மாநில உள்துறைச் செயலாளரையும் மாற்றியது தேர்தல் ஆணையம்
ஏ.டி.துரை குமார் ஐபிஎஸ் வழக்கமான பணியிட ஆணை வெளியிடும் வரை V&AC ன் பொறுப்பு இயக்குனராக உள்ளார்.
தீரஜ் குமாருக்கு பதிலாக மணிவாசனை புதிய உள்துறை செயலாளராக நியமித்து நடவடிக்கை இடமாற்ற உத்தரவை ECI மாற்றியமைக்கிறது, டேவிட்சன் தேவாசீர்வதம், IPS தலைவராக தொடர்கிறார்,
ஆயுதப்படைக் காவல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமனம்.தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமாரையும், புதிய உள்துறை செயலாளராக கே மணிவாசனையும் இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு; மேலும், சட்டசபை தேர்தல் முடியும் வரை தீரஜ் குமாரை தேர்தல் தொடர்பான பணிகளுக்கு நியமிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஜிபி டேவிட்சன் தேவாசீர் வாதத்தை மாற்றியதற்கான உத்தரவை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்.
DVAC டிஜிபி ஆக சந்தீப் மிட்டலை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவரை ஆயுதப்படை டிஜிபியாக மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்புஇந்த சூழலில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் நேற்று (ஏப்ரல் 11, 2026) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யாக (SIC-I) பணியாற்றி வரும் ஏ.டி. துரை குமார் ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அல்லது ஒரு நிரந்தர அதிகாரி நியமிக்கப்படும் வரை, ஐ.ஜி. துரை குமார் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பை முழுமையாகக் கவனிப்பார். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துகள்