தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுரை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தரிசனத்திற்காக வருகை தந்தார் .
அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது சாமி தரிசனம் செய்தார். பின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பெண்கள் பெரும் பிரச்சனையில் சிக்கி இருக்கின்றனர். குற்றங்கள் அதிகரித்துள்ளன மதுவால் தங்கள் குடும்பம் அழிந்து கொண்டிருப்பதைக் கண்டு பெண்கள் கலங்குகிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தாய் ,சகோதரிகள், மகள்களுக்கு பாதுகாப்புக்கு நான் உறுதியளிக்கிறேன் . நம் ஆட்சி அமைந்ததும் போதைப்பொருள் மாஃபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்,தமிழ்நாட்டிலேயே சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவுகள் கற்பனை கோட்டையாக கானல் நீராக மாறிவிடும். திமுக வெளியேற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் அதை உங்கள் கண்களில் பார்க்கிறேன் என்று கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகைத் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி உயிரை விட்ட பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு பிரதமர் நேரில் ஆறுதல் கூறினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக என்ன செய்திருந்தாலும் உண்மை கண்டிப்பாக வெளியவரும். திமுகவின் இறக்கமற்ற தன்மை காரணம். ஆகவே இந்த சம்பவம் நடந்தது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, உயிரை மாய்த்துக் கொண்ட பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
திரு ஆர்.என்.ரவி அவர்களே, திரு எல்.முருகன் அவர்களே, திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களே, திரு நயினார் நாகேந்திரன் அவர்களே, திரு எ.வ.வேலு அவர்களே, மற்றும் தமிழ்நாட்டின் அன்பான சகோதர சகோதரிகளே, வணக்கம்!
புனிதமான, வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை நகரத்தில் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன். இன்றைய நிகழ்வு தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயத்தைக் குறிக்கிறது. நான்காயிரத்து நானூறு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்துள்ளோம். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை சிறப்பாக மாற்றும். பொருளாதாரத்தை மேம்படுத்தும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். விவசாயிகள் சந்தைகளை அடைய சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பயண அனுபவம் ஏற்படும். வணிகங்களுக்கு விரைவான போக்குவரத்து கிடைக்கும். உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவது என்பது மக்களை மேம்படுத்துவதாகும்.
நண்பர்களே,
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், மத்திய அரசு தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் நான்காயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான நெடுஞ்சாலைகள் இங்கு கட்டப்பட்டுள்ளன. இன்று, இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முதலாவது, இரண்டாயிரத்து நூறு கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டில் மரக்காணம்-புதுச்சேரி பிரிவின் நான்கு வழிச்சாலையாகும். இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர சுற்றுலா, வர்த்தகம், பொருளாதாரத்தை வலுப்படுத்தும். இரண்டாவது, பரமக்குடி-ராமநாதபுரம் பாதையின் நான்கு வழிச்சாலை. இந்த திட்டத்தில், நாங்கள் ஆயிரத்து எண்ணூறு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்கிறோம். இது ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களுக்கான போக்குவரத்தை கணிசமாக அதிகரிக்கும். இது யாத்ரீகர்களுக்கான பயணத்தை எளிதாக்குவதையும், விவசாய பொருட்கள் மற்றும் கடல் பொருட்களின் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்யும்.
