முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிருஷ்ணாபுரம் விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

மானாமதுரை விசாரணைக் கைதி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு. இரண்டு அட்டவணை பட்டியல் சமூகத்திற்கு இடையில் நடந்த சம்பவம் இதில் மற்றவர்கள் தலையீடு இல்லை 




  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம்  கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன்   மகன் ஆகாஷ் டெலிஷன் வயது 26 எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்ந்த நபர் நேற்று முன் தினம் மானாமதுரை காவல் நிலைய, காவலர் மற்றும் அலுவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையில் அடித்துத் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என முதலில் தகவல் வந்த நிலையில். அதை காவல்துறையினர் தரப்பு மறுத்து செய்தியளித்தது, தமிழ்நாட்டில் இது போன்று மனித உரிமை மீறல் தொடர் காவல் கைதி மரணங்கள் சில இடங்களில் நடந்தேறி வருகிறது. இதில் குறிப்பாக, அட்டவணைப் பட்டியலின , மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்கள் மீது விசாரணை என்ற பெயரில் 70 சதவீதம் உண்மை ஆராயாமல் பொய் வழக்குகள் புனைவதும் அதை நீதிமன்றம் மூலம் குற்றப்பத்த்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தராமல் கை, கால்களை உடைத்து பின் வழுக்கி விழுந்ததாகக் கூறுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடக்கும் நிகழ்வு, நீதிமன்றம் விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டு பின் நீதிமன்றம் மட்டுமே வழங்க வேண்டிய தண்டனையை காவல் பணியாளர்களே தன்னிச்சையாக நீதி வழங்கி சட்டத்தை ஊனப்படுத்துவதும் காவல் நிலைய மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பொது வெளியில் தற்போது ஹென்றி டிஃபேன் உள்ளிட்ட பலரால் பேசப்படுகிறது, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பொறியாளர் ஆகாஷ் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 

"அடிச்சே கொன்னுட்டாங்க" என ஆகாஷின் பெற்றோர் கதறிய நிலையில், 

மார்ச் மாதம் 6-ஆம் தேதி, சாலை விபத்து வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பொறியாளரான ஆகாஷ், ஆய்வாளர் குகன் மற்றும் தனிப்படைக் காவலர்களின் தாக்குதலில் உயிரிழந்ததாக அந்தப் பகுதி மக்கள் . நேற்று மார்ச் மாதம் 8-ஆம் தேதி வரை போராட்டம் நடத்திய நிலையில் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் காவல் துறை தரப்பு  "சிவகங்கை இடைக்காட்டூர் பிரச்சனையில் குற்றவாளிகளுக்கு ஜாதியச் சாயம் பூசுபவர்கள் உண்மை நிலையை அறிவது அவசியம் எனவும் பலர் கூறுகின்றனர். மானாமதுரையில் 2 நபர்களை வாளால் வெட்டிய வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் தான் உயிரிழந்த ஆகாஷ் .




காவல் துறையினர் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மட்டுமே குற்றச்சாட்டு; மதுரை- இராமேஸ்வரம் 4 வழிச் சாலையில் உறவினர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்,  மானாமதுரையில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை விளக்கம்

ஆகாஷை கைது செய்ய முயன்ற போது பாலத்திலிருந்து தவறி விழுந்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டதாகவும், ஹாஸ்பிடலில் அனுமதித்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் விளக்கம்           சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவம்.. ஓட ஓட இருவருக்கு நடந்த வெட்டு அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் .. அச்சத்தில் மானாமதுரை மக்கள்..! தாக்குதல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 வயது நபர்,  அரசு ராஜாஜி மருத்துவமனையில் (ஜிஆர்எச்) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.





சிகிச்சையில் இருந்த போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறைஜவட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மார்ச் 6ஆம் தேதி மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த மர்ம நபர்களில் ஆகாஷ் என்பவரும் ஒருவர்.

மானாமதுரை சீயோன் நகர் அருகே மார்ச் மாதம் 5-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ஜீவா நகரைச் சேர்ந்த பி.ஜெயக்குமார் (வயது 37), ஆர்.அழகர்சாமி (வயது 34) ஆகியோரை ஆகாஷ் மற்றும் அவனது கூட்டாளி குணா (வயது 23) ஆகியோர் அரிவாளால் தாக்கியதாக காவலர்கள் தெரிவித்தனர்.

ஆகாஷை மார்ச் 18 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மானாமதுரை நீதித்துறை நடுவர் கைது வாரண்ட் உத்தரவிட்டார்.

கைது செய்யப்படுவதைத் தவிர்க்க முயன்ற போது ஆகாஷின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, முதலில் அவனை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள GRH க்கு மாற்றப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு  இறந்துவிட்டதாக  தெரிவித்தனர். ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணன் ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், தன் மகன் தவறி விழுந்து தனது காலை உடைக்கவில்லை, மாறாக அவரை தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று வேண்டுமென்றே காவலர்கள் காலை உடைத்துவிட்டனர். அவருக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது, இது அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.

