மதப் பிரசங்கி பால் தினகரன் பித்தலாட்டம் மும்பையில் வழக்கு பதிவு.
மதபோதகர் பால் தினகரன் குடும்பம் மீது மும்பையில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு .மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மீரா ரோடு பகுதியில் கோயமுத்தூரைச் சேர்ந்த ‘இயேசு அழைக்கிறார்' அமைப்பு சார்பில் மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மகாரஷ்டிரா மாநில பிரார்த்தனைத் திருவிழா என்ற பெயரில் நடைபெற்றது,
தினமும் 50 ஆயிரம் பேர் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்து திரட்டப்படடனர். இதில், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் பால் தினகரன், அவரது மகன் சாமுவேல் தினகரன் அவரது மனைவி பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை என்று மதப் பிரசங்கம் செய்தனர்.
இந்தக் கூட்டத்தின் போது, முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், பிசாசுகள், பேய்கள் விலகி ஓடுகிறது எனவும் நோய்களை குணமாக்குவதாகக் கூறி அமானுஷ்ய மற்றும் பேய், பிசாசு மற்றும் மந்திரச்சடங்குகள் நடைபெற்றதாக ஏமாற்றிய சம்பவம் பலரை அதில் நடிக்க வைத்து அரங்கேறிதாக ஆதாரங்களுடன் மும்பை சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதையடுத்து, பால் தினகரன் அவரது மகன் சமுவேல் மற்றும் அவரது மனைவி குடும்பம் மீது மூட நம்பிக்கை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூட்டம் நடைபெற்ற போது, எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் காவல்துறை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த 'ஹோப் ஆஃப் குளோரி மினிஸ்ட்ரி டிரஸ்ட்' என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதை ஹிந்து அமைப்புகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் இந்த கூட்டம் நடத்த ஏற்கனவே அனுமதியை மறுத்தனர்.
மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி அந்த அமைப்பு நிபந்தனையுடன் அனுமதி பெற்றது. அப்போது, நீதிமன்றம் மூடநம்பிக்கையை ஆதரிக்கும் வகையில், எந்த விதமான செயல்பாடும் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடனேயே அனுமதி வழங்கியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது, கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் எந்த ஆதாரமும் இல்லாமல் சூனியம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு
வழக்கு விவரம் :-
மும்பையில் மார்ச் 13, 2026 அன்று நடைபெற்ற கிருஸ்தவ மதப் பிரச்சாரம் ஏமாற்று நிகழ்வு தொடர்பாக, இயேசு அழைக்கிறார் சபையின் தலைவர் டாக்டர் பால் தினகரன் மற்றும் அவரது மகன் சாமுவேல் தினகரன் உள்ளிட்ட குடும்பம் மீது மும்பை காவல்துறை பிளாக் மேஜிக் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
பம்பாய் உயர்நீதிமன்றம் பிரச்சாரக் கூட்டம் பெயரில் அனுமதி பெற்றுள்ளது
நீதிமன்றத் தீர்ப்பு:-
மும்பை உயர்நீதிமன்றம், கோலாப்பூர் பெஞ்ச், நீதிபதி மாதவ் ஜே. ஜம்தார் மற்றும் நீதிபதி பிரவின் எஸ். பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகாராஷ்டிரா கூட்டத்திற்கு மார்ச் 13 முதல் 15 ஆம் தேதி முதல் வழங்கிய அனுமதியை திரும்பப் பெற்ற சாங்லி காவல்துறை மற்றும் எம்ஐடிசியின் உத்தரவுகளை ரத்து செய்தது. நீதிமன்றம் முந்தைய ஒப்புதல்களை பரிசீலித்தது, ஆனால் பிளாக் மேஜிக் சட்டம் மீறப்படாது என்று அதன் அமைப்பாளர்கள் உறுதியளிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது,
முதல் நாளே பிரச்சினை தொடங்கியது. 50,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் பால் தினகரன் பேசிய நிகழ்வின் போது பேசிய பேச்சுக்கள், புற்றுநோய் மற்றும் குடலிறக்கம் போன்ற நோய்கள் இயேசு மூலம் குணமாகும் என்று மேடையில் கூறி ஏமாற்றியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ஹோப் ஆஃப் க்ளோரி மினிஸ்ட்ரி டிரஸ்ட் என்ற அமைப்பு தான் அனுமதியைப் பெற்றனர்.
காவல்துறை முதலில் மார்ச் மாதம் 7, 2026 அன்று அனுமதியளித்தது, மார்ச் மாதம் 9 ஆம் தேதியன்று அதை ரத்து செய்தது, பின்னர் மார்ச் மாதம் 12 ஆம் தேதியன்று நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய நிலையில்
மார்ச் மாதம் 13 ஆம் தேதி கூட்டம் துவங்கிய நிலையில், மார்ச் மாதம் 14 ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு நிபந்தனைகழை அந்த அமைப்பு மீறியதால் மீண்டும் அனுமதியை ரத்து செய்தனர்.
மகாராஷ்டிரா மாநில பிளாக் மேஜிக் தடுப்பு மற்றும் மனித தியாகம் மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள் மற்றும் பிளாக் மேஜிக் சட்டம், 2013 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 ன் படி காவல்துறை வழக்கு பதிவு செய்து அனுமதியை ரத்து செய்ததால் அந்த அமைப்பு இந்திய அரசியலமைப்பின் 25(1) வது பிரிவின் படி தான் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதித்தது இது 25 மற்றும் 26 வது பிரிவின் கீழ் மத நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்கள் அடிப்படை உரிமைகள் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் அது குறிப்பிட்டது
மார்ச் மாதம் 7 ஆம் தேதியில் அனுமதி வழங்கப்பட்டது, மார்ச் மாதம் 9 ஆம் தேதியன்று ரத்து செய்யப்பட்டது, மார்ச் மாதம் 12 ஆம் தேதி அன்று வழங்கப்பட்டது, மார்ச் மாதம் 14 ஆம் தேதியன்று மதியம் 2:00 மணிக்கு மீண்டும் ரத்து செய்யப்பட்டது
காவல்துறை மற்றும் எம்ஐடிசி ரத்து உத்தரவுகளை பிளாக் மேஜிக் சட்டம் மீறப்படக் கூடாது என்று அறக்கட்டளையின் தலைவர் உறுதிமொழியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்
அவர்கள் சரியாக இணங்குவதைக் கண்காணிக்க சாங்கிலி ரூரல் காவல் ஆய்வாளரை விழிப்புக் கண்காணிப்பு அலுவலராக நியமித்தது நீஈதிமன்றம் மூலமாக
அவர்கள் அனுமதி கேட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது, இதில் கடந்த காலங்களில் தவறான வழியில் சொத்துக்கள் குவித்த பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் மூன்று நாட்களாக நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் .118 கோடி முதலீடுகள், மற்றும் 4.7 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
"கோயமுத்தூர் காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன். 'இயேசு அழைக்கிறார்' என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 2021 ஆம் ஆண்டில் மாதம் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 3 நாட்கள் சோதனை நடத்தினர்.
சென்னையிலுள்ள 'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைமை அலுவலகம், பால் தினகரனின் வீடு, கோயம்பத்தூர் காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 28 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
'இயேசு அழைக்கிறார்' அமைப்புக்கு FCRA மூலம் வந்துள்ள வெளிநாட்டு பண உதவிகள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. பால் தினகரனின் பிரசாரக் கூட்டங்களுக்கு வரும் வருமானத்தை கணக்கில் காட்டாமல் இந்தியா மற்றும் வெளிநாட்டில் வைத்திருப்பதும், இந்தியாவில் பெறப்பட்ட நிதியை இந்தியாவிலேயே கணக்கில் காட்டாமல் முதலீடு செய்துள்ளதும், வெளிநாட்டில் பெறப்பட்ட நிதியை வெளிநாட்டிலேயே பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் வருமான வரித் துறையின் சோதனையில் தெரியவந்தது. மூன்று நாள் சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், கணக்கில் காட்டாமல் பல்வேறு நிறுவனங்களில் ரூபாய் .118 கோடி முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
கோயமுத்தூர் காருண்யா பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 4.7 கிலோ தங்கத்தையும் வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, பால் தினகரனுக்கு வருமான வரித் துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டது.
அப்போது கனடாவில் இருந்தவர், ஒரு வாரத்தில் சென்னை வருவதாக தெரிவித்த நிலையில் அவர் சென்னை வந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் வருமான வரித் துறை குறிப்பிட்டது" ஆனால் இவர்கள் நடத்தும் மதப் பிரச்சாரம் இந்தியாவில் சீக்கிரமாக முடிவுக்கு வரவேண்டும் அதை மும்பை காவல்துறை விரைந்து முடித்து வைப்பார்கள்.
உலகத்தையே வாங்கிவிடாட்டார்கள் பால் தினகரன் குடும்பம் காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பலவற்றை ஏழைகளைச் சுரண்டி உறுவாக்கியுள்ளனர். ஏசு அழைக்கிறார் சபையின் தலைவர் பால் தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 4.5 கிலோ எடையுள்ள தங்கத்தை வருமான வரித் துறையினர் கைப்பற்றியதாகவும், கணக்கில் வராத 120 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் . இஸ்ரேல், சிங்கப்பூர், யுகே மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் அமைந்துள்ள அவரது நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளையும் வருமன வரித்துறையினர் கண்காணித்தனர். "அவர்கள் 200 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள்" என ஐடி ஆதாரங்கள் சுட்டிக்காட்டியது. இந்த நிலையில் இனி புதிய அவதாரக கடவுள் எனக் கூறும் இவர்களின் கடந்த கால வரலாறு குறித்து ஒரு பார்வை:- மதப் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக 1960 ஆம் ஆண்டு உருவான அமைப்பு 'இயேசு அழைக்கிறார்'. 1935-ஆம் ஆணடு ஒரு மிகச் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து வங்கி ஊழியர் குடும்பமாக மாறி சுரண்டையில் தினகரன், 1972 ஆம் ஆட்டு வேலையை உதறிவிட்டு அதை விடப் பல மடங்கு லாபம் தரக்கூடிய 'இயேசு அழைக்கிறார்' என்ற பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்கினார். 1980-ஆம் ஆணடுக்குப் பிறகே இவர் தனியாக ஜெப நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் அனைவருக்குமான ஜெபக் கூட்டங்களை நடத்தினார். தினகரனுக்கு அயல் நாட்டு கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் FCRA நிதி வர வர, 1984-லிருந்து தொடர்ந்து வாங்கிய குறைந்த விலை நிலத்தில் காருண்யா கல்வி அறக்கட்டளை சார்பாக பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டு, அதிலும் மிக அதிகமான பணம் கொட்டோகொட்டெனக் கொட்டத் தொடங்கிய பிறகு, தமிழ்நாடு முழுக்க பரவலாக நிலம் வாங்கிக் குவிக்கப்பட்டது. அவர்களின் இணையதளத் தகவலின்படி, கிறிஸ்தவ மதப் பிரசங்கங்களைத் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், 'இயேசு அழைக்கிறார்' தொலைக்காட்சி மூலம் மாதந்தோறும் 10 வெவ்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காணிக்கை என்ற பெயரில் கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதே இந்த ஊழல் மதப் பிரசங்கி டி.ஜி.எஸ். தினகரனின் பணி. இந்தப் பணிக்கு பயிற்சி அளித்து அவரது மகன் பால் தினகரன், மனைவி, மகள், மருமகள், பேத்திகள் என மொத்தக் குடும்பமும் இந்த மோசடியின் மூலம் இந்தியப் பணக்கார குடும்பங்களில் ஒரு குடும்பமானது. இந்த ஊழல் பணக்கார குடும்பம், சென்னை துறைமுக வாசலுக்கு எதிரே பெரிய தொழில் நிறுவனங்களும், பெரும் பணக்காரர்களின் கட்டிடங்களும் உள்ள பகுதியில் விலை மதிப்பே சொல்ல முடியாத இடத்தில் எல்.ஐ.சி. கட்டடம் போல ஒரு பிரமாண்டமான பல அடுக்கு மாடிக் கட்டடங்களும் கட்டியுள்ளார்கள்.
காருண்யா நிகர் நிலைப் பல்கலைக்கழகக் கல்லூரி வருமானம் பல நூறு கோடி ரூபாய் வருகிறதா என்ற கேள்வியைக் கூட இதுவரை எவரும் கேட்கவில்லை. 1983 ஆம் ண்டில் கோயமுத்தூரில் 750 ஏக்கர் நிலத்தில் ஆரம்பித்த காருண்யா கல்வி நிறுவனம் ஏழைகளுக்கு கல்வி கொடுக்கவே என மேடைக்கு மேடைகளில் பேசி நன்கொடைகள் பெற்றார்! தற்போது அதிக பணம் வசூலிக்கும் கல்வி நிறுவனமாகத் தான் அது எழுந்து நிற்கிறது! தான் படித்த மேலாண்மைக் கல்வியை பயன்படுத்தி பால்தினகரன், அதன் மூலமாக பணம், நிலம், அதிகாரம் பெருகத் துவங்கியது. ரெயின்போ டிவி 8 மாநில மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. மாதம் 1800-க்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள் நிகழ்ச்சியை வழங்குகிறது. 750 ஏக்கருக்கு மேல் கோயமுத்தூர் காருண்யா கல்வி எனும் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். 5000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ள காருண்யா கல்வி அறக்கட்டளையின் அதிபர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக, தொடர்ந்து இருமுறை பதவி வகித்தவர். அந்தப் பதவியின் மூலம் ஏகப்பட்ட உளவு கிறிஸ்தவர்களை வேலையில் அமர்த்த மறைமுகமாக லாபி செய்து வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டும் பால் தினகரன் மீது உண்டு.
