தூத்துக்குடி, திருநெல்வேலி, காரைக்குடி, பரப்புரை முடித்து கன்னியாகுமரியில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
மகாதானபுரம் சந்திப்பில் சைக்கிளில் வலம் வந்து தொண்டர்களை உற்சாகமிகச் சந்தித்தார். பின்னர் கன்னியாகுமரி சீரோ பாயிண்ட். வரை சாலை வழி சந்திப்பை நிகழ்த்தினார்.
மகாதானபுரம் மற்றும் ஜீரோ பாயிண்ட் பகுதிகளில் நடிகர் விஜய் பேசுகையில், "இந்தக் கோடை கால வெப்பத்தில் எனக்காக நீங்க வந்திருக்கீங்க. உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள். இங்கு சில விஷயங்களை நான் அறிவிக்கலாம் என இருக்கிறேன்.
இலஞ்சமில்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் போய் சேரும். அதற்கெனத் தனியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதார் கார்டைப் போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு வழங்கப்படும்.
மீன்பிடித் தடைக்கால நிதி ரூபாய் .8,000 லிருந்து ரூபாய் .20,000 மாக உயர்த்தப்படும்
இலங்கைக் கடற்படையிடம் பிடிபட்ட படகுகளை தூதரகத்தில் பேசி மீட்கும் வரை படகு உரிமையாளருக்கு ரூபாய்.5 லட்சம் நிதி வழங்கப்படும்
மீனவர்கள் படகு டீசல் மானியம் 1,500 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும்
கடல்தாய் வீட்டு வசதித் திட்டத்தில் சிதிலமடைந்த மீனவக் குடியிருப்புகளை அகற்றி புதிய வீடுகள் கட்டித்தரப்படும்
"உங்களுடைய மீனவ நண்பன்" என்று தன்னை அழைத்து மீனவர்களுக்கு விஜய் கொடுத்த பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகள் தான் இது ஏதோ ஸ்டாலின் சார் விடுகிற கதை மாதிரி இல்லை. அறிவியல் பூர்வமா சாத்தியமான ஒன்று தான் இப்போது நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். அதை த.வெ.க ஆட்சி உருவாக்கிக் காட்டும்.
இதுவரைக்கும் இந்த கவர்மெண்ட் சிஸ்டத்துல, ஒரு கவர்மெண்ட் ஆபீஸ்க்குப் போய் ஒரு வேலை செஞ்சு குடுக்கச் சொல்லி கேட்டீங்கன்னா, 'இவங்களைப் பாரு, அவங்களைப் பாரு, இப்ப வா, அப்புறம் வா, இந்த டாக்குமெண்ட் சரி இல்ல, அந்த டாக்குமெண்ட் சரி இல்ல'ன்னு இழுத்தடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அப்படி இழுத்தடிக்கிறதுக்குக் காரணம் டாக்குமெண்ட்ஸ் இல்ல, டப்பு டப்பு. லஞ்சம். இப்படிப்பட்ட ஒரு சிஸ்டம் பேரு குட் கவர்னன்ஸ் இல்ல, ஹராஸ்மென்ட்.ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றிய அனைத்துத் தரவுகளும் அதில் இருக்கும். பிறப்பிலிருந்தே ஒவ்வொரு மனிதருக்கு உரிய திட்டப் பலன்கள் போய் சேரும்.
