சென்னை மாநகராட்சி ஊழல் முறைகேடு சென்னை உயர் நீதிமன்றம் ஊழல் தடுப்பு விசாரணை நடத்த உத்தரவு
சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஒரு வழக்கில் தோல்வியுற்றனர்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 1421 நாட்கள் சுமார் 4 ஆண்டுகள் காலதாமதமானது. அதாவது தாமதம் செய்தனர் காரணம் கேட்டால் அவர்கள் கூறிய பதில் "கோப்புகள் தொலைந்து விட்டது!" என்பதே
தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்ஷவா மற்றும் நீதிபதி G.அருள்முருகன் இணை அமர்வு அதை கடுமையாக கண்டித்தது:
"போதுமான காரணமே இல்லை மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகிறது"
"இது ஒட்டு மொத்த அலட்சியமாகவே இருக்கலாம், அல்லது எதிர் தரப்புடன் கூட்டுச் சதியாகக் கூட இருக்கலாம்!" அல்லது லஞ்சம் வாங்க பேரம் பேசுகின்ற முறையாகக் கூட இருக்கலாம்
"அரசு என்பதால் தாமதம் மன்னிக்கப்படும் என்று நினைக்கக் கூடாது"
இந்த வழக்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும்
இது அலட்சியமா, திட்டமிட்ட சதியா எனக் கண்டறிய வேண்டும்
இந்தத் தீர்ப்பின் நகல் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்
உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல தீர்ப்புகளில் தெளிவாகவே கூறியுள்ளது:
அரசு அலுவலகங்கள் "கோப்பு சுற்றுமுறை" என்று சொல்லி தப்பிக்க முடியாது
தாமத மன்னிப்பு என்பது விதிவிலக்கு, அது வழக்கமான உரிமை அல்ல
காலக்கெடு சட்டம் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சமமாகவே பொருந்தும் என நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது:
"தனியார் வழக்காளர்களை நிரந்தர வழக்குச் சுமையில் வைத்திருக்க முடியாது. வெற்றி பெற்ற ஒருவரின் உரிமையை பிறகு கேள்விக்கு உட்படுத்துவது அநீதியாகும்." என கண்ணம்மா கல்வி அறக்கட்டளை வழக்கு தீர்ப்பு தேதி: 20.02.2026 ல் வழக்கு எண்: CMP No.4315/2026 மூலம் தீர்வானது.
.jpg)













கருத்துகள்