டாக்டர் பட்டம் போட்டுக்கொள்ளும் தினகரனுக்கு அந்தப் பட்டத்தை வழங்கியது ஜெர்மனியைச் சேர்ந்த 'மாரநாதா ஜெப சபை' என்ற மத நிறுவனம். மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழுவில் இவர் இருக்கிறார். 'அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் ஆட்சி அதிகாரக் குழுவிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். இவை அனைத்தும் மத்திய அரசின் கல்வித் துறையால் நேரடியாக நியமிக்கப்படுவது. மத்திய காங்கிரஸ் அரசில் இவரின் செல்வாக்கு எந்தளவுக்கு இருந்தது என்றால், மத்திய அமைச்சர் பல்லா, இவரிடம் நாடாளுமன்றம் நன்றாக நடக்க நீங்கள் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்கிறார் எனில் நீங்களே முடிவு செய்து கொளளுங்கள். நிதி மோசடியில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் பொய்ப் பிரமாண பத்திரம் கொடுத்த வசந்தி ஸ்டான்லி 2010-ல் எழுதிய கடிதத்தில் அவரின் தலைவரின் தேர்தல் வெற்றிக்குப் பிரார்த்தித்துக் கொள்ள சொல்கிறார். காங்கிரஸின் ராம்சுப்பு எம்.பியும் சில கோரிக்கைகளை பிரார்த்தனைகளாக்க முன்வைக்கிறார்.
பால் தினகரன் நடத்தும் 'இயேசு அழைக் கிறார்' என்ற அமைப்பிற்கு உலகம் முழுவதும் 126 பிராத்தனை மையங்கள் உள்ளன. இந்த அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் பால் தினகரனின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்தினார் என்று சட்ட உரிமைகள் ஆய்வகம் குற்றம் சாட்டியுள்ளது. பால் தினகரனின் கோக் வீல் டிரஸ்ட், பெனியல் அனாதை இல்லம், பக்லி இல்லம், போன்ற அனாதை நிறுவனங்களுக்கு குழந்தைகள் பேணி பாதுகாக்க அந்நிய நாட்டு என்.ஜி.ஓ.க்களால் கொடுக்கப்பட்ட
ரூபாய் .40 கோடியை, தனது சொந்தநலனுக்காக 900 ஏக்கர் வன நிலத்தை கையகப்படுத்த செலவு செய்ததாகவும், பெரா சட்டத்தை மீறியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சில வெளிநாடுகளிலிருந்து வருடங்களுக்கு முன் மத்திய நிதியை முறையாக செலவிடாமலும், அரசு பெறப்படும் அதற்குறிய கணக்குகளை அரசுக்கு சமர்பிக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான என்ஜி.ஓ.க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த பட்டியலில் பால் தினகரனின் சில என்.ஜி.ஓ.க்களும் அடக்கமாகும். பால் தினகரன் நடத்தும் இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
2007-2008-ம் வருட வருமான வரி கணக்கு தாக்கல் சம்பந்தமாக ஒரு வழக்கு நடந்தது. ரூ98,22,31,253க்கு அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டு, வாங்கப்பட்ட நிலத்தை சரி செய்வதற்கு 14,00,00,000 அதற்கு வரிவிலக்கு கேட்டுவிண்ணப்பிக்கப்பட்டது.
அழைக்கிறார் நிறுவனத்தின் மூலம் வங்கப்பட்ட சொத்தில் வரி விலக்கு அளிக்க முடியாது. ஏன் என்றால் ரூ 14 கோடிக்கு செலவு செய்த வகைக்கு உரிய ஆவணங்கள் கிடையாது என வருமானவரி ஆணையர் தள்ளுபடி செய்து விட்டார்.