விண்ணப்பிக்கத் தேவையில்லை. லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவையில்லை. வீட்டு வாசலுக்கே அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் வந்து சேரும். ஏ.ஐ உதவியுடன் இதற்கான தரவுகள் சாத்தியமாக்கப்படும்."மேடையை விட்டு இறங்க மாட்டார்" என விமர்சனம் செய்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி கருத்து காரணமாக களத்தில் இறங்கி இடை இடையே சைக்கிள் ஓட்டிய நடிகர் விஜய்
தவெக தலைவர் விஜய் காரைக்குடி நகருக்குள் வந்தவுடன் அத்தனை கூட்டத்துக்கு நடுவே மிதிவண்டி ஓட்டியது காரணம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தது போலவே கன்னியாகுமாரி பரப்புரைக்கு செல்லும் போதும் மிதிவண்டி ஓட்டினார்
தவெக தலைவர் விஜய் மேடையிலிருந்தே டாடா காட்டுவார். கீழே இறங்கவும் மாட்டார். அப்படிப்பட்ட வேட்பாளர் உங்களுக்கு வேண்டுமா? என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் வைத்த நிலையில் நடிகர் விஜய் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது பரபரப்பாகத் தொடங்கியுள்ள நிலையில் அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். களத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை, ஆகியோருக்கு மட்டுமே பணம் கொடுக்காமல் கூட்டம் கூடுகிறது, இதில் விஜய்க்கு கூடும் கூட்டம் இதுவரை பொது வெளியில் வராத மக்கள், மற்றும் அரசியல் நிகழ்வுகளில் இதுவரை கலந்து கொள்ளாத மக்களின் பிள்ளைகள் வாக்குறிமை பெற்ற 70 சதவீதம் கொண்ட இளைய தலைமுறை மற்றும் வாக்குறிமை இல்லாத 30 சதவீதம் சிறுவர்கள் மேலும் திருவள்ளூர் மாவட்டம் துவங்கி கிழக்கு கடற்கரை சாலை வழியில் கன்னியாகுமாரி வரை உள்ள மீனவர்கள் அதிகம் வாழும் தொகுதிகள் அதில் மொத்த வாக்காளர்களில் 60 சதவீதம் ஆதரவு விஜய் பக்கம் உள்ளது ஆகவே அதில் தான் இதுவரை ஆண்ட திமுக மண்ணைக் கௌவுகிறது பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமவை ஆதரித்து வாக்கு சேகரித்தார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர் பெரம்பூர் தொகுதி விஐபி தொகுதி எல்லாம் கிடையாது. சாமானிய தொகுதி.இங்கு வாழக்கூடியவர்கள் சாமானிய மக்கள், அடித்தட்டு மக்கள். இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சினிமாவில் நடித்தார்கள் வருவார்கள் போவார்கள். இந்தத் தொகுதியில் போட்டியிடுபவர் (நடிகர் விஜய்) மேடையிலிருந்தே டாடா காட்டுவார். கீழே இறங்கவும் மாட்டார். அப்படிப்பட்ட வேட்பாளர் உங்களுக்கு வேண்டுமா? என சிந்தித்துப் பாருங்கள்” என நடிகர் விஜயின் பெயரைக் குறிப்பிடாமலேயே மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்த விமர்சனத்திற்கு தவெக தலைவர் விஜய் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். அதாவது காரைக்குடியில் விஜய் தனது பிரச்சாரத்தை மேற்க்கொண்டார்,
அப்போது சாலை நெடுகிலும் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத மக்கள் வெயிலில் காத்திருந்து தங்களது பிள்ளைகளுடன் வரவேற்றனர் காரணம் விஜய் மீதான அன்பு மட்டுமல்ல தற்போது நடந்த திமுக அரசாங்கம் மீதான கோபமும் தான், இவர்கள் நல்லாட்சி தந்திருந்தால் விஜய்க்கு இவ்வளவு கூட்டம் வராது இவர்கள் மக்களுக்கு எதுவுமே செய்யாத நிலையில் இவர்களை எதிர்க்கும் விஜய்க்கு மக்கள் ஆதரவு கூடுகிறது, அது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வந்த விஜய் காரைக்குடி நகருக்குள் வந்தவுடன் அத்தனை கூட்டத்துக்கு நடுவே சைக்கிள் ஓட்டினார், நாடோடி வாகிரி மொழி பேசுகற மக்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பின் நடிகர் விஜய்க்கு மட்டுமே கூடுவதைக் காண்கிறோம்,
காரைக்குடியில் நடிகர் விஜய் வழிநெடுகிலும் வரவேற்பு அதிகரிக்க குறித்து நேரத்திற்குள் வரமுடியாததால் மக்களிடம் கை உயர்த்திக் காட்டி விட்டு பேசாமல் அத்தொகுதியின் வேட்பாளரான டாக்டர் பிரவுக்கு தனது கையிலிருந்த விசில் சின்னத்தை காட்டி வாக்கு கேட்டு அங்கிருந்து கிளம்பினார். காரைக்குடியில் விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள். இது ஒரு தலைமுறைக்கானத் தேர்தல் ஜனநாயகனை முடக்கியது யார், போதைக்கு உள்ளான மக்களை உறுவாக்கிய திமுக எனச் சாடினார்.
விஜய் காரைக்குடியில் பேசாதது ஏமாற்றமாக இருந்தாலும் நாளை கடலூரில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் பேசுவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது காரைக்குடி.. சீமானுக்கு எதிராக களம் காணும் 24 பேர், இதில் சீமான் தேறுவது கடிணம்.
காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி, அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி உட்பட மொத்தமாக 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் பாண்டி என்ற பெயரில் இருவரும், பிரவு என்ற பெயரில் இருவரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
அதேபோல் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை சட்டமன்றம் சென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் சீமான், சொந்த மாவட்டமான சிவகங்கையில் களமிறங்கி இருக்கிறார். அதேபோல் உள்ளூர் செல்வாக்குடன் இருக்கும் தேர்போகி பாண்டிக்கு அமமுகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சிட்டிங் எம்எல்ஏ-வான மாங்குடி மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் சோசியல் மீடியாவில் தவெக பிரபலமாக இருக்கும் பிரபு களத்தில் இருக்கிறார். இந்த 4 வேட்பாளர்களை கடந்து மொத்தமாக 39 பேர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதில் 8 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அதேபோல் 3 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இறுதியாக 25 பேரின் பெயர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதன்படி பிரபு என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும், பாண்டி என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் போட்டியில் இருக்கின்றனர்.
நட்சத்திர வேட்பாளர்களாக உள்ள சீமான், இந்த தேர்தலில் டெப்பாசிட் வாங்கினால் பெரிது என்ற நிலைமை உள்ளது அமமுகவின் தேர்போகி பாண்டி, காங்கிரஸ் மாங்குடி மற்றும் பிரபு ஆகிய மூன்று பேர் களத்தில் நேருக்கு நேர் போட்டியில் மோதுவதால், காரைக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. அதேபோல் காரைக்குடி தொகுதியில் யார் வெல்வார்கள் என்பதில் பலர் கணிக்க முடியாமல் இருந்தாலும் பிரபு விசில் சப்தம் பலமாகக் கேட்கிறது அடுத்து அமமுக இடம் பிடிக்கும் நிலைதான் காண்கிறோம், ஐந்து ஆண்டு காலம் ஆண்ட திமுக ஊழல் ஆட்சி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு விரோதமாய் உள்ளது ஏனென்றால் ஜாதியக் கணக்குகள் கடந்து, நட்சத்திரங்களும் களத்தில் இருக்கின்றனர். இதனால் மே 4 ஆம் தேதி காரைக்குடி தொகுதி அனைவராலும் கவனிக்கப்படும் தொகுதியாக மாறும் என்று பார்க்கப்படுகிறது. அதில் குக்கரில் வரும் விசிலா அல்லது இளையோர் ஊதும் விசிலா என்பதே உண்மை நிலவரம்தருமபுரியில் தவெக தலைவர் விஜய்யின் நாளைய ரோடுஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஒத்திவைப்பு என தனியார் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது தொடர்பாக - காவல்துறை மறுப்புச் செய்தி வெளியிட்டதுடெல்லிக்கு எட்டிய விசில் சப்தம் உளவுத்துறை ரிப்போர்ட். தாமரைக்கு விழிப்புணர்வு, கலைத்து ஆடப்போகும் அமித் ஷா
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அவரின் கட்சி தொடர்பாக டெல்லிக்கு முக்கியமான உளவுத்துறை ரிப்போர்ட் சென்றுள்ளதாம். இந்த ரிப்போர்ட் அடிப்படையில் பாஜக தீவிரமாக காய்களை நகர்த்துகிறதாம். ரிப்போர்ட் அப்படியே உண்மையானால் அது தமிழ்நாடு தேர்தல் களத்தில் புயலை கிளப்பலாம் என்கிறார்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை இளைஞர்களின் வாக்குகள் யாருக்குச் செல்லும் என்பது தான் அது சந்தேகம் இல்லாமல் விஜய் தான் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அணைத்து தொகுதிகளில் விஜய் கொடி உயரப்பறக்கிறது தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அதிக அளவில் இளைஞர்களுக்கும், படித்த புதிய முகங்களுக்கும் முன்னுரிமை அளித்த
நிலையில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமாரி வரை மீனவர்கள் ஆதரவு தவெகவுக்கு என்பதே தற்போது நிலை மற்ற மாவட்டநிலையில் பாஜகவின் வேட்பாளர்கள் திமுக அமைச்சர்களை ஆட்டம் காண வைத்துள்ளனர்
சமீபத்தில் டெல்லிக்கு போன உளவுத்துறை அறிக்கையின்படி, விஜய்யின் இந்த 'இளம் படை' உத்தி பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாக மாறப்போகிறதாம்.
வாக்கு வங்கி விஜய்யின் வேட்பாளர்கள் பிரிக்கும் வாக்குகள், திமுகவின் இளைஞர் அணி வாக்குகளையும், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளையும் கணிசமாகச் சரிக்கும் என்று தான் கணிக்கப்பட்டுள்ளது.
