சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான மேன்மைமிகு இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாடினார்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சவுதி அரேபியா மீதான சமீபத்திய தாக்குதல்களை பிரதமர் வன்மையாகக் கண்டித்ததுடன், இத்தகைய நிகழ்வுகள் அந்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகக் குறிப்பிட்டார்.
பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்த சவாலான காலங்களில் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, பிரதமர், பட்டத்து இளவரசருக்கு நன்றி தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டதாவது:
"மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் குறித்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் விவாதித்தேன். சவுதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் சமீபத்திய தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பது மிகவும் அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்தத் கடினமான நேரத்தில் இந்திய சமூகத்தினரின் நலனைப் பாதுகாப்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்." மேலும்
பஹ்ரைன் அரசருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாகப் பேச்சு
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பஹ்ரைன் அரசர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது, பஹ்ரைன் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார். இந்தக் கடினமான நேரத்தில் பஹ்ரைன் மக்களுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை அவர் வெளிப்படுத்தினார்.
பஹ்ரைனில் வசிக்கும் இந்திய மக்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் உதவிக்காக அந்நாட்டு அரசருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இந்த உரையாடல் தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது:
“பஹ்ரைன் அரசர் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் ஒரு ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டேன். பஹ்ரைன் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதுடன், இந்தத் துயரமான தருணத்தில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா முழு ஆதரவையும் வழங்குகிறது. பஹ்ரைனில் உள்ள இந்திய மக்களுக்கு அளித்த உறுதியான ஆதரவிற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.”






கருத்துகள்