நண்பர்களே,
கடந்த பத்து ஆண்டுகளில், ரயில்வே ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இது நவீன, திறமையான, மக்களை மையமாகக் கொண்ட போக்குவரத்து அமைப்பாக வளர்ந்து வருகிறது. இந்த மாற்றம் குறிப்பாக தமிழ்நாட்டில் தெரிகிறது. எங்கள் அரசு அமைந்ததிலிருந்து தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. 2009 முதல் 2014 வரை, சராசரி ஆண்டு ரயில்வே ஒதுக்கீடு 880 கோடி ரூபாயாக இருந்தது. 2026–27-ம் ஆண்டில், ஒதுக்கீடு 7600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில், 1300 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 97% மின்மயமாக்கல் அடையப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இது இந்தியாவின் முதல் செங்குத்துத் தூக்குக் கடல் பாலமாகும். பொறியியல் சிறப்பின் அடையாளச் சின்னம் இதுவாகும். இந்தப் பாலம் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
நண்பர்களே,
தற்போது, 9 வந்தே பாரத் ரயில்களும் 9 அம்ரித் பாரத் ரயில்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு பயனளித்து வருகின்றன. இதுபோன்ற அதிவேக ரயில்களின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிப்போம் ('மேக் இன் இந்தியா') என்ற நமது தொலைநோக்குப் பார்வை, தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்பது பெருமைக்குரிய விஷயம். அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், 77 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையங்கள் வசதி, சிறந்த அணுகும் தன்மை, உள்ளூர் அடையாளம் ஆகியவற்றை இணைப்பதாக அமைகின்றன. இன்று, தமிழ்நாடு முழுவதும் எட்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்களைத் திறந்து வைக்கிறோம். சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர் நான்காவது பாதை அர்ப்பணிப்பு சென்னையில் பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு தினசரி பயனளிக்கும். கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகிய இடங்களின் ஆகாஷ்வாணியின் புதிய பண்பலை டிரான்ஸ்மிட்டர்களைத் திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வானொலி நிலையங்கள் இன்று முதல் உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.
நண்பர்களே,
தமிழ்நாட்டிற்கான உள்கட்டமைப்பு நிதி, முந்தைய பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இப்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் 2026-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் மீது வலுவான கவனம் செலுத்தி இந்தப் போக்கு தொடர்கிறது. இந்த பட்ஜெட்டில், பெங்களூரு-சென்னை, சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் வழித்தடங்களை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். அவை இந்த முழு பிராந்தியத்தின் பொருளாதாரத்திலும் புரட்சியை ஏற்படுத்தும். பட்ஜெட் தமிழ்நாட்டை அரிய பூமி வழித்தடங்களின் ஒரு பகுதியாக நிலைநிறுத்துகிறது. அரிய புவி வழித்தடங்கள், மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
நண்பர்களே,
தமிழ்நாடு வளமான வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உலகளாவிய பாரம்பரிய இடங்களாக மேம்படுத்தப்படும். பழவேற்காடு ஏரி தொடர்பான திட்டம், பொதிகை மலையைச் சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலா முயற்சி ஆகியவை இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதோடு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். உற்பத்தியை அதிகரிக்க நாடு முழுவதும் சுமார் இருநூறு தொழில்துறை வழித்தடத் தொகுப்புகள் அடையாளம் காணப்பட்டு ஆதரிக்கப்படும். தமிழ்நாடு பல தொழில்களுக்கு தாயகமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, இந்தத் திட்டம் இங்குள்ள இளைஞர்களுக்குப் பயனளிக்கும்.
நண்பர்களே,
2047-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியரும் ஒரு வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்ப உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வளர்ச்சியடைந்த தமிழ்நாடு என்பதே நமது கூட்டு இலக்கு. உள்ளடக்கிய வளர்ச்சியையும் மாநிலத்தின் முன்னேற்றத்தையும் செயல்படுத்துவதில் மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
நன்றி!தமிழக ரயில் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகரித்துள்ளது. 2009 முதல் 2014 வரை ரூ.880 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு 2026 - 27 ஆண்டில் ரூ.7600 கோடியாக உயர்ந்தது" என பிரதமர் மோடி பேசினார்.
தமிழகத்தில் ரூ.4,400 கோடி மதிப்புள்ள மரக்காணம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை, பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவு நான்கு வழிச்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, பொம்மிடி, காரைக்குடி, மணப்பாறை, மொரப்பூர், பொள்ளாச்சி, சோழவந்தான், ஸ்ரீவில்லித்புத்தூர் மற்றும் திருவாரூர் அம்ரித் ரயில் நிலையங்கள் திறப்பு மற்றும் சென்னை கடற்கரை- சென்னை எழும்பூர் 4வது ரயில் வழித்திட்டம் நாட்டுக்கு அர்பணிக்கும் விழாக்கள் மதுரை விமான நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றன.