புது வாக்காளர்களின் ஆதரவு: 18 முதல் 25 வயது வரையிலான புதிய வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் விஜய்யின் கட்சிக்கு வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டுவதாக அந்த ரிப்போர்ட் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தனிப் பெரும்பான்மை பெறுவது எந்தக் கட்சிக்கும் சவாலாக இருக்கும் என்ற சூழலில், டெல்லி மேலிடம் இப்போது தனது பார்வையை விஜய் பக்கம் திருப்பியுள்ளது.
ஒருவேளை தொங்கு சட்டமன்றம் உருவானால், விஜய்யின் ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்க பாஜக திட்டமிடுகிறது. டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் படி, தமிழகத்தில் ஒரு 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமையவே அதிக வாய்ப்புள்ளதாக பாஜக மேலிடம் கருதுகிறது. இதைப் பகிரங்கப்படுத்தும் விதமாகத்தான் நேற்று முன் தினம் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேசிய பேச்சும் அமைந்திருக்கிறது.
"தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தேர்தலுக்குப் பிறகு விஜய்யுடன் பேசி என்.டி.ஏ (NDA) கூட்டணி ஆட்சியை அமைப்போம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது!" - அத்வாலேவின் இந்த ஸ்டேட்மென்ட் சாதாரணமானதல்ல, இது பாஜகவின் 'போஸ்ட் எலக்சன்' ஸ்கெட்ச் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கமலாலயத்தில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால், வாக்குகளைப் பிரிக்கும் வல்லமை கொண்ட ஒரு சக்தி தேவை. அந்த சக்தியாக நடிகர் விஜய்யை பிஜேபி பார்க்கிறது. மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே அண்மையில் பேசியது போல, "தேர்தலுக்குப் பின் விஜய்யுடன் பேச்சுவார்த்தை" என்பது வெறும் தற்செயலான பேச்சு அல்ல; அது டெல்லியின் திட்டமிட்ட நகர்வு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
திமுக - அதிமுகவின் எதிர்வினை
விஜய்யின் எழுச்சி தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தே, திமுகவும் அதிமுகவும் தங்கள் தேர்தல் வியூகங்களை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளன.
திமுக: தனது வாக்கு வங்கி சிதறாமல் இருக்க, நலத்திட்டங்கள் மற்றும் 'திராவிட மாடல்' பிரச்சாரத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்லத் தீவிரமாக உள்ள நிலையில் அவர்கள் செய்த ஐந்து ஆண்டு கால ஊழல் அவர்களை அசைத்துப் பார்க்கிறது..
எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான அதிமுக, விஜய்யின் வருகையால் தங்கள் வாக்குகள் பிரியாமல் இருக்க மாவட்ட வாரியாகப் புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.
விஜய் எனும் புதிய அரசியல் கடலோர அலை, பாரம்பரிய கட்சிகளின் கோட்டைகளைத் தகர்க்குமா அல்லது கூட்டணி கணக்குகளில் ஐக்கியமாகுமா என்பது வரப்போகும் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். ஆனால், இப்போதைக்கு டெல்லியின் 'ராடாரில்' நடிகர் விஜய் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டார் என்பது மட்டும் நிதர்சனம்!
விஜய் பிரசாரம் செய்ய வந்தால் 4 பக்கமும் சாலையை மூடுங்கள்: தவெக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு
விஜய் பிரசாரம் செய்ய வந்தால் 4 பக்கமும் சாலையை ஒரு மணி நேரம் மூடுங்கள் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் அளித்த ஒரு புகார் மனுவை அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுன் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் அவரது சார்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை அளித்தோம். பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தபிறகு, பெரம்பூர் காவல்துறை அங்குள்ள ரோடுகளை பிளாக் செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவரை பேச வைத்திருக்க வேண்டும். பெரம்பூரில் இருந்து கொளத்தூரில் காவல்துறை அனுமதி கொடுத்த இடத்திற்கு நாங்கள் போவதற்குள், அளவுக்கு அதிகமான பேருந்துகளை விட்டார்கள். கொளத்தூரில் எந்த காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் சுத்தமாக இல்லை.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிற இடத்தில் காவல் படை பாதுகாப்பு இல்லை. எங்கள் தலைவர் பிரசாரத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே காவல் துறை எந்த இடத்துக்கும் அனுமதி கொடுப்பதில்லை. திருச்சியில் விஜய் வேட்புமனு தாக்கல் முடித்துவிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சாலை வழியாக மக்களைச் சந்திக்கிறார், பேச இருக்கிறார். அதற்கு தமிழ்நாடு முழுவதும் விஜய் பாதுகாப்புக்கும் அவரை பார்க்க வரும் மக்கள் பாதுகாப்புக்கும் காவல் துறை தான் பொறுப்பு. விஜய் வரும்போது அந்த சாலையை ஒரு மணி நேரம் மூட வேண்டும் என்று கேட்டிருக்கிறோம் கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சொல்லி இருக்கிறார். மற்ற கட்சி மாநாட்டில் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வருகிறார்கள். ஆனால் எங்கள் கூட்டத்துக்கு அப்படி அல்ல. கொளத்தூரில்கூட 200 பேருக்கு மேல் கூப்பிடாதீர்கள் என்று சொல்லி இருந்தோம். ஆனால் ரோட்டில் வந்து பேசினால் என்ன பிரச்னை வரும் என்று நீங்களே பார்த்திருப்பீர்கள். திடீர்னு பெண்கள் எங்கிருந்தோ ஓடி வருகிறார்கள். எங்களுக்கே, எங்கு இருந்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. அதனால், அங்குள்ள 4 சாலையையும் பிளாக் பண்ணி நிப்பாட்டினால், அந்த கூட்டம் ஒரே இடத்தில் ஜாம் ஆகாது. இதைத்தான் நாங்கள் அப்போதிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.