"அவரது காலில் கல்லை வைத்து அடித்து, காலை உடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது கூட எங்களுக்குத் தெரியாது. பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்," என்கிறார்.

சனிக்கிழமையன்று கூட தனது மகன் ஆகாஷ் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும், கொடூரமான தாக்குதலுக்கு காரணமான காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.





"ஆகாஷ் உயிருடன் இருக்கும் போது என் மனைவியிடம் காவலர்கள் செய்த கொடுமையைக் கூறினார்.  என்கிறார்சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதற்கு முன்தினம் சாலையோரம் நின்றிருந்த இருவரை ஆகாஷ் அடங்கிய மர்ம கும்பல் தாக்கியது.

இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளமான  3 பேர் துரத்திச் சென்று ஜெயபாண்டி, அழகர் ஆகியோரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதன் பிறகு நடந்த சம்பவம் தான் இந்த நடவடிக்கைவிசாரணைக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தமிழ்நாடு (JAACT-TN) ஆலோசகர் ஹென்றி டிஃபேன் ஒரு காணொளிக் காட்சி அறிக்கையில் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார், ஆகாஷின் மரணம் காவல்துறை காவலில் 26 வது மரணம் என்கிறார்.


சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அந்த நபர் காவல்துறையினரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாகக் கூறினார். அனைத்து நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் படி பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

காவலர்கள் மீது  வழக்கு பதிய மானாமதுரையிலும், மதுரை மருத்துவமனை முன்பும் குடும்ப உறுப்பினர்கள் தலைமையில் தனித்தனியாக போராட்டங்கள் தொடர்ந்தன.

அவரது உடலையும் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த மரணம் தொடர்பாக, நீதி விசாரணை சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக, ஆதாரங்கள் தெரிவித்தன.இந்த சம்பவம், கடந்த ஆண்டு, இதே காவல் எல்லைக்குள் நடந்த நிகழ்வு போல அமைகிறது.

மதுரை மருத்துவமனை பிணவறையில் மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் பலத்த காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர், உயர் அலுவலர்கள் மற்றும் போராட்டம் நடத்தும் குடும்பத்தினர் மற்றும் அவர் சார்ந்த சமூகப் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரேதப் பரிசோதனை மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணை நிலுவையில் உடல் GRH சவக்கிடங்கில் உள்ளது.அதேபோல் சிவகங்கை மாவட்டக் காவல்துறை வழங்கிய வேறு ஒரு பத்திரிக்கை செய்திக் குறிப்பில் 

"மானாமதுரை காவல் நிலைய ஆய்வாளர் குமரவேல் பாண்டியன், (பொறுப்பு திருப்பாச்சேத்தி காவல் நிலையம்) தலைமையில், திருப்பாசேத்தி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள மூன்று வழக்குகளில் உள்ள NBW (Non-Bailable Warrant)  சம்மந்தமாக மிக்கல்பட்டிணத்தைச்ர் சேர்ந்த சரித்திரபதிவேடு (A+ category) குற்றவாளியான ஊர்காவலனை திருப்பாச்சேத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கானூர் கிராமம் மயானம் அருகே, கைது செய்ய முயன்ற போது, ஊர்காவலன் வாளால் காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியனை தாக்க முயன்றதாகவும் 




அப்போது காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் முதலில் வானில் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு மேற்கொண்டார். எனவும் இருந்த போதிலும் ஊர்காவலன் மீண்டும் ஆய்வாளரைத் தாக்க முயன்றதால், தற்காப்பு நடவடிக்கையாக ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் ஊர்காவலனின் வலது காலில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்த ஊர்காவலன் உடனடியாக திருப்புவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேற்படி சரித்திரபதிவேடு (A+ category) குற்றவாளியான ஊர்காவலன் என்பவர் மீது கொலை வழக்குகள் -3, கொலை முயற்சி வழக்குகள் 2 உட்பட கஞ்சா வழக்குகள், அடிதடி வழக்குகள், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் வழக்குகள் என மொத்தம் 33 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும்

ஊர்காவலன், வயது 31,   த/பெ. பாலாமணி,மாத்தூர். இருப்பு -மிக்கல்பட்டிணம், திருப்பாசேத்தி காவல் நிலையம்.HS No.438/15 - A+ Cat என்ற நிலையில் நீதிமன்றம் இவர் மீதான வழக்கு குறித்து  விசாரணை நடத்தாமல் போனது குறித்து பலரும் வினா எழுப்பியுள்ளனர்.    உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான களமாக உள்ளது ஆனால் இங்கு "தோட்டம் காக்க போட்ட வேலி…பயிரை தின்றதோ…

அதை கேள்வி கேக்க ஆள் இல்லாமல்…பார்த்து நிப்பதோ…உண்மை தன்னை ஊமையாக்கி…தலைகுனிய வைப்பதா" இதில்  உண்மை பொதுநீதி வரவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...