முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளம் சிறார்களுக்கான மாவட்ட அளவில் லிட்டில் ஹார்ட் பள்ளியில் நடந்த சதுரங்கப் போட்டிகள்

இளம் சிறார்களுக்கான மாவட்ட அளவில் லிட்டில் ஹார்ட் பள்ளியில் நடந்த சதுரங்கப் போட்டிகள், 





தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, செக்காலைக்கோட்டை, 

பெரியார் நகர் 9வது வீதியான பர்மா காலனியில் அமைந்துள்ள டாக்டர் G.சுவாதி கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தமிழ்நாடு கேட்டரிங் கல்லூரி மற்றும் லிட்டில் ஹார்ட் கிட்ஸ் பள்ளியில் 

மாவட்ட அளவிலான ரேபிட் செஸ் போட்டி-2026 இளம் சிறார்களுக்கானது சாணக்யா செஸ் அகாடமியால் நடத்தப்படடது, 






31 மார்ச் 2026 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 09:00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன், துவங்கி மதியம் 2.மணி வரை நடைபெற்றத நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக:-  அதூலன், சாணக்யா அகாடமியின் அமைப்புச் செயலாளர், எஸ்.வி. முத்துக்குமார்,  துணைத் தலைவர், சிவகங்கை, செஸ் சங்கம், ஆர்.பாண்டியன்,  தமிழ்நாடு உள்ளாட்சி தளத்தணிக்கைத் துறை இணை இயக்குநர், எஸ்.கே.புலித்தேவன் பாண்டியன் , எடிட்டர், பப்ளிக் ஜஸ்டிஸ், எஸ். சிதம்பரம், தமிழ்நாடு அரசு பொதுத்துறையின் முன்னாள் துணைச் செயலாளர் ,  தி.ரெங்கநாதன், M.Sc (ஜியாலஜிஸட்) ஒருங்கிணைப்பாளர் - TNCHM,





பி. சுமதி குனசேகரன், செயலாளர் டாக்டர் G.சுவாதி கல்வி அறக்கட்டளை, எஸ்.டி.ஸ்டெல்லா ராணி, முதுநிலை ஆசிரியர் ,SMS மேல்நிலப்பள்ளி,  டாக்டர்.எஸ். புவனேஸ்வரி, முதுநிலை ஆசிரியர், SMS மேல்நிலப்பள்ளி,  எம்.சோலை ஆச்சி, அமைப்புச் செயலாளர், ஏ.பழனியப்பன், முதல்வர், தமிழ்நாடு கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி ஆசிரியர்கள்,  எஸ்.எம்.மதிவதனி, டி.ஆரோக்கியமேரி, எஸ்.கலையரசி, பி.பிரதீபா, ஏ.மைமூன் ரோஜா, ஆர்.அனிதா, ஆர்.விக்டர் செல்வம், பாலசுப்ரமணியன், பனியாளர் எஸ்.லலிதா, ஆகியோர்  கலந்து கொண்ட நிகழ்வில்  3 முதல் 9 வயது வரை உள்ள சிறு குழந்தைகள் பல்வேறு பள்ளிகளில் பயிலும் சிறார்கள் 100 க்கும் மேற்பட்டோர் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் கலத்து கொண்டு போட்டியில் பங்குபெற்றனர்,




போடடிகளை, முதல் தளத்திலும் இரண்டாம் தளத்திலும்தலைமை நடுவர் .S அதூலன் IA- (சர்வதேச நடுவர்). துணை நடுவர்- எம்.எஸ். ஆர் பிரியா SNA (மூத்த தேசிய நடுவர்) மற்றும் வி.கயல் விழி. (எஸ்என்ஏ), இராணி ராஜஸிம்(SA), எஸ்.சாந்தினி,என்.பவானி, எம்.திவ்யா, வி.சிவசங்கரி, பி.சுபாஷினி. ஆகிய ஸெஸ் நடுவர்கள் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லிட்டில் ஹார்ட் சிறார் பள்ளி நிர்வாகம் சார்பில்,  எம்.சோலை ஆச்சி, விக்டர் செல்லம், கலையரசி, மைமூன் ரோஜா, உள்ளிட்டோர் செய்தனர்,

