விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இயங்கிய தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கரமான வெடி விபத்தில் 22-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததனர்
கடந்த 5 ஆண்டுகளாக பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக, காலமுறைப்படி பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளாததும், தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததும் குறித்து கடுமையான கேள்விகள் எழுகின்றன.
உடனடியாக அனைத்து பட்டாசு ஆலைகளையும் முறையாக ஆய்வு செய்து, பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணீக்கம் என்பவருக்குச் சொந்தமான வனஜா பட்டாசு ஆலை எனச் செயல்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். இந்த நிலையில், பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் தீயணைப்புத்துறையின் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ன. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. மேலும் பட்டாசு ஆலையில் உள்ள 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவம் நிகழ்விடத்தை ஆய்வு செய்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறை விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள்