முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பல்லோவில் ஜி.கே. மணியை விரட்டி விளாசிய மருத்துவர் ராமதாஸின் 3 வது மகள் கவிதா

ஜி.கே. மணியை விரட்டி விளாசிய மருத்துவர் ராமதாஸ் மூன்றாவது மகள் கவிதா ஜெய்கணேஷ்

மருத்துவமனையில் நடந்தது இது?

"எங்கள் குடும்பத்தைப் பிரித்த ஜிகே மணிக்கு மருத்துவமனையில் என்ன வேலை என கவிதா கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது."



சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச் சூழலில், அவரை நலம் விசாரிக்க வந்த அக்கட்சியின் ஜி.கே. மணியை, மருத்துவர் ராமதாஸின் மூன்றாவது மகள் கவிதா ஜெயகணேஷ் கடுமையாகச் சாடியதுடன் திட்டி திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. காலங்கடந்து நடந்த போதும் சரியாக நடந்துள்ளது.


பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு லேசான மயக்கம் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் உயர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டிருந்த வேளையில், ஜி.கே. மணியும் அங்கு வருகை தந்தார்.



ஜி.கே. மணியைக் கண்டதும் மருத்துவர் ராமதாஸின் மகள் கவிதா ஜெயகணேஷ் கோபத்தின் உச்சிக்கே சென்றார். அங்கிருந்தவர்கள் முன்னிலையிலேயே அவரை நோக்கி, "எங்கள் குடும்பத்தை பிரித்த படுபாவி நீ(ங்கள்)தானே , இப்போது எதற்காக இங்கே (வந்தாய்) வந்திருக்கிறீர்கள்?" என ஆவேசமாகவே கேள்வி எழுப்பினார். மேலும், "எங்கள் குடும்பத்தில் சூழ்ச்சி செய்து விரிசலை உண்டாக்கிவிட்டு, உ(ன்)ங்கள் மகனுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் சீட்டு வாங்கித் தந்துவிட்(டாய்)டீர்கள். உ(னக்கு)ங்களுக்கு திமுகவிற்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் தாராளமாகப் போகலாம் செல்லுங்கள், உங்களை யார் தடுத்தது? ஆனால், எதற்காக எங்கள் குடும்பத்தை குறிவைத்துச் சதி செய்தீர்கள்?" என அடுக்கடுக்கான புகார்களை நேரடியாக முன்வைத்தார். 


கவிதா ஜெகணேஷின் இந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன ஜி.கே. மணி, எவ்விதமான பதிலும் சொல்ல முடியாமல் போய் திகைத்து நின்றார். "இதுவரை இந்த குடும்பத்திற்கு நீங்கள் செய்த துரோகம் போதாதா? இதற்கு மேல் செய்ய என்ன பாக்கி இருக்கிறது? இங்கேயும் ஏதேனும் சூழ்ச்சி செய்ய வந்தீர்களா? எனக்கு வரும் கோபத்திற்கு என்ன செய்வேன் என்றே தெரியாது, மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடுங்கள்" என கவிதா ஜெயகணேஷ் கொந்தளித்ததைக் கண்டு, அங்கிருந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களும் மணியை திட்டித் தீர்த்தனர்

இந்த எதிர்பாராத எதிர்ப்பால் செய்வதறியாது திகைத்த ஜி.கே. மணி, அங்கிருந்து உடனடியாக வெளியேறி அவரது காரில் ஏறிச் சென்றார். நல்ல நிலையில் இருந்த பாமகவின் செயல்பாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மணி வருகை என்பது மனோன்மணியத்து குடிலன், இராமாயணத்தில் கூனி, மஹாபாரதத்தில் சகுனி, சிலப்பதிகாரத்தில் திருட்டு வஞ்சிப்பத்தன் இறுதி நிலை போல ஆனது குடும்ப உறுப்பினர்களுக்கும், மூத்த நிர்வாகிக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் அரங்கேறிய இந்த மோதல் அடிதடியாக மாறவில்லை இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

-"திமுகவில் போய் சேருடா.. துரோகி!"  என்ற கோஷமும் அங்கு எதிரொலித்தது, 

தானும் தனது மகனும் வாழ வேண்டும் என்பதற்காக, பல்லாயிரக் கணக்கான தொண்டர்களின் தியாகத்தில் உருவான பாட்டாளி மக்கள் கட்சியை, திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு, 'உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்' ஜி.கே. மணியை... இன்று அப்பல்லோ மருத்துவமனையில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகும் அளவுக்கு வெளுத்து வாங்கியுள்ளார் மருத்துவர் ச. ராமதாஸ்  வாரிசு!

ஒருபக்கம் தனது மகனை கட்சி மாற வைத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிற்கவைத்து விட்டு, மறு பக்கம் பாமகவுக்கு எதிராக மருத்துவர் ச. ராமதாஸை தள்ளாதவயதில் ஊர் ஊராகப் பிரச்சாரத்துக்கு இழுத்தடித்து குடும்பத்தை இரண்டாக உடைத்து பேராபத்தில் தள்ளும் இந்தத் துரோகியை - மருத்துவர் ராமதாஸ் வாரிசு 'சங்கை சங்கையாக திட்டிய போதும்' எதுவுமே நடக்காதது போன்று இருந்து  வெளியேறிய மணி விரைவில் மாற்றுக் கட்சியில் இணைவார்.

அந்த நாளும் விரைவில் வரும். என உண்மைத் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...