நிகழ்ச்சியில் இராஜா ரவிவர்மாவின் ஓவியக் காட்சிகளும் இடம் பெற்று பலரது பாராட்டுகளைப் பெற்றது.  வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள், மெடல்கள் வழங்கப்பட்டது கல்லூரி முதல்வர் ஏ. பழனியப்பன் நன்றி கூறினார், இதுவரை ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் போட்டிகள் எங்கும் நடக்கவில்லை மற்றும் பங்கேற்க வில்லை இங்கு தான் முதலமுறையாகக் கலந்து கொண்டது சிறப்பாக   அமைந்தது.                     இந்தியாவில் நடக்கும் சதுரங்கப் போட்டி


AICF  எனும் All India Chess Federation மூலம் தேசிய மற்றும் சர்வதேச தரவரிசைப் போட்டிகளினது Rating Tournaments நாடு முழுவதும் நடத்தப்படுவதில் .


பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கான சிறப்புப் போட்டிகள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. 

2026-ஆம்  ஆண்டில், FIDE Candidates Tournament, Chess.com வழங்கும் பல்வேறு ஆன்லைன் போட்டிகளும், உள்ளூர் அளவில் பல போட்டிகளும் உண்டு  பள்ளி மாணவ மணவியர்கள் மத்தியில் 

சதுரங்கப் போட்டி தர்க்க ரீதியான சிந்தனையை மற்றும் பொறுமையை வளர்ப்பதோடு, சிறந்த அறிவுசார்ந்த சவாலையும் வழங்குகிறது,.ஒரு காலத்தில் சமஸ்தான மன்னர்களின் விளையாட்டு சதுரங்கம் (அ) செங்களம் (அ) வல்லாட்டம் (Chess) ஆகும் , இருவர் விளையாடும் பலகை விளையாட்டு தமிழில் ஆனைக்குப்பு எனப் பெயருண்டு. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள், எட்டுக்கு எட்டு கட்டங்கள் என 64 கட்டஙகள் விளையாட்டில் பயன்பட. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் உண்டு விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது.




பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். செங்களம் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அன்று. மதியூகமும், தந்திரமும் இவ்விளையாட்டுக்கு முக்கியமானது, தற்காலங்களில் இது பாடசாலைப் பாடத்திடடத்திலும் உள்ளது  உலகம் முழுவதுமுள்ள பல மில்லியன் கணக்கான மக்களால் வீடுகளில், பூங்காக்களில், விளையாட்டுக் கழகங்களில், மற்றும் இணையத்தளத்தில், கணினியிலும் போட்டித் தொடர்களாகவும் விளையாடப்படுகிறது ஏழாம் நூற்றாண்டில் நம் பாரத மண்ணில் விளையாடிய சதுரங்கம்  விளையாட்டிலிருந்தே  வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இங்கிருந்து மேற்கில் ஐரோப்பாவுக்கும், கிழக்கில் கொரியா வரை பல வேறுபாடுகளுடன் பரவியது. மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்கும் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சோ X-இன் ஆதரவில், சதுரங்கம், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டது. 11 ஆம் நூற்றாண்டில் செங்களம் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது.

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சதுரங்கக் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் நடைமுறைக்கு வந்தது "போன்"கள் எனும் வீரர் முதல் நகர்த்தலின்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, "பிஷப்" திறந்த கட்டங்களின் மூலை விட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புதிதாக வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர முடியும் . ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என "இராணி"க்கிருந்த தகுதி அதிகரித்து திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு "இராணி" மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது.


மேற்படி மாற்றங்கள் சதுரங்கத்தை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடுபாடுள்ள சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது.




அக்காலம் தொட்டு ஐரோப்பாவில் செங்களம் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது  சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்ந்த ஏனைய, தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்ட .மனித மூளைக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட சதுரங்க விளையாட்டை இப்பொழுது, இயந்திரங்களும் விளையாடத் தொடங்கின. ஆரம்பகாலங்களில் வெறும் ஆர்வம் காரணமாகப் பயன்பட்டுவந்த ஒன்றாக இருந்த போதிலும், செங்களம் விளையாடும் கணினிகள் வளர்ந்து திறமையான மனிதர்களுக்கே சவால்விடக்கூடிய, அல்லது தோற்கடிக்கக்கூடிய அளவுக்குச் சக்தி மிக்கவையாகிவிட்டன., 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...