இனி அட்டவணை பட்டியலினக்
கிருஸ்தவர்கள் என இந்தியாவில் யாருமில்லை, மதம் மாறினால் SC/ST அட்டவணை பட்டியலில் நீடிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. கிருஸ்தவ மதத்திற்கு மாறிய பின் பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் எனும் சட்டப் பாதுகாப்பு செல்லாது; ஆந்திரப்பிரதேச கிருஸ்தவ மத போதகர் அளித்த புகாரை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மேல்முறையீட்டில் அதை உச்சநீதிமனறம் உறுதிப்படுத்தியது,, ஆந்திரப் பிரதேச ஹரிஜன அட்டவணைப் பட்டியல் இனத்தைச் சேர்ந்து முன்புகிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவரின் ஜாதிச் சான்றிதழை அதிகார அமைப்புகள் இரத்து செய்யாத காரணத்தால் அதை அவர் தவறாகப் பயன்படுத்தி சலுகை உரிமை பெற்றால் அது மட்டுமே அவருக்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பை அளித்து விட முடியாது.
அவர் தற்போது கிருஸ்தவராக இருப்பதால், அவர் பட்டியல் ஜாதி இல்லை எனவே அவர் அந்த அந்தஸ்தைக் கோரும் தனது உரிமையை மாறிய போதே இழந்துவிட்டார், என்றும், அதனால் அட்டவணை பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது சட்டப்படி நிலைத்திருக்க முடியாததென்றும் நீதிமன்றம் முடிவு செய்தது. மேலும், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும் எந்தவொரு முகாந்திர வழக்கும் இல்லை என்றும் அது தீர்ப்பளித்தது. ஆந்திரப் பிரதேசத்தில் அட்டவணை பட்டியல் ஜாதியினர் (SC) பிரிவில் ஆதி ஆந்திரா, மாதிகா, மலா போன்ற பல்வேறான ஜாதிகள் அடங்கியுள்ளனர்.
இவர்களின் கல்வி, வேலைவாய்ப்பிற்காக மாநில அரசால் ஜாதிச் சான்றிதழ் விதிகள், 1997-ன்படி உரிய இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. SC/ ST மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகங்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தகுதிகளில் பின்தங்கியவர்களாகவே அங்கு வகைப்படுத்தப்பட்டு சிறப்பு சலுகைகளைப் பெறுகின்றனர். இதில் ஹிந்து, சீக்கிய அல்லது பௌத்த, சமண மதங்களைத்
தவிர வேறு இஸ்லாமிய, கிருஸ்தவ, யூத, பார்சி, மதத்தைப் பின்பற்றும் எவரும் இனிமேல் பட்டியல் ஜாதியினராகக் கருதப்படமாட்டார்" அப்படி யாரும் இனி கல்வி வேலைவாய்ப்பு மூலம் சலுகை பெற்றுவந்தால் இனி அது அறவே தடுக்கப்படும்,
சிந்தாதா ஆனந்த் பால் என்பவர் தாக்கல் செய்த மேல் முறையீடடு வழக்கில் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் SC என இனி உரிமை கோர முடியாது என ஆந்திர உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது,
ஹிந்து, பௌத்த, சமண, சீக்கிய மதங்களைத் தவிர்த்து வேறு மதங்களுக்கு மாறியவர்களை SC சமூகமாகக் கருத முடியாதெனவும் கருத்து ஹிந்து, பௌத்தம், சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கே SC சலுகை அந்தஸ்து பொருந்தும். இந்த மதங்களைத் தவிர்த்து, வேறு மதத்திற்கு மதம் மாறுபவர்கள் தங்களது SC அந்தஸ்தை உடனடியாக இழப்பார்கள்” - என்பதே தற்போது உச்சநீதிமன்றம். வழங்கிய தீர்ப்பின் சாரம்சம்.
இதற்கு இனி பொது சிவில் சட்டம் தன் நிரந்தரமான தீர்வாகும்.
தற்போதைய சட்டம் ஏற்றதாழ்வு மிகுந்தது. சிலருக்கு சலுகையும் பலருக்கு அது இல்லாத நிலையும் உள்ளது, இது நம் பாரதநாட்டுக்குத் தேவையில்லாதது.
