேற்றுமாறு பா.ஜ.க-வுக்கு ரங்கசாமி அழுத்தம் கொடுக்கிறார்' என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. உண்மை தான் தமிழ்நாட்டில் அதிமுகவில் கட்சி மாறி இணைந்த மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அங்கு கொண்டாடப்படுகிறார், அதேபோல தவெகவில் உள்ள மாரட்டின் மருமகனும் காவல்துறையில் பணி ஓய்வு பெற்ற திலகவதி ஐபிஎஸ் சகோதரி மகனுமான ஆதவ் அர்ஜுனா பாண்டிச்சேரியில் தனிக்கட்சி நடத்தும் மார்டடின் மகன் என

இந்த நிலையில்தான் கடந்த 12.03.2026 அன்று, காமராஜர் சாலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தன்னுடைய கட்சி அமைச்சர்கள், மற்றும் சடடமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்தார் முதல்வர் ரங்கசாமி. நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த முதலமைச்சர் ரங்கசாமி, `என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது, 'என்.ஆர்.காங்கிரஸ் கட்சி த.வெ.க-வுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறதா..?' என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'நாங்கள் எங்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆலோசனை செய்தோம்' என்று மட்டுமே பதிலளித்ததுடன், த.வெ.க குறித்து எழுப்பிய கேள்வியை கவனமாகவே தவிர்த்தார்.








தொடர்ந்து, 'மாநில அந்தஸ்து குறித்து உங்கள் கோரிக்கைக்கு மத்திய பா.ஜ.க பதிலளிக்கவில்லை. அதை வலியுறுத்தி என்.ஆர்.காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணிக்குமா' என செய்தியாளர்கள் கேள்விக்கு, “எங்களைப் பொறுத்தவரை மாநில அரசின் மிக முக்கியமான கோரிக்கை. அதை வலியுறுத்துவோம்" என்றார். அதையடுத்து நேற்று முன் தினம் 13.03.2026 அன்று பாணடிச்சேரிக்கு வந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்ஷுக் மாண்டவியா, பா.ஜ.க அமைச்சர்கள், சட்டமனற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நட்சத்திர விடுதியில் ஆலோசனை செய்தார்.

அதன்பிறகு நேற்று மாலை தனியார் நட்சத்திர விடுதியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டவியா, பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, "கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் என்.ஆர்.காங்கிரஸும், பா.ஜ.க-வும் இணைந்து தேர்தலை சந்திக்கும். கூட்டணிக்குள் வரும் புதிய கட்சிகள் குறித்தும் அவர்களுக்கான தொகுதிகள் குறித்தும் பிறகு அறிவிப்போம்" என்றார்.





அதற்கு, 'எங்கள் முதல்வரையும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி













யையும் கடுமையாக விமர்சித்த `லாட்டரி' ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் போது, பா.ஜ.க-வை கொள்கை எதிரி என்று சொன்ன விஜய் எங்கள் கூட்டணிக்குள்ளும் வரலாம்' என்று பின்னணி பாடுகின்றனர் முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள். அதையடுத்துப் பேசிய பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாலர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ்.அது தவிர பிற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். அந்த வகையில் ல.ஜ.க எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. முதல்வர் ரங்கசாமி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதே போல த.வெ.க-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நாங்கள் நடத்தவில்லை. மேலும் எங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ம.க கடந்த தேர்தலில் சீட் கேட்கவில்லை.

இந்த தேர்தலிலும் இதுவரை கேட்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும். கடந்த முறை அ.தி.மு.க-வுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்ததால் 5 தொகுதிகள் ஒதுக்கினோம். இந்தத் தேர்தலில் அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பதையும், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்தும் விரைவில் பேசி முடிவு செய்வோம்" என்கிறார்.NDA கூட்டணியில் தவெக தலைவர் நடிகர் விஜய் சேர்கிறார் என்ற செய்தி பரவலாக வலம் வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தடைந்தார் தவெக தலைவர் நடிகர் விஜய். டெல்லியில் உள்ள தாஜ்மான்சிங் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள நடிகர் விஜய் நேற்று காலை சிபிஐ அலுவலகம் வந்த போது அக்கட்சியின் பெருமளவில் கூடி வரவேற்றனர், விசாரணையா அல்லது விழாவா ன்ற நிலை இன்றும் தொடரும் நிலையில் அரசியல் களம் நடிகர் விஜயை நோக்கி திரும்பியுள்ளது.தவெக தலைவர் விஜயை கூட்டணிக்கு அழைத்ததால் கட்சிப் பிரமுகர் நீக்கம் என அறிவிப்பு செய்கிறார் மாநிலத் நைனார் நாகேந்திரன். அப்படியெனில் நடிகர் விஜயை மூச்சுக்கு 300;தடவை அழைத்த மூத்த பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு இந்த நிலை ஏன் வரவில்லை? தேவையே இல்லாமல் முன்னால் தலைவர் அண்ணாமலையை விமர்சித்த நடிகை குஷ்பூ இப்போதும் பாஜகவில் தான் இருக்கார். என்ன தான் நடக்கிறது தமிழ்நாடு பாஜக வில்? என்பதே சாமானியன் கேள்வி. அதிமுகவில் பழனிசாமி தன் இருப்பைத் தக்கவைக்க பாஜக மாநிலத் தலைமை ஒத்துப் போகிறது, ஆனால் அதை அறியாத தேசியத் தலைமை பாஜக கட்சி வளர்ச்சி நோக்கி நகர முயற்சிக்கிறது.   


 இந்த நிலையில் "நம்மை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கிறார்கள்; விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொள்கிறவர்கள் கூடதான் கூட்டணி" - கோபிசெட்டிபாளையத்தில் தவெகவின் மூத்த நிர்வாகி கே. ஏ.செங்கோட்டையன் பேச்சு. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...