முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வளைகுடா நாட்டு வானில் மின்னிய ஏவுகணைகள், எண்ணெய் வள பூமியைப் பிளந்தன

சிறப்புச் செய்திகள் : ரெங்கநாதன் திருப்பதி                                                          "பாலைவனத்து வளைகுடா நாட்டு வானில் மின்னிய ஏவுகணைகள்,   


எண்ணெய் வளமான பூமியைப் பிளந்தன!

கரிய புகைக்குள், கத்தார் அழுகை மறைந்தது! 

நிழல் தேடிய மரங்கள் கூட, நெருப்பாய் எரிந்தன!

நிம்மதி தேடிய மனிதர்கள் குழந்தைகள்,அனாதையாய் நின்றனர்!

வளைகுடா மண் வரலாற்றில் கறை படிந்தது!

போரின் முடிவில், பூமிக்கு மிஞ்சியது எரியும் தழும்புகள்,  அதில்                                விளிம்பில் சமையலுக்கு காத்திருக்கும் எரிவாயு அடுப்புகள் உலகம் முழுவதும்.  பூமி உருண்டையைப் பொரி உருண்டை யாக்கி உடைத்துத் திண்ணும் பசியில் வல்லாதிக்க நடவடிக்கை" .           


  "அமெரிக்கா (USA) இல்லை யெனில், நேட்டோ (NATO) காகிதப் புலிதான். அணு ஆயுதம் கொண்ட ஈரானுடன் சண்டையிட நேட்டோ நாடுகள் வரவில்லை.

இந்த நாடுகளுக்குக் குறைந்த ஆபத்தோடு இராணுவ ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஈரான் உடனான போரில் உதவாதவர்கள், எண்ணெய் விலை உயர்வைப் பற்றிப் புகார் கூறுகிறார்கள்.

ஆனால் அதற்குக் காரணமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவ மறுக்கிறார்கள். கோழைகள் உங்களை மறக்கமாட்டோம்".என அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் பதிவில் கூறியுள்ள கருத்து.அமெரிக்கா- இஸ்ரேல்- ஈரான் போர் 25 வது நாளைத் தாண்டியது. தாக்குதல்களும் எதிர்த் தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.





அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இந்தச்சூழலில் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஃஹ்ரைன் உள்ளிட்ட 22 நாடுகள், அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறும், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்குமாறும் ஈரானிடம் வேண்டுகோள் விடுத்து கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.   உலகின் ஐந்தில் இரு பகுதி, அதாவது சுமார் 20 சதவீதம் எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தப் பாதையை மூடிய ஈரான், பின்னர் எதிரிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் நாடுகளுக்கு இந்த வழியைத் திறக்க மாட்டோம் எனத் தெரிவித்தது. 


இதனால் எண்ணெய், எரிபொருள் தட்டுப்பாட்டு அபாயத்தில் உலக நாடுகளும், வியாபாரம் செய்ய முடியாத கவலையில் அரபு நாடுகளும் மூழ்கியுள்ளன. இந்தச் சூழலில் 22 நாடுகள் இந்த அறிக்கையை விட்டுள்ளன.

முன்னதாக ஐந்து நாட்கள் முன் காலை வேளையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ள அமெரிக்கா-பிரிட்டிஷ் இராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலை பிரிட்டன் கடுமையாகக் கண்டித்தது. கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், "இரானின் முழு பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தித் திறன், அந்த ஏவுகணைகளின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்கும் ஒவ்வொரு நிறுவனமும், செயல்பாட்டு ரீதியாக வீழ்த்தப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டன. ஈரான் முழுவதும் உள்ள கட்டடங்கள், வளாகங்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திக் கூடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன," என்கிறார்.ஈரான் உடனான போரில் அமெரிக்கா "திட்டமிட்டபடியும்", "இலக்கின் மீதும்" சரியாக இருப்பதாக தெரிவித்த அமெரிக்காவின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் பீட் ஹெக்செத், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கு துல்லியமான கால வரம்பை இதுவரை கூறவில்லை.

 செய்தியாளர்கள் வலியுறுத்திக் கேட்டபோது, "ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்க நாங்கள் விரும்பவில்லை." எனத் தெரிவித்தார்.





அமெரிக்கா தற்போது 7,000 ஈரானிய இலக்குகளைத் தாக்கியதாகக் கூறும் அவர், "படைகளுக்கு தாங்கள் எதை தாக்குகிறோம், ஏன் தாக்குகிறோம் என்பது பற்றிய தெளிவான உணர்வு இருக்கிறது." என்றார்.பீட் ஹெக்செத் கூற்றுப்படி அமெரிக்கப் படைகளால் மட்டுமே 7,000 ஈரானிய இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், ஈரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன.