சீக்கியர்கள் பிற்காலப் போர்க்குடி என்று அவர்கள் மட்டும் வாள் வைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு சட்டம் உண்டு. எப்போதும் அவர்கள் ஒரு கத்தி வைத்துக் கொள்ளலாம்..அதே ஹிந்து போர்க்குடிகளான ராஜ்புத்திர, ஜாட்டுக்கள் , ஜாதவ் எனும் வடபுல யாதவர், கள்ளர்கள் , மறவர்கள் , அகம்முடையர்கள் , போர்குடி வன்னியர்குல சத்திரியர்கள், ராஜூக்கள் , மன்னர் வழி வந்த நாயக்கர்கள், மராட்டாக்கள் வாள் வைத்திருந்தால் அது சுதந்திரம் அடைந்த பின் குற்றம். இதில் எதற்கு ஏற்றத்தாழ்வு?
சீக்கியர்கள் ஹெல்மட் அணியத் தேவையில்லை. மற்ற மதத்தினர் அணியா விட்டால் சட்டப்படி குற்றம். இது தான் சட்டம்.
சில பிரிவினருக்கான மதர்ஷா பள்ளிகூடம் மற்றும் CSI உள்ளிட்ட சில மதம் சார்ந்த , கல்வி நிறுவனம் மற்றும் ,கல்லூரிகள் கட்ட அரசே இலவச இடமும் , பராமரிப்புக் கட்டணமும் வழங்கும். ஹிந்துக்கள் கல்லூரி கட்ட இடமும் கிடையாது ,நிதியும் அரசு சலுகையும் கிடையாது. இது தான் சரிசமமான சட்டம் .
நாடு முழுக்க குறிப்பிட்ட மதத்தினர் , ஜாதியினருக்கு சலுகையைக் கொடுத்துவிட்டு மற்றவர்களை காங்கிரஸ் அரசு 60 ஆண்டுகள் ஏமாற்றியுள்ளனர். ஓட்டு வங்கிக்கான சட்டம் எதற்கு? ஒன்று சலுகையை கொடு இல்லை. பொது சட்டம் கொண்டு வர வேண்டும் மதம் மாறினால் அது கிடையாது
பட்டியலினத்தவர் மதம் மாறினால் அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்படுவர்; ஆனால் அதில் (OBC) பிற்படுத்தபபட்டவர்கள் இட ஒதுகீட்டில் கூடுதல் பாதிப்பு வரும் மதம் மாறினால் அட்டவணை பட்டியலினத்தவர் கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஹிந்து அட்டவணை பட்டியல் ஜாதிகளில் இருந்து இனி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தாழ்த்தப்பட்டோர் (SC) இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற முடியாது என்று சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், மதம் மாறிய பிறகும் இட ஒதுக்கீட்டு சலுகைகளை தொடர்ந்து பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஜாதிந் பாகுபாடு இருப்பதால் தான் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்க கூடிய சூழ்நிலையில், கிறிஸ்தவத்தில் ஜாதி பாகுபாடு இல்லை என்பதால் 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பு (தாழ்த்தப்பட்டோர்) உத்தரவின் பத்தி 3-ன் படி, ஹிந்து, சீக்கியர் அல்லது பௌத்தர் உள்ளிட்ட மதத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுபவர் தாழ்த்தப்பட்டோராக கருதப்பட மாட்டார்கள். ஆகையால், ஒருவர் மதம் மாறியவுடன் பட்டியலின அந்தஸ்து தானாகவே ரத்தாகிவிடும். மேலும், உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மதம் மாறியவர்கள் பட்டியலின சலுகைகளை பெறுவதைத் தடுக்க விசாரணை நடத்தி நான்கு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது
ஆனால் தமிழ்நாட்டில் இந்தநிலை அதிகமாக உள்ளது. சலுகைகளுக்காக மதம் மாறியவர்கள் போலி ஆவணங்களின் அடிப்படையில் தாங்கள் கிருஸ்தவர்கள் என்பதை மறைத்து சலுகைகளை பெற்று வருவது கண்டிக்கத்தக்கது என. தற்போது பல தலைவர்கள் குரல் கொடுத்து வருகிற நிலைமை ஆகையால் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடப்பதோடு, அச்சட்டத்தை அமுல்படுத்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதய அரசு முடிந்த நிலையில் இனி வரும் அரசு அதற்காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்போய தீர்ப்பு கூறும் செய்தி





























கருத்துகள்