ஜெயலலிதா இருக்கும் வரைதான் அதிமுக
திமுகவின் முதன்மை எதிரியாக இருக்கிற அதிமுகவினர் எளிமையாக பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், தவெகவுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி பிரச்னை இருக்கிறது? திமுகவின் முதன்மை எதிரி அதிமுக என்று நீங்கள் நினைக்கிறது, ஜெயலலிதா இருக்கிற வரைக்கும் தான். ஜெயலலிதா எப்போது இறந்தாரோ அப்போதே அது போய்விட்டது. அதிமுக 3 தேர்தல் இல்ல.10 தேர்தலுக்கு மேல் தோல்வியுற்றது.
இன்றைக்கு மு.க.ஸ்டாலினுக்கு ஒரு எளிமையான எதிரினயாக எடப்பாடி கே. பழனிசாமி இருந்தால் போதும் என்று, அவர்கள் பிரச்சாரம் மிக எளிமையாகவே போயிட்டு இருக்காங்க. ஆனால் இன்னைக்கு கிரவுண்டில் போட்டி தவெகவுக்கும் திமுகவுக்கும்தான். அதனால்தான் எங்களுக்கு கடுமையான அழுத்தங்கள். திமுக - தவெக என்கிற சண்டை தொடங்கி விட்டது. அந்தச் சண்டையில் நாங்கள் பிரசாரம் பண்ணக்கூடாதுன்னு அழுத்தம் கொடுக்கிறார்கள் என ஆதவ் கூறினார்.
டிஜிபி, கமிஷனர்கள், உளவுத்துறை அதிகாரியை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள் என்ற அவர்கள் கோரிக்கை நிறைவேறியது
வில்லிவாக்கத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தின்போது பக்கத்தில் இருக்கும் ஒரு மேன்ஷனில் இருந்த இரண்டு பேர் பாட்டிலை வைத்து அடித்து, ஒரு பெண் முட்டியில் பட்டு அவர் மயக்கம் அடைந்து, அட்மிட் பண்ணியிருக்காங்க. மிகப்பெரிய போராட்டம் பண்ணுவோம் என்று நாங்கள் சொன்னபிறகு காவல்துறை கைது செய்துள்ளனர். அந்த அறையில் 4, 5 பாட்டிலை உடைத்து ஏற்கனவே வைத்திருந்தார்கள். இந்த பிரச்னையை திட்டமிட்டு செய்துள்ளதாக ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் புகாராக கொடுத்துள்ளோம்.தேர்தல் முடிவுகள்
இப்போது காவல்துறையை நாங்கள் நம்பவில்லை. சென்னை போலீஸ் கமிஷனரை முதலில் வேறு மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும். உளவுதுறை ஏடிஜிபி ரேங்கில் இருப்பவர்களை வேறு மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும். டிஜிபி, ஆயதப்படை ஏடிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரையும் மாற்ற வேண்டும். இதையெல்லாம் எங்கள் கோரிக்கையாக தேர்தல் அதிகாரியிடம் சொல்லி இருக்கிறோம் என ஆதவ் அர்ஜுனா கூறினார்.













































கருத்துகள்