குறிப்பிடத்தக்க விமானப்படை மற்றும் கடற்படை இல்லாத நிலையில், இந்த ஏவுகணைகளையும் டிரோன்களையும் நம்பி தன்னால் இயன்ற வழிகளில் ஆட்சியைப் பாதுகாக்க ஈரான் முயல்கிறது. காரணம் சுயமாக முடிவெடுத்து யுத்தம் செய்யும் படைக்குழுக்கள் 

ஈரானின் நிலப்பரப்பு மற்றும் பல தசாப்த கால திட்டமிடல் காரணமாக, இந்த ஆயுதங்களின் இருப்பு பூமிக்கு அடியில் ஆழமாக அல்லது மலைகளின் பக்கவாட்டில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன, அதனால் அங்கிருந்தே பறக்கிறது அமெரிக்கா ரேடாரில் சிக்காத ட்ரோன்கள் அதன் தாக்குதல். இந்த இலக்குகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வது கடினம், எனவே தான் இந்த வாரம் பயன்படுத்தப்பட்ட 5,000 பவுண்ட் (2,270 கிலோ) எடை கொண்ட ஜிபியு-72 மேம்பட்ட ஆழமாக ஊடுருவிச் செல்லும் குண்டு உட்பட பல்வேறு வகையான பங்கர்-பஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.  இது யுத்தம் ஒரு பக்கம் நடக்க தற்போது ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் .2 உயர்ந்துள்ளது; சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

எல்பிஜி சமையல் எரிவாயு பற்றாக்குறை காரணமாக சிறிய உணவகங்களில் பாதிப்பு தெரிகிறது,

தொழில்துறை எரிபொருள் விலை லிட்டருக்கு ரூபாய் .21.92 உயர்ந்து ரூபாய் .109.56க்கு விற்பனை.

இதற்கிடையே, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் கடற் பகுதியிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் திட்டம் வகுத்தது.

ஈரான் மீதான போரை முடித்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனாட் ட்ரம்ப் அறிவிப்பு.

வந்த நிலையில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விநியோகத் தட்டுப்பாட்டை சீராக்கும் நோக்கில், ஈரான் எண்ணெய் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா சற்றே தளர்த்தியுள்ளது. எண்ணெய் சந்தையில் ஏற்படப்போகும் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு உலக நாடுகளுக்கு சர்வதேச எரிசக்தி முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்குப் போரால், உலக கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு கண்டிராத மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகமை எச்சரிக்கை.

எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை இயல்பான நிலைக்கு மீட்டெடுக்க 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேலும் ஆகலாம் என்பதால், அனைவரும் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்த நிலையில், சுற்றுலா விசாவில் இந்தியா வந்த சில வெளிநாட்டவர்கள் விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்றதாக சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. அவர்களின் செயல்பாடுகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த வெளிநாட்டவர்கள், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு சென்றதுடன், அங்குள்ள சில குழுக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என அரசு உயர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவர்கள் பல்வேறு இடங்களில் தனித்தனியாக செயல்பட்டு பின்னர் ஒருங்கிணைந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை, வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், வெளிநாட்டு செயல்பாடுகள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



இந்த நிலையில் தற்போது பெண்களை அதிக அளவில் உளவுத்துறையில் வைத்துள்ள இஸ்ரேல் அது உருவான வரலாறே சற்று சிக்கலானது. 

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் நேச நாடுகள் வெற்றி பெற்றாலும், பிரிட்டிஷ் இழப்புகளைச் சந்தித்தது. தனது காலனி ஆதிக்க நாடுகளை நிர்வகிப்பது அதற்குச் சிரமமாகியது. எனவே படிப்படியாக அதன் காலனி ஆதிக்க நாடுகளிலிருந்து விலகியது. 1948ஆம் ஆண்டு மே மாதம், பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து பிரிட்டன் விலகியது. தொடர்ந்து, தங்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கப் பல ஆண்டுகளாகப் போராடிய அரபு இஸ்லாமிய மக்களுக்கும் இஸ்ரேலிய யூதரின மக்களுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. அந்த நிலப்பகுதி யாருக்குச் சொந்தமாகும் என்பதே அதில் எழுந்த போரானது இரு தரப்பினருக்கும் சமமானதாக அமையவில்லை.     அரபு இஸ்லாமிய மக்களுடன் ஒப்பிடுகையில் சிறிய பரப்பளவு கொண்ட இஸ்ரேல் யூதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. இருப்பினும், இஸ்ரேல் என்னும் கனவை நனவாக்குவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடிய ஒவ்வொரு யூதரும், தங்களைத் தயார்படுத்தினர்.

1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி அன்று, இஸ்ரேல் நாடு சுதந்திரத்தை அறிவித்தது. 2000 கடந்த ஆண்டுகளில் முதன்முறையாக, ஒரு யூதர்கள் தேசம் உருவானது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பிராந்தியத்தின் நடுவில், ஒரு யூதர்கள் நாடு உருவாக்கப்பட்டது.