எவ்வாறு 98 கோடிக்கு சொத்து வாங்க எங்கிருந்து நிதி கிடைத்தது என்பதை ஆய்வு செய்தால், வெளிநாட்டிலிருந்து கிடைத்த நிதியை பயன்படுத்தினார்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
காருண்யா பல்கலைக்கழத்திற்கு அருகில் உள்ள நிலங்களை கையகப்படுத்திய விவகாரமும் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. கணக்கு
மோசடியில் மற்றொருநிகழ்வு, வருமான வரி கணக்கு தாக்கலில் அறக்கட்டளையின் நிர்வாகிகளாக
இருப்பவர்கள் சம்பளம் எடுக்க கூடாது என விதியிருந்தும், பால் தினகரன் சம்பளமாக 20,37,000- அவரது மனைவி இவலிஞ்சனுக்கு 4.80லட்சமும், அவரது குழந்தை Earnest க்கு 3.60 லட்சமும், எழுதப்பட்டிருந்தது. வருமான வரித் துறை யினர் மேற்படி கணக்கில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியது. பால் தினகரனின் மற்றொரு மோசடி, குடும்ப ஆசீர்வாத பங்குதாரர் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிராத்தனை செய்ய ஒரு குடும்பத்திடம் வாங்கும் நிதி எவ்வளவு என்பதை பார்க்க வேண்டும்.
இந்தியாவில் ரூ3,000, இலங்கையில் ரூ5,000, சிங்கப்பூர் 350 டாலர், மலேசியா 800 ஆர்.எம்., கனடா 400 சிஏடி, ஜெர்மனி 200 ஈரோ, சீனா 1950 யென் என ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகையில் மாதந்தோறும் நிதி வசூலிக்கப்படுகிறது. மற்றொரு விதமான மோசடி, இன்டர்நெட்டில் பிரார்த்தனை செய்வது. தினசரி சராசரியாக 36,000 பேர்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காணிக்கை என்பது தெரியவில்லை. இதுவும் ஒரு வகையான மோசடி. காணிக்கை பெறும் மற்றொரு நிகழ்வு, ஒன்பது நாடுகளில் 24 மணி நேரமும் நடத்தப்படும் Prayer intercessor offer prayer நடத்தப்படுகிறது. திராவிட அரசியல்வாதிகளின் சுயநலனுக்காக யானை வழித்தடம் உள்ள பாதையை ஆக்கிரமித்துக்கொண்ட பால் தினகரன் ஆக்கிரமித்த 936 ஏக்கர் நிலத்தை காலி செய்ய மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் உத்திரவிட்டும் கூட உள்ளுர் அரசியல்வாதிகளின் ஊழல் உதவியுடன் இதுவரை காலி செய்யவில்லை. Legal Right Observatory என்ற அமைப்பு, டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி , 2020ஆம் ஆண்டு வருமான வரித் துறையின் தலைமை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், Complaint seeking immediate and elaborate inquiry and subsequent action to be taken against the large scale criminal money laundering offences like tax evasion and embezzlement by a proxy NGO Samiti for education, Environment, Social and Health Action ( SEESHA ) of one Paul Dhinakaran என குறிப்பிட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பஹாரியா சேவ சமிதி என்ற பெயரில் உள்ள NGO விற்கு இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்டியன் ஏய்ட் லிருந்து வந்த ரூபாய் 9.55 கோடி நிதியானது மத மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே நிறுவனம் பால் தினகரனின் ‘இயேசு அழைக்கிறார்’ நிறுவனத்திற்கும் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மத மாற்றத்திற்காக அந்நிய நாட்டிலிருந்து வந்த நிதியை பயன்படுத்தி பல மாநிலங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தலித் மக்களை மதமாற்றம் செய்ய உறுதுணையாக பால் தினகரனும், அவரது குடும்பமும் செயல்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
‘இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பிற்கு இணையம் மூலம் வந்த நிதியிலிருந்து சுமார் 600 கோடி ரூபாய் ஒரு திராவிட கட்சிக்கு வழங்கியதாக தகவல்.
நொய்யல் ஆற்றில் நீர் நிலை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள காருண்யா பல்கலைக் கழ கத்தின் கழிவு நீர் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு. சரியான கட்டமைப்பு இல்லை என கூறி ய UGC . 2017-ஆம் ஆண்டில் காருண்யா நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தை மூட உத்திரவிட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ‘நல்லூர் வயல்’ கிராமத்தின் பெயரை ‘காருண்யா நகர்’ என தன்னிச்சையாகவே மாற்றியவர் அதை தமிழ்நாடு அரசின் நகர் ஊரமைப்புத்துறை ஏன் கணடுகொள்ளவில்லை என்பது எழுவினா ?














கருத்துகள்