கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கு பெறும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளும் கடலூரில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, பெண்ணாடம் பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிலம்பாட்டக் கழகம் போன்ற அமைப்புகள் மூலம், எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், தொடு புள்ளி (Touch point) போன்ற தொழில்நுட்பங்களுடன் சிலம்பக் கலை பயிற்றுவிக்கப்படுகிறது.கராத்தே போட்டியில் வெற்றிப்பெற்ற பரங்கிப்பேட்டை சாக்ரடீஸ் பள்ளி மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ஜெயந்தி அர்ச்சுனன் பாராட்டினார்.
சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது
மார்ச் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலுாரில் மாநில மற்றும் மாவட்ட அளவி லான சிலம்பப் போட் டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விளையாட்டுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை நடத்திய மாவட்ட, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .
நிகழ்வில் முருகன், நாராயணன், ஜெகன், அன்புதாசன், சண்முகம், ராஜன், கனேசன், விக்னேஷ், ராஜதுரை, சந்திரசேகர் ராமலிங்கம், புஷ் பராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
கடலுார் மாவட்ட சிலம் பச் சங்கம் சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினராக அரிமா சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜ மாரியப்பன், மற்றும் தமிழ்நாடு
மூத்த கராத்தே பயிற்சியாளர் கடலூர் சேடப்பாளையம் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். விழாவில், அமல்ராஜ், கலைச்செழியன், சிகா மணி, உத்ராபதி, ரஞ்சித், பிரபாகரன் சூர்யா, வேல் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளை சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கருத்துகள்