இஸ்ரேலின் கதையானது ஜெருசலேமில் துவங்குகிறது. 1095 ஆம் ஆண்டு. ஒரு குளிர் கால நவம்பர் மாதம் காலைப் பொழுதில், பிரான்சின் கிளெர்மான்ட் நகரில் போப் இரண்டாம் ஹர்பன் ஆற்றிய ஒரு பிரசங்கம், ஐரோப்பாவின் முகத்தையே மாற்றியது.அந்தப் பிரசங்கம் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே 200 ஆண்டுகால போரைத் தூண்டிவிட்டது. இந்தப் போர்கள் பின்னர் கிறிஸ்தவர்களால் சிலுவைப் போர்கள் என்றும், முஸ்லிம்களால் ஜிஹாத் என்றும் அழைக்கப்பட்டதாகும் .

லத்தீன் திருச்சபை, முஸ்லிம் ஆட்சியிடம் இருந்து புனித பூமி மற்றும் புனித நகரின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்காக 1095 ஆம் ஆண்டு முதல் 1271 ஆம் ஆண்டு வரை போர் புரிந்தது. புனித பூமி என்பது இஸ்ரேல், பாலத்தீனம், ஜோர்டான், சிரியா, லெபனானின் சில பகுதிகள் அடங்கும். புனித நகரம்  ஜெருசலேம் இதுவரை பழையகதை. என்ற நிலையில் இனி தற்போதுள்ள செய்தி "அப்போதே எச்சரிக்கை செய்தோம் ஆனால் அமெரிக்கா கேட்கவில்லை!  கத்தார் எரிசக்தித்துறையின் அமைச்சர் தகவல் 

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதன் எதிரொலி மேற்கு வளைகுடா நாடுகள் முழுவதும் பரவுமென முன்னரே அமெரிக்காவுக்கு எச்சரித்திருந்ததாக கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு :-



கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சரும், 'கத்தார் எனர்ஜி' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான ஷாத் அல்-ஹஃபி, ஈரானுடனான போரால் கத்தாரின் எண்ணை வளம் மற்றும் எரிசக்திக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து விவரித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசியவர், "எங்களுடன் கூட்டு வைத்திருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிர்வாகிகளுக்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எரிசக்தித் துறைச் செயலாளருக்கும் நான் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருந்தேன். ஈரான் போர் எங்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்குமென நான் எச்சரித்தேன். அவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் முன்கூட்டியே தெரிந்திருந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகள் மீது, தாக்குதல் நடத்தாமல் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று நான் கிட்டத்தட்ட தினமும் அவர்களுக்கு நினைவூட்டினேன்" என்கிறார்.

ஆனால், இந்த எச்சரிக்கையை மீறிதான் ஈரானின் மிக முக்கியமான இயற்கை எரிவாயு வயலான, தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாட்டு படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கம் விதமாக, ஈரானும் கத்தாரின் ராஸ் லஃப்பான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியிருக்கிறது.


இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா, சாவகாசமான பொறுப்பற்ற பதில் கொடுத்திருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ், இது குறித்து கூறுகையில், "ஈரான் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் குறுகிய கால இடையூறுகள் இருக்கும் என்ற நிதர்சனத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஒட்டு மொத்த எரிசக்திக் குழுவும் அறியாதவர்கள் அல்ல. எதிர்பார்க்கப்பட்ட தற்காலிக இடையூறுகளுக்கு வளைகுடா நாடுகள் முன்னெச்சரிக்கையாக திட்டத்தை வைத்திருந்தன.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு நாடுகள் ஈரானுடனான போர் தொடங்கி மூன்று வாரங்களான நிலையில், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் எண்ணெய்க் கப்பல்கள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பிற முக்கிய எரிசக்திக் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியுள்ளன. இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய தாக்கம் கத்தர் எனர்ஜியின் ராஸ் லஃப்பான் மீது தான் பதிவாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வளாகமான ராஸ் லஃப்பானில் ஏற்பட்ட சேதம் குறித்து அல்-ஹஃபி வியாழக்கிழமை செய்தி நிறுவனத்திடம் பேசினார். இந்தக் கட்டமைப்புகளை உருவாக்க 26 பில்லியன் டாலர் செலவானதென்றும், ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கான LNG விநியோகத்தில் ஐந்து ஆண்டுகள் வரை இதனால் பாதிப்பு ஏற்படுமென்றும் அவர் தெரிவித்தார்.









கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மட்டுமல்லாமல், ஜெட் எரிபொருள் மற்றும் சமையல் LPG போன்ற விநியோகமும் பாதிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போர் காரணமாக, ராஸ் லஃப்பானில் விரிவாக்கப் பணிகள் தாமதமாகும். இது 2027 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு விநியோகத்தைப் பாதிக்கும்.

கடல் பகுதிகளிலிருந்து அனைவரையும் வெளியேற்றுவது எளிதான காரியமல்ல. போர் காரணமாக, 24 மணி நேரத்திற்குள் 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர். எண்ணெய் உற்பத்தி உட்பட அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...