ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்பிக்கள் பாஜக-வில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரும் துணைக் குடியரசுத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ஜ.க-வின் பலம் 113-ஆக உயர்வு: 7 ஆம் ஆத்மி எம்.பி-க்களின் இணைப்பை ஏற்றார் அவைத் தலைவர். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்களும் பா.ஜ.க-வில் இணைவதற்கு மாநிலங்களவை தலைவர் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற மேலவையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.
``ஊழலை ஒழிக்க வந்த
கட்சியே ஊழலில் மூழ்கிவிட்டது’’
``நேர்மையான அரசியலை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஊழலின் கூடாரமாக மாறிவிட்டது. ஊழலை ஒழிக்க வந்த கட்சியே இன்று ஊழலில் மூழ்கிவிட்டது’’
கடந்த 18 ஆண்டுகளாக கெஜ்ரிவாலுடன் இணைந்து பயணித்த சுவாதி மாலிவால் கட்சியிலிருந்து விலகிய பின் பரபரப்புக் குற்றச்சாட்டு




கருத்துகள்