இத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புனிதமான மதுரை மாநகருக்கு வருவதை பெரும் கவுரவமாக உணர்கிறேன். மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வருக்கும் தலை வணங்குகிறேன். இந்த விழா தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமானது. இன்று ரூ.4,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.இத்திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும், விவசாயிகள், சுற்றுலா பயணிகள், புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு அதிக பயனளிக்கும். இதுபோன்ற உயர்தர கட்டமைப்புகளை உருவாக்குவது மக்களுக்கு அதிகார பங்களிப்பை அளிப்பதாகும்.
கடந்த 12 ஆண்டுகளாக தமிழக நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. தமிழகத்தில் 2014 முதுல் 4,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மரக்காணம்- புதுச்சேரி நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.2,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் சுற்றுலா, வர்த்தகம், பொருளாதாரம் பலமாகும். பரமக்குடி - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையால் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி பகுதி முன்னேறும். ராமேஸ்வரத்துக்கு புனித பயணம் மேற்கொள்பவர்கள், வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் விவசாயிகள், கடல்சார் பொருட்களின் போக்குவரத்தையும் மேம்படுத்தும்.கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேத்துறை பெரும் மாற்றம் கண்டுள்ளது. ரயில் போக்குவரத்து, நவீன திறன் மிகுந்த மக்கள் சார்ந்த போக்குவரத்தாக மாறியுள்ளது. இந்த மாற்றம் தமிழகத்தில் நன்கு தெரிகிறது. தமிழக ரயில் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 9 மடங்கு அதிகரித்துள்ளது. 2009 முதல் 2014 வரை நிதி ஒதுக்கீடு ரூ.880 கோடியாக இருந்தது. 2026- 2027 நிதியாண்டில் இது ரூ.7600 கோடியாக உயர்ந்தது.
தமிழ்நாட்டில் 1300 கிலோ மீட்டருக்கு அதிகமாக புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 97 சதவீத மின்மயமாக்கல் பணிகள் முடிந்துள்ளன. நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமாகும். இது நமது பொறியியல் திறனின் அடையாளமாகும். இப்பாலம் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது 9 வந்தே பாரத், 9 அம்ரித் பாரத் ரயில்கள் சேவையாற்றி வருகின்றன. இந்த ரயில்களின் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். அம்ரித் திட்டத்தில் 77 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகாசவாணி புதிய பண்பலை அஞ்சல் நிலையங்கள் மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தமிழக உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2026 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த பட்ஜெட்டில் சென்னை - பெங்களூர், சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் இப்பகுதிகளின் பொருளாதாரத்தை முழுமையாக மேம்படுத்தும்.
தமிழ்நாடு வளமான வரலாறு மற்றும் மரபுக்கு சொந்தமான மாநிலம். ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உலகளவில் வரலாற்று சிறப்பு மிக்க இடமாக மாற்றப்படும். புலிகாட் ஏரி, பொதிகை மலைப்பகுதி ஆகியவற்றில் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். அதே நேரத்தில் இயற்கை வளம் பாதுகாக்கப்படும்.
நாடு முழுவதும் 200 தொழில்துறை தொகுப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு தயாரிப்புகள் ஊக்கப்படுத்தப்படும். இதில் தமிழ்நாட்டிலும் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் தமிழக இளைஞர்கள் பலனடைவர்.
2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உணர்வில் ஒவ்வொரு இந்தியரும் உள்ளனர். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றும். நம் அனைவரின் மொத்த இலக்கும் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் வளர்ச்சிடைந்த தமிழகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதில் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், "பிரதமர் மோடி தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக பற்று வைத்துள்ளார். இதனால் தான் உலகம் முழுவதும் திருக்குறள் கலாச்சார மையம் திறந்து வருகிறார். திருக்குறளை 35க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார். இதுவரை தமிழகத்துக்கு ரூ.12 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இன்று ரூ.4,500 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்" என தெரிவித்தார்.
தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா.வேலு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புதுச்சேரியில் ₹2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
புதுச்சேரியில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்-இன்று, வாழ்க்கையை எளிமைப்படுத்தவும், பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் பல மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படுகின்றன: பிரதமர்
நான் முன்பு இங்கு வந்தபோது, சிறந்த புதுச்சேரி என்ற மந்திரத்தை கூறியிருந்தேன் - கடந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நனவாகியுள்ளது: பிரதமர்
புதுச்சேரி நல்லாட்சி மற்றும் வளர்ச்சியைக் கண்டுள்ளது: பிரதமர்
வலுவான மற்றும் அதிகாரம் பெற்ற இளைஞர்களே நமது வளர்ச்சியின் அடித்தளம் - அவர்களின் கனவுகளை நனவாக்க நாங்கள் பாடுபடுகிறோம்: பிரதமர்
காரைக்காலில் உள்ள என்ஐடி-யில், புதிய, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பொறியியல் வளாகம் மற்றும் நவீன விடுதி வசதிகள் பல மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்தும்; புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: பிரதமர்
சுகாதாரப் பராமரிப்பு அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும், குறைந்த செலவிலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்; ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏற்கெனவே இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றி வருகிறது: பிரதமர்
புதுச்சேரி ஒரு மருத்துவ சுற்றுலா மையமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். புதுச்சேரியில் ஏற்கனவே ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் உள்ளன; ஜிப்மரில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தின் நவீனமயமாக்கல் சுகாதாரத் திறனை மேலும் விரிவுபடுத்தும்: பிரதமர்
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மூன்று தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது:
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.03.2026) புதுச்சேரியில் ₹2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தத் திட்டங்கள் அடங்கியுள்ளன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், புதுச்சேரி சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பூமி எனவும், இங்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் தீயை மூட்டினார் எனவும், ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் உலகிற்கு ஆன்மீகப் பார்வையை வழங்கினர் என்றும் குறிப்பிட்டார்.
வணிகம், கல்வி, ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 'சிறந்த' புதுச்சேரிக்கான தமது மந்திரத்தை பிரதமர் மீண்டும் எடுத்துரைத்தார். "கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்த தொலைநோக்குப் பார்வை நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது எனவும் தனிநபர் வருமானம் அதிகரிப்பதாலும், நாட்டின் மிக உயர்ந்த சமூக முன்னேற்றக் குறியீட்டு மதிப்பெண்ணாலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.
நாடு முழுவதும் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை எடுத்துரைத்த பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். "முன்னர் மாநிலங்களுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்ட 'மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவி' திட்டத்தின் கீழ் புதுச்சேரி இப்போது சேர்க்கப்பட்டுள்ளது எனவும் இது சாலைகள், நீர் வழங்கல், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதை உறுதி செய்யும்" என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
வலிமையான மற்றும் அதிகாரம் பெற்ற இளைஞர்கள் நமது வளர்ச்சியின் அடித்தளம்" என்று பிரதமர் கூறினார். அவர்களின் கனவுகளை ஆதரிக்க நாங்கள் பாடுபடுகிறோம் என்றும் காரைக்காலில் புதிதாக திறக்கப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பொறியியல் வளாகம் மற்றும் நவீன விடுதி வசதிகள், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன், தொழில்நுட்பக் கல்வியை கணிசமாக வலுப்படுத்தி ஏராளமான மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
உலகம் தற்போது தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், மின்சார வாகனங்கள் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக மாறி வருவதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். புதுச்சேரி போன்ற சுற்றுலாதல பகுதியில், பிரதமர் மின்சார பேருந்து சேவையின் கீழ் இன்று வழங்கப்படும் மின்சார பேருந்துகள் மாசுபாட்டைக் குறைப்பதில் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, குடும்பங்களுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் கண்ணியத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட வீட்டு வசதித் திட்டங்களுடன், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் முழுவதும் பல நூறு கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். சுத்தமான குடிநீரை உறுதி செய்வதற்கான கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கான புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மழைக்காலங்களில் வெள்ளம் மற்றும் நீர் தேங்குவதைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான பணிகள் ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும் என்று அவர் கூறினார். "புதுச்சேரி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு எங்கள் அனைத்து முயற்சிகளும் உள்ளன" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
எந்தவொரு நாடும் அதன் மனித மூலதனம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்றும், சுகாதாரப் பராமரிப்பை அரசின் முதன்மையான முன்னுரிமையாகக் கருதுகிறது என்றும் பிரதமர் எடுத்துரைத்தார். சுகாதாரப் பராமரிப்பு அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும், மலிவு விலையிலும் இருக்க வேண்டும் என்று அவர் வெளிப்படுத்தினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு வரும் இந்த தொலைநோக்குப் பார்வை இதுவாகும். புதுச்சேரியின் எந்தவொரு நபரும் சிகிச்சைக்காக வெகுதூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்திய அவர், ஏற்கனவே ஒன்பது மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட இந்தப் பகுதி மருத்துவ சுற்றுலா மையமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். சுகாதாரத் திறனை மேலும் விரிவுபடுத்துவதற்காக, ஜிப்மரில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது எனவும், மேலும் அவசர சேவைகளை மேம்படுத்துவதற்காக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் மூன்று தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். கூடுதலாக, காரைக்காலில் உள்ள புதிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை சித்த மருத்துவம் மற்றும் முழுமையான சுகாதாரப் பராமரிப்புக்கு இந்தப் பிராந்தியத்தில் சேவை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். "புதுச்சேரி ஒரு மருத்துவ சுற்றுலா மையமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், போக்குவரத்து இணைப்புதான் முன்னேற்றத்தின் முதுகெலும்பு என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மாணவர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான அணுகலை மேம்படுத்த நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் கட்டப்பட்டு வருவதாக அவர் எடுத்துரைத்தார். "ஒரே நேரத்தில், புதுச்சேரி நகர நெரிசலைக் குறைக்க ₹1,000 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யப்படுகிறது எனவும் இதில் ₹ 440 கோடி மதிப்பிலான புதிய மேம்பாலம் அடங்கும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். கிழக்கு கடற்கரை மற்றும் கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலைகள் வழியாக சென்னைக்கான இணைப்பும் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் பயண நேரம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படுவதாகவும் அவர் மேலும் எடுத்துரைத்தார். "கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் ₹30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், இந்தத் திட்டங்கள் புதுச்சேரியை பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய பொருளாதார மையங்களுடன் இணைக்கின்றன எனவும், இது சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறையை கணிசமாக மேம்படுத்துகிறது" என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.
சுற்றுலாவை புதுச்சேரியின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக பிரதமர் எடுத்துரைத்தார். இது ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகளை முதன்மையான வார இறுதி இடமாக ஈர்த்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு உள்ளூர் மக்களின் அரவணைப்பும் காரணம் என்றும், இப்பகுதிக்கான ரயில்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். ஆன்மீகம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சுற்றுலாவில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். பிரசாத் திட்டத்தின் கீழ் பல்வேறு கோயில்களில் புனித யாத்திரை வசதிகளை மேம்படுத்துவது உட்பட, இந்தத் துறையை அரசு புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது்என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் ஆரோவில்லை உலகளாவிய நகரமாகக் கருதினர் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். இன்று அங்கு ஒரு உலகளாவிய ஆன்மீக மஹோத்ஸவம் தொடங்குவதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இத்தகைய கூட்டங்கள் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்க உதவுகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக புதுச்சேரி இருந்து வருகிறது எனவும் இது பல சிறந்த தலைவர்களின் பிறப்பிடமாகவோ அல்லது பணியிடமாகவோ செயல்பட்டுள்ளது என்றும் பிரதமர் நினைவு கூர்ந்தார். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இந்த நிலம் மிக முக்கியமானதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தை நோக்கி, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த புதுச்சேரி மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இரட்டை இன்ஜின் அரசு இந்த இலக்கை அடைய உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். சிறந்த புதுச்சேரிக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று கூறிப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

















கருத்துகள்